← Back to list
கண்ணீரில் மூழ்க்க வைத்த 'திக்கிரி' !
Sep 26, 2019
இலங்கையில் கிட்டத்தட்ட 70 ஆண்டுகளாக அடிமையாக நடத்தப்பட்ட பெண் யானை தான் இந்த திக்கிரி.
உடல் மெலிந்து, எலும்பும் தோலுமாக மிகவும் பலவீனமான நிலையில் இருந்த திக்கிரி யானையின் புகைப்படங்கள் அண்மையில் சமூக வலைத்தளங்களில் பரவி, உலக விலங்கின ஆர்வலர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
Photo Credit: Metro
அந்த யானையின் நிலைக் கண்டு ஆத்திரமடைந்த விலங்கின ஆர்வலர்கள், அதன் பாதுகாப்புக்காக குரல் எழுப்பத் தொடங்கினர்.
உடல் நிலை மோசமடைந்த நிலையிலும், இலங்கை கண்டியில் வழக்கமாக நடைபெறும் கோவில் திருவிழா ஊர்வலத்தில் திக்கிரியை நடக்க விட்டு, அதனருகில் பட்டாசுகளை கொளுத்திப் போட்டு அட்டகாசம் செய்த தரப்பினரையும் விலங்கின ஆர்வலர்கள் சாடியிருந்தனர்.
Photo Credit: Metro
இனிமேல் கோவில் திருவிழாக்களில் திக்கிரியை பயன்படுத்தக்கூடாது என்றும் அவர்கள் கண்டக் குரல் எழுப்பினர்.
குரல் கொடுத்த அமைப்புகளில் தாய்லாந்தைச் சேர்ந்த 'Save Elephant' என்ற அறக்கட்டளையும் அடங்கும்.
இந்நிலையில், நேற்று முன் தினம் உடல் நிலைக் குன்றிய நிலையில் திக்கிரி மரணமடைந்த சம்பவம் விலங்கின ஆர்வலர்களுக்கு ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தியது.
Photo Credit: The Sun
திக்கிரியின் மரணத்தை அடுத்து, விலங்குகள் பாதுகாப்புச் சட்டம் மேலும் கடுமையாக்கப்பட வேண்டும் என பிரபல PETA அமைப்பு உள்ளிட்ட இதர ஆர்வலர்கள் மீண்டும் வலியுறுத்தியிருக்கின்றனர்.
Tikkiri-க்காக உலகம் முழுவதும் உள்ள விலங்கின ஆர்வலர்கள், RIP Tikiri, Save Elephant, Be Kind To Animals போன்ற hashtag-குகளையும் சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து பதிவிட்டு வருகின்றனர்.
திக்கிரி, இப்படி ஒரு நிலைமை வந்தது உனக்கே கடைசியாக இருக்கட்டும்! மன்னித்து விடு......
Video Credit: http://www.adaderana.lk/
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather