Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

உலகின் உச்சியில் சிந்து!

Aug 26, 2019


                               Photo: Twitter

இந்தியப் பூப்பந்து தாரகை PV சிந்து உலகப் பட்டத்தை வென்று வரலாறு படைத்துள்ளார்!

சுவிட்சலாந்து Basel-லில் நடைபெற்ற உலகப் பூப்பந்து போட்டியின் மகளிருக்கான ஒற்றையர் பிரிவு இறுதியாட்டத்தில், சிந்து, ஜப்பானிய வீராங்கனை Nozomi Okuhara-வை ஏறக்குறைய அரை மணி நேரத்தில், நேரடி செட்களில் தோற்கடித்தார்.

இதன் வழி உலகப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்றப் பெருமையையும் 24 வயது சிந்து பெறுகின்றார்.

Photo: Twitter

இதனிடையே, தனது வெற்றி பல ஆண்டுகள் காத்திருப்புக்குப் பின் கிடைத்த பலன் என வர்ணித்துள்ளார்.

வெற்றிப் பெற்ற அத்தருணம் வாழ்நாளில் மறக்க முடியாத ஒன்று என்றும் அவர் கூறினார்.

தனது இவ்வெற்றியை, போட்டி தினத்தில் பிறந்தநாள் கொண்டாடிய தனது அம்மாவுக்கு பரிசாக சமர்ப்பணம் செய்வதாகவும் சிந்து தெரிவித்தார்.

Photo: OrissaPOST 

2016 Rio ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கத்தை நழுவ விட்டவரான சிந்து, உலகப் போட்டியில் ஏற்கனவே 2 வெள்ளி, 2 வெண்கலப் பதக்கங்களை வைத்துள்ளார்.

அவை, 2013 Copenhagen (வெண்கலம்), 2014 Guangshou (வெண்கலம்), 2017 Glasgow (வெள்ளி), 2018 Nanjing (வெள்ளி) ஆகியவையாகும்.

சிந்துவின் வரலாற்று வெற்றிக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர், சக வீராங்கனை சைனா நேவால், டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா உள்ளிட்ட பிரபலங்கள் சிந்துவை Twitter-ரில் பாராட்டியுள்ளனர்.


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather