← Back to list
ஆரஞ்சுப் பழத் தோலில் புத்தாக்கம்!
Jun 28, 2019
ஆரஞ்சுப் பழம் என்றால் உடனே நம் நினைவுக்கு வருவது சீனப் புத்தாண்டுதான்!
அக்காலக்கட்டத்தில் அதிகமான ஆரஞ்சுப் பழத் தோல்கள் வீசப்படுகின்றன.
அந்த தோல்களைப் பயன்படுத்தி, மூன்று புத்தாக்கப் படைப்புகளை உருவாக்கி, அனைத்துலக போட்டியில் அதற்காக தங்கப் பதக்கமும் வென்றுள்ளனர் நமது தமிழ்ப்பள்ளி மாணவர்கள்.
அண்மையில் இந்தோனிசியா Baliயில் நடைபெற்ற 2019 அனைத்துலக அறிவியல் புத்தாக்கப் போட்டியில், பினாங்கு Butterworthதிலுள்ள பிறைத் தோட்ட தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு சுற்றுச் சூழல் பிரிவில் அத்தங்கப் பதக்கம் கிடைத்துள்ளது.
ஜெர்மனி, தாய்லாந்து, சிங்கப்பூர் உட்பட 15 நாடுகள் பங்கேற்றிருந்த அப்போட்டியில், சுற்றுச்சுழல் பிரிவில் ஹரேஷ் ராஜ், சித்தி சுபைடா, அர்ச்சனா, தேவதர்ஷினி ஆகிய அம்மாணவர்கள் தங்கப் பதக்கம் வென்றனர்.
புத்தாக்கப் படைப்புகள் உருவான கதை....
ஆரஞ்சுப் பழத் தோல்கள் பற்றி வகுப்பறையில் தொடங்கிய கலந்துரையாடலே பின்னர் தாங்கள் இப்புத்தாக்கம் பற்றிய முதல் ஆய்வை தொடங்க காரணமாக இருந்ததாக கூறுகிறார், அப்போட்டிக்கான பொறுப்பாசிரியர்களில் ஒருவரான வினோதினி சுப்பரமணியம்.
அதனை அடிப்படையாக வைத்து, பின்னர் பள்ளி ஆசிரியர்களுடன் ஒத்துழைத்து, மூன்று பொருட்களை உருவாக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
அதன் பலனாக, ஆரஞ்சுப் பழத் தோலைப் பயன்படுத்தி 'Odour Remover Sachets' எனப்படும் துர்நாற்றத்தை ஈர்க்ககூடிய சிறுப் பேக்கெட்டுகள், பற்களை வெண்மையாக்கும் தூள் ஆகியப் பொருட்களை தாங்கள் கண்டுப்பிடித்ததாக ஆசிரிய வினோதினி கூறினார்.
பற்களை வெண்மையாக்கும் தூளை, சிலரிடம் கொடுத்து அதனை பயன்படுத்தச் சொல்லி, அதிலிருந்து தங்களுக்கு நல்ல கருத்துகள் கிடைத்ததாகவும் ஆசிரியர் குறிப்பிட்டார்.
வெற்றிப் பெற்ற தருணம்......
இந்தோனிசியாவில் அப்போட்டிக்கான சுற்றுச் சூழல் பிரிவில் பிறைத் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் பெயர் அறிவிக்கப்பட்ட அந்த இனிய தருணத்தை நினைத்துப் பார்க்கும் போது இன்றும் மனதில் மகிழ்ச்சிப் பொங்குவதாக ஆசிரியர் கூறினார்.
அந்நாள், போட்டிக்காக உழைத்த ஆசிரியர்கள், மாணவர்கள் என அனைவருக்கும் வாழ்நாளில் மறக்க முடியாத ஒன்று என்றாரவர்.
இவ்வேளையில், பள்ளி தலைமையாசிரியர், ஆசிரியர்கள் புவனேஸ்வரி நெடுமாறன், ஜோதி மாரியம்மாள், கற்பகவள்ளி, பெற்றோர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்க உறுப்பினர்கள் என பல்வேறு தரப்பினரின் ஒத்துழைப்பினால்தான் இவ்வெற்றி தங்களுக்கு சாத்தியமானது என்றும் ஆசிரியர் குறிப்பிட்டார்.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather