← Back to list
ஹிந்தி மொழி திணிக்கப்படாது !
Jun 03, 2019
இந்தியாவில் எந்த மாநிலத்தின் மீதும் ஹிந்தி மொழி திணிக்கப்படாது என அந்நாட்டரசு உத்தரவாதம் அளித்திருக்கிறது!
ஹிந்தி பேசாத மாநிலங்களில் பள்ளி மாணவர்கள் மீது ஹிந்தியைக் கட்டாயப் பாடமாகத் திணிக்க 2019 தேசியக் கல்விக் கொள்கை வரைவு பரிந்துரைத்திருப்பது, தென் மாநிலங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதை அடுத்து, தமிழ்ப் பேசும் அமைச்சர்கள் இருவர் அவ்வாறு உறுதி அளித்திருக்கின்றனர்.
பிரதமர் நரேந்திர மோடியின் புதிய அமைச்சரவையைச் சேர்ந்த நிர்மலா சீதாராமனும், ஜெய்சங்கர் சுப்ரமணியமும் தங்களது Twitter பக்கத்தில் அது குறித்து தமிழியேலே பதிவிட்டு பதற்றத்தை தணிக்க முற்பட்டுள்ளனர்.
ஹிந்தியைக் கட்டாயமாக்கும் அம்மும்மொழிக் கொள்கை வெறும் பரிந்துரை மட்டுமே; அதனை நன்காராய்ந்து, மக்களின் கருத்துகளைப் பெற்றே இறுதி முடிவு எடுக்கப்படுமென அவ்விருவரும் கூறினர்.அம்முயற்சி இந்தி மொழித் திணிப்பே எனக் கூறி தமிழக அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு கிளப்பிய வேளை, Twitter-ரிலும் பல்வேறு Hashtag-கள் தொடங்கப்பட்டுள்ளன.
ஹிந்தியை கட்டாயப் பாடமாக்கும் விவகாரம் தென்னிந்திய பள்ளிகளில் குறிப்பாக தமிழகத்தில் காலம் தொட்டே உணர்ச்சிப்பூர்வமான ஒன்றாகவே பார்க்கப்படுகிறது;
1937-ஆம் ஆண்டு முதல் 1940- ஆண்டு வரையிலும், பின்னர் 1965-லும் என அங்கு பேரளவிலான மொழிப்போர் வெடித்தது.
இதையடுத்து அப்போதையப் பிரதமர் Jawaharlal Nehru, ஹிந்தி பேசாத மாநில மக்கள் விரும்பும் வரை, அவர்கள் மீது ஹிந்தி திணிக்கப்படாது;
மாறாக தாய்மொழியும், இணைப்பு மொழியாக ஆங்கிலமும், இருமொழிக் கொள்கைகளாக தொடரும் என அறிவித்து உத்தரவிட்டார்.
இத்தனை ஆண்டுகளுக்கு பிறகு இப்போது மற்றுமோர் மொழிப் போர் வெடிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather