← Back to list
இனவாதம் என்ற பேச்சுக்கே இடமில்லை!
Apr 26, 2019
Matriculation வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கை இவ்வாண்டு 40 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ள அதே சமயம், அதன் இட ஒதுக்கீடு 90 விழுக்காடு பூமிபுத்ராக்களுக்கும், 10 விழுக்காடு பூமிபுத்ரா அல்லாதோருக்கும் என நிலை நிறுத்தப்பட்டிருப்பதானது, தற்காலிகமானதே!
இந்திய சமூகத்துக்கான அரசாங்கத்தின் வாக்குறுதியைக் காப்பாற்றும் அதே வேளை, மலாய்க்காரர்களின் அச்சத்தைக் களையவும் எடுக்கப்பட்ட முடிவாகவே அதனைத் தாம் கருதுவதாக PKR தலைவர் Datuk Seri Anwar Ibrahim சொன்னார்.
எனவே, ஒரு பதற்றமான சூழலில் எடுக்கப்பட்டுள்ள சுமூகமான தீர்வாக அதைப் பார்க்க வேண்டுமே ஒழிய, அதில் இனவாதம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்றார் அவர்.
SPM தேர்வில் மிகச் சிறந்த தேர்ச்சிப் பெற்ற ஏராளமான இந்திய மாணவர்களுக்கு matriculation வாய்ப்பு கிடைக்கவில்லை என சமூகத்தில் பெரும் அதிருப்தி எழுந்ததை அடுத்து, Pakatan Harapan அரசாங்கம் இவ்வாண்டு மாணவர் சேர்க்கையை 25 ஆயிரத்தில் இருந்து 40 ஆயிரமாக உயர்த்துவதாக அறிவித்தது.
அதே சமயம், இட ஒதுக்கீட்டை 90:10 என்ற விழுக்காட்டில் நிலை நிறுத்துவதாகவும் அறிவிக்கப்பட்டதை அடுத்து நிலவும் பலவாறான கருத்துகள் தொடர்பில் கேட்கப் பட்ட போது Port Dickson நாடாளுமன்ற உறுப்பினருமான Anwar அவ்வாறு சொன்னார்.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather