← Back to list
வெயில் போய் மழை வந்தது!
Apr 04, 2019
நாட்டில் வெப்பமும் - வறட்சியும் தணிந்து விட்டது!
ஆனால், அண்மைய இரண்டு நாட்களாக கொட்டிய மழை பல இடங்களைப் புரட்டிப் போட்டுள்ளது.
இன்னும் சில வாரங்களுக்கு, ஏறக்குறைய மே மாதம் மத்தி வரை இந்த இடியும், மழையும், பலத்த காற்றும் தொடரும் என வானிலை ஆய்வுத் துறை எச்சரித்துள்ளது.
தென்மேற்குப் பருவமழைக் காலத்தில் இருந்து வடகிழக்கு பருவமழைக் காலத்திற்கான மாற்றமே கனமழைக்கு காரணம் என்றும் அத்துறை தெரிவித்தது.
ஆலங்கட்டி மழைப் பெய்யவும், நீர் சுழற்சி ஏற்படவும் வாய்ப்பிருப்பதாக அத்துறை தெரிவித்தது.
ஆங்காங்கே திடீர் வெள்ளம் ஏற்படக்கூடும் என்பதால் பொது மக்கள் கூடுதல் கவனமுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.
குறிப்பாக, நீர் வீழ்ச்சிகளுக்கு செல்வது, வெள்ளம் ஏறும் பகுதிகள் அல்லது பெரிய மரங்களுக்கு கீழே வாகனங்களை நிறுத்துவது போன்ற நடவடிக்கைகள் குறித்து எச்சரிக்கையுடன் இருக்குமாறும் வானிலை ஆய்வுத்துறை கூறியது.
முடிந்தவரை வெளிப்புற நடவடிக்கைகளை பொது மக்கள் தவிர்த்துக் கொள்ளலாம்.
அண்மையில் தலைநகரில் கனமழையை அடுத்து ஏற்பட்ட திடீர் வெள்ளம் காரணமாக பல சாலைகளில் போக்குவரத்து நிலைக்குத்தியது.
Batu Cavesசில் இருந்து Pulau Sebang செல்லும் கொம்யூட்டர் ரயில் சேவையும் 30 நிமிடங்கள் தாமதமடைந்ததாக KTMB தெரிவித்தது.
பல இடங்களில், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் மீது மரங்கள் சாய்ந்து சேதங்கள் ஏற்பட்டது தொடர்பில் 14 புகார்கள் பெறப்பட்டன.
வானிலை ஆய்வுத் துறையின் அண்மையத் தகவல்களை தெரிந்துக் கொள்ள myCuaca செயலியைப் பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம்.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather