Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

COVID-19: சம்பவங்களை கட்டுப்படுத்த புதிய யுக்திகள் தேவை!

Jan 07, 2021


நாட்டில் அதிகரித்து வரும் தினசரி COVID-19 சம்பவங்கள் எண்ணிக்கையை கட்டுப்படுத்த சுகாதார அமைச்சு புதிய வழிமுறையை ஆராய்கின்றது!

சிவப்பு மற்றும் பச்சை மண்டலங்கள் கொண்ட மாநிலங்களில் இலக்கு வைக்கப்பட்ட, வெவ்வேறான நடவடிக்கைள் மேற்கொள்வதும் அதிலடங்கும் என சுகாதார துறை தலைமை இயக்குநர் Tan Sri Dr Noor Hisham Abdullah கூறியுள்ளார்.

நாட்டில் நேற்று ஈராயிரத்து 593 COVID-19 சம்பவங்கள் பதிவான வேளை, 13 புதிய clusterகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

அவற்றில் 10 clusterகள் வேலையிடங்களை உட்படுத்தியிருக்கின்றன.

இவ்வேளையில், நாட்டில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோர் மத்தியில் இதுவரை COVID-19 சம்பவம் எதுவும் பதிவாகவில்லை என்றும் Dr Noor Hisham சொன்னார்.

இருந்த போதிலும், துயர் துடைப்பு மையங்களில் COVID-19 மீதான SOPகளை தொடர்ந்து பின்பற்றுமாறு அவர் பொது மக்களை கேட்டுக் கொண்டார்.

வெள்ளப் பாதிப்பு குறித்த தகவல்...

நாட்டில் ஆறு மாநிலங்களில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 36 ஆயிரத்திற்கும் மேல் பதிவாகியிருக்கின்றது.

குறிப்பாக  கிழக்கு கரை மாநிலங்களில் வெள்ளம் மோசமடைந்திருக்கிறது.

பகாங்கில் 281 துயர் துடைப்பு மையங்களில், தற்போது 24 ஆயிரத்திற்கும் அதிகமானோர் தங்கியுள்ளனர்.

Kelantan மற்றும் திரங்கானுவில் தலா நான்காயிரத்திற்கும் அதிகமானோர் துயர் துடைப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

ஜொகூரில் வெள்ள நிலை தொடர்ந்து சீரடைந்து வருகின்றது.

அங்கு கிட்டதட்ட ஈராயிரத்து 377 பேர் வரை துயர் துடைப்பு மையங்களில் இருக்கின்றனர்.


Macau மோசடி கும்பலின் புதிய யுக்தி!

PDRMமின் பெயரில் போலிக் கடிதங்களைப் பயன்படுத்தி, பொது மக்களை ஏமாற்றி பணம் பறிக்கும் Macau மோசடி கும்பலின் புதிய யுக்தியை பகாங் காவல் துறை அம்பலப்படுத்தியிருக்கின்றது.

போதை பொருள் கடத்தல், பண மோசடி ஆகிய குற்றங்கள் இருப்பதாக கூறி, அக்கடிதம் வாயிலாக பொய்யான வழக்குகளைப் பதிவுச் செய்யும் மோசடிக்காரர்கள், அதில் இருந்து விடுபட வேண்டுமானால், பொது மக்கள் குறிப்பிட்ட தொகையை செலுத்த வேண்டும் எனக் கூறி, பணம் பறித்து வருவது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

EPF:  2.5 மில்லியன் விண்ணப்பங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன!

 i-Sinar திட்டத்தின் முதல் பிரிவில் பெறப்பட்ட விண்ணப்பங்களில், ஏறக்குறைய 2.5 மில்லியன் விண்ணப்பங்களை EPF அங்கீகரித்துள்ளது.

அம்முதல் கட்ட விண்ணப்பம் கடந்த டிசம்பர் 21ஆம் தேதி தொடங்கியது.

 BPN 2.0-வுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும்!

Bantuan Prihatin Nasional BPN 2.0வின், 2ஆம் கட்ட உதவிக்கான தேதியை அரசாங்கம் விரைவில் அறிவிக்கும் என, நிதி அமைச்சு கூறியிருக்கின்றது.


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather