Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

Covid-19: 1 லட்சத்து 20 ஆயிரத்தைத் தாண்டியது!

Jan 04, 2021


Covid-19 தொடர்பில் நாட்டில் புதிதாக ஆயிரத்து  741 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

சிலாங்கூரில் மிக அதிகமாக 687 சம்பவங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

மேலும் அறுவர் அக்கிருமித் தொற்றுக்குப் பலியானதை அடுத்து மொத்த மரண எண்ணிக்கை 501 ஆக அதிகரித்துள்ளது.

சபா, Kota Belud, Kampung Timbang Dayangங்கில் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை கடுமையாக்கப்படுகிறது.

நாளை முதல் 18 ஆம் தேதி வரை அது அமலில் இருக்கும்.

மலாக்காவில் Jasin மறுவாய்வு மையம் மற்றும் அதன் ஊழியர்கள் kuartersசில் EMCO இன்றுடன் முடிவுக்கு வருகிறது.  

மலேசியர்களுக்குப் போடப்படவிருக்கும் Covid-19 தடுப்பூசி நீண்ட கால அடிப்படையில் சுகாதாரக் கேடுகளை ஏற்படுத்தும் பக்க விளைவுகளைத் தராது. 

சிலருக்கு தற்காலிகமாக காய்ச்சல், அல்லது குமட்டல் உணர்வு ஏற்படலாம். 

ஆயினும் நீண்ட கால அடிப்படயிலான பாதிப்பு ஏதும் இருக்காது என அறிவியல், தொழில்நுட்ப, புத்தாக்க அமைச்சு விளக்கியது.    

அத்தடுப்பூசி நன்கு சோதனைக்கு உட்படுத்தப்பட்டு விட்டதாகவும் அதனை சுகாதார அமைச்சின் தேசிய மருந்தக கட்டுப்பாட்டுப் பிரிவு கண்காணித்து வருவதாகவும் அது கூறியது.  

Covid-19 பரவல் நாட்டின் பொருளாதாரத்தில் ஏற்படுத்தியுள்ள தாக்கமே KL-சிங்கப்பூர் அதிவிரைவு ரயில் திட்டம் கைவிடப்பட்டதற்காக காரணம்.

Covid-19னுக்குப் பிந்திய பொருளாதார மீட்சிக்காக அரசாங்கம் சில திட்டங்களின் செலவினத்தைக் குறைக்க வேண்டியிருந்ததாக பிரதமர் துறை விளக்கியது.

கைவிடப்பட்ட அத்திட்டத்தால் கொடுக்கப்பட வேண்டிய தொகைக்கான விவரங்களை சிங்கப்பூரிடம் இருந்து பெறக் காத்திருப்பதாக அது மேலும் கூறியது. 

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை மீறியதற்காக நேற்று நாடு முழுவதும் 466 பேர் கைது செய்யப்பட்டனர். 

அவர்களில் அதிகமானோர் மனமகிழ் மையங்களில் கைதானவர்கள்.

நாட்டில் ஐந்து மாநிலங்களில் வானிலை ஆய்வுத்துறை ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிற வானிலை எச்சரிக்கையை விடுத்துள்ளது.

பஹாங்கில் Jerantut, Maran, Kuantan, Pekan, Rompin, ஜொகூரில் Mersing, திரங்கானுவில் Kemaman ஆகிய பகுதிகளில் நாளை வரை இடைவிடாத மழை பெய்யலாம்.

கிளந்தான், திரங்கானுவில் Besut, Setiu, Kuala Nerus, Hulu Terengganu, Kuala Terengganu, Maran, Dungun, பஹாங்கில் Tanah Tinggi Cameron, Lipis, Raub, Bentong, Temerloh, Bera  ஜொகூரில் Segamat, Kluang, Kulai, Kota Tinggi, JB ஆகிய இடங்களில் மஞ்சள் நிற கன மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நாட்டில் ஆறு மாநிலங்களில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை இருபத்து 2 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. 

பஹாங்கில் மிக அதிகமாக 9 மாவட்டங்களில் 13 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் துயர் துடைப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 

ஜொகூர், திரங்கானு, பேரா, கிளந்தான், சிலாங்கூர் ஆகியவை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ள பிற மாநிலங்களாகும்.


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather