Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

மீண்டும் ஈரிலக்க எண்!

Jul 10, 2020


நாட்டில் Covid-19 சம்பவங்களின் எண்ணிக்கை இரண்டு இலக்க எண்ணிக்குத் திரும்பியுள்ளது.

புதிதாக 13 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

மேலும் 12 பேர் நலமடைந்துள்ளதை அடுத்து இதுவரை பூரண குணமடைந்தவர்களின் எண்ணிக்கை எண்ணாயிரத்து 511 ஆக அதிகரித்துள்ளது.

மரண எண்ணிக்கையில் மாற்றமில்லை.

மொத்த மரண எண்ணிக்கை 121 ஆகும்.

மண்டபங்கள், பள்ளிவாசல்கள், முஸ்லீம் அல்லாத வழிபாட்டுத் தளங்கள் ஆகியவற்றில் நடத்தப்படும் சமய-சமூக ஒன்று கூடல்களில் அதிகபட்சமாக 250 பேர்தான் பங்கேற்க முடியும் என்ற கட்டுப்பாடு இனி இல்லை.

தற்காப்பு அமைச்சர் Datuk Seri Ismail Sabri Yaakob அதனைத் தெரிவித்தார்.

இடங்களின் கொள்ளளவு, பரப்பளவு ஆகியவற்றைப் பொருத்து வருகையாளர்கள் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவதாக அவர் சொன்னார்.

எனினும் கூடல் இடைவெளி கட்டாயம் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என அமைச்சர் வலியுறுத்தினார்.

Karaoke மையங்கள், விளையாட்டு arkedட்டுகள், சிறார்களுக்கான உடற்பயிற்சி மையங்கள் உட்பட அனைத்து குடும்ப பொழுதுபோக்கு மையங்களும் இம்மாதம் 15 ஆம் தேதியில் இருந்து மீண்டும் செயல்பட அரசாங்கம் அனுமதி அளித்துள்ளது.

பெற்றோர்கள் மற்றும் அம்மைய நடத்துனர்களின் கருத்துகளைக் கவனத்தில் கொண்டு அம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தற்காப்பு அமைச்சு கூறியது.

நேற்று 832 மலேசியர்கள் தாயகம் திரும்பினர்.

அவர்களில் 827 பேர் தத்தம் வீடுகளில் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

ஐவர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

Covid-19 பரவலைத் தடுப்பதில் மலேசிய அரசு கள்ளக்குடியேறிகளைக் கையாண்ட விதம் குறித்து அனைத்துலக செய்தி நிறுவனம் Al-Jazeera வெளியிட்ட ஆவணப்படத்தில் நிந்தனை அம்சங்கள் இருக்கின்றன.

தேசிய காவல் படைத் தலைவர் Tan Sri Abdul Hamid Bador அவ்வாறு தெரிவித்திருக்கிறார்.

அதே சமயம் அந்த ஆவணப்படம் பொதுமக்களிடையே சினத்தை ஏற்படுத்தியிருப்பதாகவும் அவர் சொன்னார்.  

"Kita berbincang dengan pihak jabatan peguam negara, dan pihak jab.peg neg setelah meneliti kandungan dokumenteri tersebut berpendapat bahawa terdapat unsur unsur dibawah akta sultan, dibawah kanun keseksaan ya dan juga dibawah akta suruhanjaya multimedia dan komunikasi"           

இதனிடையே அந்த ஆவணப்படம் குறித்து இன்று காலை Bukit Amanனில் அறுவர் வாக்குமூலம் அளித்தனர்.

ஏழாவது சாட்சியாளி கூடிய விரைவில் வாக்குமூலம் அளிப்பார் என எதிர்பார்க்கப்படுவதாக IGP கூறினார்.

அரசு தரப்பு துணைத் தலைமை வழக்கறிஞர் Datuk Anthony Kevin Morais கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அறுவருக்கு சாகும் வரை தூக்குதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் மீதான குற்றம் ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டிருப்பதாக KL உயர் நீதிமன்ற நீதிபதி அறிவித்தார்.

2015 ஆம் ஆண்டு Kevin Morais சிலாங்கூர், Subang Jayaவில் கொலையுண்டு கிடந்தார்.

நாளை தொடங்கி அடுத்த ஒரு வாரத்திற்கான எரிபொருள் விலை அறிவிக்கப்பட்டுள்ளது.

RON95 பெட்ரோலும் RON97 பெட்ரோலும் 7 சென் அதிகரித்து லிட்டருக்கு ஒரு ரிங்கிட் 72 சென்னுக்கும் 2 ரிங்கிட் 2 சென்னுக்கும் விற்கப்படும்.

டீசல் 3 சென் உயர்ந்து லிட்டருக்கு ஒரு ரிங்கிட் 87 சென்னாகிறது.


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather