Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

பிரதமரின் ஆசிரியர் தின வாழ்த்துச் செய்தி!

May 16, 2020


மே – 16 -  ஆசிரியர் தினமான இன்று வழக்கமாக பள்ளிகளில் கொண்டாட்டம் களைக் கட்டியிருக்கும்.

ஆனால், கொரோனோ கிருமித் தொற்றுக்கு எதிரான நாட்டின் போராட்டம் நீடிக்கும் இக்காலக்கட்டத்தில், இவ்வாண்டு அக்கொண்டாட்டம் சற்று மாறுப்பட்டிருப்பதாக, 2020 ஆசிரியர் தினத்தை ஒட்டி சற்று முன் வழங்கிய தமது சிறப்புரையில் பிரதமர் குறிப்பிட்டார்.

இரு மாதங்களுக்கும் மேலாக, ஆசிரியர்கள் பள்ளிக்குச் செல்லவில்லை –  மாணவர்களையும் சந்திக்காதது அவர்களுக்கு நிச்சயம் வருத்தத்தை ஏற்படுத்தியிருக்கலாம்.

இருந்த போதிலும், கற்றல் - கற்பித்தல் நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆசிரியர்கள் எடுத்துக் கொள்ளும் சிரத்தையை கண்டிப்பாக பாராட்டியே ஆக வேண்டும் என Tan Sri Muhyiddin Yassin கூறினார்.

சில ஆசிரியர்கள் பாடங்கள் மட்டும் இன்றி, விளையாட்டுகளையும் இணையம் வழி கற்றுக் கொடுத்து வருவதை பிரதமர் குறிப்பிட்டார்.

இருந்த போதிலும், சில மாணவர்களுக்கு இணைய வசதிப் பற்றாக்குறை காரணமாக கற்றல் - கற்பித்தல் நடவடிக்கைகளை  முழுமையாக மேற்கொள்ள முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இத்தகைய மாணவர்களுக்கு உதவ ஆசிரியர்கள் பாடங்களை அவர்களது வீட்டுக்கே நேரடியாக அனுப்பும் முயற்சிகளையும் Tan Sri Muhyiddin பாராட்டினார்.

இவ்வேளையில், 2020 அனைத்துலக ஆசிரியர் விருதுக்கான இறுதிப்பட்டியலில் இடம்பெற்றுள்ள பகாங் Runchang தேசியப் பள்ளி ஆசிரியர் Samuel Isaiah  உள்ளிட்ட ஆசிரியர்களையும் பிரதமர் பாராட்டினார்.

இதனிடையே, ஏற்கனவே குறிப்பிட்டது போல பள்ளிகள் மீண்டும் திறக்கும் தகவலை, குறைந்தது 2 வாரங்களுக்கு முன்பே அரசாங்கம் அறிவிக்கும் என்றும் Tan Sri Muhyiddin கூறினார்.

சட்ட நடவடிக்கை எடுக்கப்படலாம்!

கொரோனா கிருமித் தொற்றுக்கு எளிதில் ஆளாகக் கூடிய வயதினர், குறிப்பாக சிறார்கள் மற்றும் முதியோர்களை பொது இடங்களுக்கு அழைத்துச் செல்பவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படலாம். 

பேராங்காடி உள்ளிட்ட இடம் அதிலடங்கும் என Datuk Dr Noor Hisham Abdullah தெரிவித்துள்ளார்.

இப்போதைக்கு சுகாதார அமைச்சு அறிவுரை மட்டுமே கொடுக்கின்றது; அதனை அலட்சியப்படுத்தினால், அபராதம் விதிக்கப்படலாம் அல்லது நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்படலாம் என்றாரவர்.

பொது மக்களில் இன்னும் பலர், சிறார்கள் மற்றும் வயதானவர்களை பொது இடங்களுக்கு அழைத்துச் சென்று வருவதாக வெளியான தகவல் குறித்து அவர் பேசினார்.

YouTube மங்கை – சுகு பவித்ரா!

மலேசியர்களின் மனதை கவர்ந்த, புதிய You Tube பிரபலம் சுகு பவித்ராவுக்கு பிரதமர் Tan Sri Muhyiddin Yassin-னிடம் இருந்து வாழ்த்து அட்டையும், பரிசுப் பொருட்களும் சென்று சேர்ந்துள்ளன.

மண்ணின் மைந்தன் மலேசியா நடத்திய நேரடி காணொளி அழைப்பின் போது பவித்ரா இத்தகவல்களை கூறி தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்துக் கொண்டார்.

Image: Info Sebenar

சரளமான தேசிய மொழி உரையாடல், எளிமையான சமையல் குறிப்பு ஆகியவையே பவித்ராவின் தனிச் சிறப்புகளாகும். 

தொகுப்பு: சௌரியம்மாள் ராயப்பன்


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather