← Back to list
MCO: மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கான கற்றல் – கற்பித்தல்!
Apr 21, 2020
MCO: மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு கற்றல் – கற்பித்தல் முறைகள்!
நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை MCO அமுலில் உள்ள இக்காலக்கட்டத்தில், மாற்றுத் திறனாளி மாணவர்கள் கல்வியில் பின் தங்கி விடாமல் இருப்பதையும் கல்வி அமைச்சு உறுதிச் செய்கின்றது.
உதாரணத்திற்கு கேட்கும் திறன் இல்லாத மாணவர்களுக்கு வழக்கமான Google Classroom தவிர்த்து, ஆசிரியர்கள் கையாளும் வேறு அணுகுமுறைகள் குறித்து விவரிக்கின்றார் சிலாங்கூரைச் சேர்ந்த சிறப்புக் கல்விக்கான ஆசிரியர் கௌரி ஆறுமுகம்.
சிறப்புக் கல்விக்கான ஆசிரியர் கௌரி ஆறுமுகம்
“மற்ற மாணவர்களுக்கு எப்படி பாடங்கள் கொடுக்கிறோமோ, அதே போல்தான் இவர்களுக்கும் நாம் பாடங்களை கொடுப்போம். உதாரணத்திற்கு Microsoft Word-டில் பாடம் தயார் செய்து அதனை மாணவர்களுக்கு அனுப்புவோம். அதன் பிறகு அதே பாடங்களை சைகை மொழியாக (sign language) ஒரு வீடியோ செய்து அதையும் மாணவர்களுக்கு அனுப்பி வைப்போம். ஒருவேளை அந்த மாணவர்களுக்கு எதுவும் புரியவில்லை அல்லது சந்தேகம் இருந்தால் அவர்கள் ஆசிரியர்களுக்கு வீடியோ அழைப்பை செய்வார்கள். அந்த வீடியோ அழைப்பு வாயிலாக ஆசிரியர்கள் அந்த கேள்விகளை விளக்கிக் கூறுவார்கள்.இப்படி தான் கேட்கும் திறன் இல்லாத மாணவர்களுக்கு பாடங்கள் நடத்தப்படுகின்றன” என்றார்.
இவ்வேளையில், அம்மாணவர்களின் பெற்றோர்களுக்கு அவர் இந்த ஆலோசனையை வழங்கினார்.
“இப்போது பெற்றோர்கள் வீட்டில் இருக்ககூடிய நேரத்தில் சைகை மொழியை கற்றுக் கொள்ள முயற்சிக்கலாம். அதனை பெற்றோர்கள் You Tube, முகநூல் ஆகிவற்றில் பார்த்து பழகலாம். அல்லது தங்களது பிள்ளைகளுடைய பள்ளிப் புத்தகங்களில் கூட ஆசிரியர்கள் சில அடிப்படை சைகை மொழி அடையாளாங்களை வரைந்து அதனை ஒட்டி வைத்திருப்பார்கள். அதனை பார்த்தும் பெற்றோர்கள் அம்மொழியைப் பழகிக் கொள்ளலாம்.பள்ளிப் பாடப் புத்தகத்திலும் (text book) அந்த சைகை மொழி உள்ளது. எனவே, பெற்றோர்கள் அதனை சிறுக சிறுக பழகிக் கொள்ள முயற்சிக்கலாம்” என தெரிவித்தார்.
இதன் வழி பெற்றோர்கள், தங்களது பிள்ளைகளுடனான உறவை இன்னும் அணுக்கமாக்கி, அவர்களது தேவைகளை விரைந்து அறிந்துக் கொள்ள முடியும் என்றாரவர்.
இதனிடையே, அதிக நேரம் வீட்டில் இருப்பதால், மாற்றுத் திறனாளி பிள்ளைகளை கையாள்வதில் ஒரு சில பெற்றோர்கள் சவாலை எதிர்நோக்கலாம் என்பதை மறுப்பதற்கில்லை என்றாரவர்.
குறிப்பாக, பாடங்களை கற்றுத் தருவதில் சிரமத்தை எதிர்நோக்கும் பெற்றோர்களுக்கு, ஆசிரியர் கௌரி இந்த ஆலோசனையையும் பகிர்ந்துக் கொண்டார்.
“பெற்றோர்கள் fun learning எனும் முறை, அதாவது இணையம் வழி உள்ள விளையாட்டுகள், உதாரணத்திற்கு சொற்கள் கண்டுப்பிடித்தல், கோடுகளை இணைத்தல் போன்றவற்றை பிள்ளைகளுக்கு கொடுக்கலாம். அந்த விளையாட்டுகள் முடிந்ததும் பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு பாடம் கற்றுத் தரலாம். இதன் வழி, பிள்ளைகளுக்கு படிப்பில்க் ஆர்வம் அதிகமாகும்” என்றார்.
பாடங்கள் தவிர்த்து, மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு பெற்றோர்கள் எத்தகைய வழிகாட்டுதலை வழங்கலாம் என்றும் ஆசிரியர் கௌரி விவரித்தார்.
“இந்த நீண்ட விடுமுறையில், பெற்றோர்களே ஆசிரியர்களாக மாறி விடலாம். காலை எழுந்ததும் என்ன செய்ய வேண்டும், உதாரணத்திற்கு, பல் துலக்கி, முகம் கழுவி, சுத்தமாக குளிப்பது எப்படி என்பது தொடங்கி, சொந்த துணிகளை எவ்வாறு மடிப்பது, துவைப்பது உள்ளிட்ட இதர சிறு வேலைகளையும் பெற்றோர்கள் கற்றுத் தரலாம். இந்த நடவடிக்கைகள் பள்ளிகளில் demo வடிவில் கற்றுத் தரப்படுகின்றன. ஆனாலும், தற்போது வீட்டில் உள்ள ஓய்வு நேரத்தைப் பயன்படுத்தி பெற்றோர்கள் இன்னும் ஆழமாக பிள்ளைகளுக்கு இப்பழக்க வழக்கங்களை கற்றுத் தரலாம்” என்றார்.
மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கான Pengurusan Diri என்ற பள்ளி பாடத்தை அடிப்படையாக கொண்டு பெற்றோர்கள், மாணவர்களுக்கு இதனை வலியுறுத்தலாம் என ஆசிரியர் கௌரி கூறினார்.
ராகா செய்தி நடத்திய சிறப்பு நேர்காணலில் ஆசிரியர் கௌரி இத்தகவல்களை பகிர்ந்துக் கொண்டார்.
An article by: Sauriyammal Rayappan
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather