← Back to list
இந்தியாவிலுள்ள எஞ்சிய மலேசியர்கள் விரைவில் நாடு திரும்புவர்!
Apr 02, 2020
இந்தியாவில் இருந்து வெளியேற முடியாமல் தவிக்கும் மலேசியர்களை திரும்ப நாட்டிற்கு அழைத்து வர Wisma Putra தொடர் முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது.
ஆகக் கடைசி நிலவரப்படி, இந்தியாவில் சிக்கிக் கொண்டுள்ள மேலும் நூற்றுக்கணக்கான மலேசியர்கள் இன்னும் ஓரிரு நாட்களில் நாடு திரும்புவர் என எதிர்பார்க்கப்படுகின்றது.
சென்னை மற்றும் திருச்சியில் இருந்து வரும் விமானங்கள், இன்று மற்றும் ஞாயிற்றுக்கிழமை வாக்கில் மலேசியாவுக்கு பயணிக்கும் என கூறப்பட்டுள்ளது.
புது டெல்லியில் இருப்பவர்கள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நாடு திரும்பக்கூடும்.
இவ்வேளையில், இந்தியா புது டெல்லியில் சிக்கிக் கொண்டுள்ள மலேசியர்கள் +91 11 2415 9300 எண்கள் அல்லது [email protected] மின்னஞ்சல் வாயிலாக மலேசிய உயர் ஆணையத்தை தொடர்புக் கொள்ளலாம்.
சென்னை மற்றும் மும்பையில் உள்ளவர்கள் சம்பந்தப்பட்ட பேராளரகங்களை அணுகலாம்.
சென்னைக்கான பேராளரக அலுவலக எண் (91 44)2433 4434/35/36 மற்றும் மின்னஞ்சல் முகவரி [email protected].
மும்பைக்கான பேராளரக அலுவலக எண் (91 44)2433 4434/35/36 மற்றும் மின்னஞ்சல் முகவரி [email protected].
மலேசியாவில் நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு அமுலில் உள்ள போதிலும், வெளிநாடுகளில் உள்ள மலேசியர்கள் நாடு திரும்புவதில் எந்த பிரச்னையும் இல்லை.
ஆனால், அவ்வாறு நாடு திரும்பியவர்கள் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என அரசாங்கம் இதற்கு முன் அறிவித்திருந்தது.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather