Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

COVID-19: SOPயை கைவிட வேண்டாம்!

Jan 08, 2021


நாட்டில் தினசரிப் பதிவாகும் COVID-19 சம்பவங்கள் எண்ணிக்கை மூவாயிரத்திற்கும் மேல் அதிகரித்திருப்பதற்கு, மக்களிடையே சுயக் கட்டுப்பாடுகள் குறைந்திருப்பதும் ஒரு காரணம் என்கிறார், மலேசிய மருத்துவச் சங்கத் தலைவர் பேராசிரியர் Datuk Dr M Subramaniam.

இந்த எண்ணிக்கை அதிகரிப்பு தொடருமா என்ற கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்தார்.

COVID-19 முதலில் பரவிய சீனாவில் கூட அத்தொற்று கட்டுப்பாட்டுக்குள் இருக்கின்றது.

அதற்கு அந்நாட்டு மக்களின் கட்டொழுங்கும் காரணம் என்று Dr Subramaniam குறிப்பிட்டார்.

மேலும் கொரோனா தடுப்பூசி வருவதால் மக்கள் சுதந்திரமாக நடமாடலாம் என அர்த்தமாகது என சொன்னார்.

COVID-19 கிருமித் தொற்றின் அடிப்படை தீவிரம் R-nought 1.2ஆக அதிகரித்தால்மார்ச் மாத மத்தியில் நாட்டில் அச்சம்பவங்கள் தினசரி எண்ணிக்கை எட்டாயிரம் வரை அதிகரிக்கலாம் என சுகாதார துறை தலைமை இயக்குநர்  Tan Sri Dr Noor Hisham Abdullah முன்னதாக கூறியிருந்தார்.

நேற்று ஆக அதிகமாக ஆயிரத்திற்கும் அதிகமான சம்பவங்கள் ஜொகூரில் பதிவாகின.

அதற்கடுத்து சிலாங்கூரில் 706 சம்பவங்களும், சபாவில் 493 சம்பவங்களும் அடையாளம் காணப்பட்டுள்ளன.

நேற்று ஈராயிரத்திற்கும் அதிகமானோர் அத்தொற்றில் இருந்து முழுமையாக குணமடைந்தனர்.

இன்னும் 25 ஆயிரத்திற்கும் அதிகாமனோர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

சரவாக் செல்லும் ஆசிரியர்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள்!

தீபகற்பம், சபா மற்றும் Labuanனில் இருந்து சரவாக்கிற்கு திரும்பும் ஆசிரியர்கள், கட்டாயம் 10 நாட்கள் தனிமைப்படுத்துதலை மேற்கொள்ள வேண்டும் என அம்மாநிலம் அறிவித்துள்ளது.

சரவாக் சென்றைடந்ததும் ஆசிரியர்களுக்கு COVID-19 பரிசோதனை செய்யப்படும்.

பின்னர், தனிமைப்படுத்திக் கொள்ளும் அவகாசம் முடிவதற்கு இரு நாட்களுக்கு முன்பாக மீண்டும் அவர்கள் ஒருமுறை பரிசோதிக்கப்படுவார்கள் என சரவாக் கூறியுள்ளது.

இவ்வேளையில், சபாவில் ஏறக்குறைய 21 மாவட்டங்கள் சிவப்பு மண்டலப் பட்டியலில் இருக்கின்றன.

தேர்வுகள் தொடரப்பட வேண்டும்!

ஒத்தி வைக்கப்பட்ட 2020 பொதுத் தேர்வுகள், அட்டவணைப்படி தொடரப்பட வேண்டும் என, கல்விக்கான பெற்றோர் நடவடிக்கை குழு PAGE கூறியிருக்கின்றது.

அப்பரீட்சைகள் ரத்துச் செய்யப்படக்கூடாது என PAGEஜின் கௌரவச் செயலாளர் Tunku Munawirah Putra கருதுகின்றார்.

"perhaps consideration should be given to reduce the number of subjects to the minimum. the exam subjects should be selected based on the requirement for tertiary education and the field of interest. we suggest minimum subjects to be at 5, made of BM, English, Maths, and 2 chosen subjects"

அடுத்த மாதம் நடைபெற திட்டமிடப்பட்டுள்ள 2020 SPM தேர்வு ரத்துச் செய்யப்பட வேண்டும் என முன்வைக்கப்பட்டுள்ள சில கோரிக்கைகள் தொடர்பில் அவர் கருத்துரைத்தார்.

கிழக்கு கரை மாநிலங்களில் மோசமடையும் வெள்ளம்!

கிழக்கு கரை மாநிலங்களில் வெள்ள நிலவரம் தொடர்ந்து மோசமடைந்து வருகின்றது.

பகாங்கில் தான் 27 ஆயிரத்திற்கும் அதிகமானோர் துயர் துடைப்பு மையங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

திரங்கானுவில் கிட்டத்தட்ட 12 ஆயிரம் பேரும், Kelantanனில் ஏறக்குறைய ஆறாயிரம் பேரும் வெள்ளத்தில் பாதிக்கபட்டுள்ளனர்.

ஜொகூரில் வெள்ள நிலைமை தொடர்ந்து சீரடைந்து வருகின்றது; 

அம்மாநிலத்தில், ஆயிரத்து 400 பேர் மட்டுமே துயர் துடைப்பு மையங்களில் தங்கியுள்ளனர்.

கனமழை நீடிக்கும்!

நாட்டின் சில மாநிலங்களில் அடுத்த வாரம் செவ்வாய்கிழமை வரை கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

திரங்கானுவில், Dungun மற்றும் Kemaman, பகாங்கில் கேமரன் மலை, Lipis, Raub, Jerantut, Bento ng, Temerloh, Maran, ஜொகூரில் Tangkak, Muar, Batu Pahat, Kluang, Pontian, Kulai மற்றும் JB ஆகியவை அதிலடங்கும்.


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather