← Back to list
புத்தாண்டு வரவேற்புக் கொண்டாட்டங்களுக்கு அனுமதி இல்லை!
Dec 31, 2020
அடுத்தாண்டு பள்ளிகளும் பல்கலைக்கழகங்களும் மீண்டும் திறக்கப்பட்டதும் Covid-19 சம்பவங்களின் எண்ணிக்கை சற்று உயரலாம்.
ஆயினும் நிர்ணயிக்கப்பட்டுள்ள தர செயல்பாட்டு நடைமுறைகளைச் சரிவரப் பின்பற்றினால், கல்வித்துறை பாதுகாப்பாகச் செயல்பட முடியும் என மலேசிய பொது சுகாதார மருத்துவர்கள் சங்கத் தலைவர் Datuk Dr Zainal Ariffin Omar கருத்துரைத்தார்.
“Apa yang perlu ialah pemantauan yang berterusan, pendidikan SOP yang ketat di kalangan komuniti mereka, dan mengadakan pengasingan bagi kes-kes yang dikenalpasti.”
அதே வேளை, சிறார்கள் Covid-19னால் பாதிக்கப்பட்டு மோசமான விளைவுகளுக்கு ஆளாவது குறைவுதான் என அவர் மேலும் சொன்னார்.
இன்றிரவு புத்தாண்டு வரவேற்புக் கொண்டாட்டங்களை நடத்த அரச மலேசிய காவல் துறை எந்த பெர்மிட் அனுமதியும் வழங்கவில்லை.
வான வேடிக்கைகளை நடத்த விண்ணப்பங்கள் பெறப்பட்டாலும், அதற்கும் அனுமதி கொடுக்கப்படவில்லை என தேசிய காவல் படைத் தலைவர் Utusanனிடம் தெரிவித்தார்.
Covid-19 பரவலைக் கருத்தில் கொண்டு புத்தாண்டுக் கொண்டாட்டங்களை நடத்தத் தடை விதிக்கப்படுவதாக அரசாங்கம் இதற்கு முன் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
சிலாங்கூரில் Banting பொதுச் சந்தை மூடப்படுவதற்கு SOPக்களைத் தாங்கள் முறையாகப் பின்பற்றாததே காரணம் எனக் கூறப்படுவதை Kuala Langat நகராண்மைக் கழகம் மறுத்துள்ளது.
அச்சந்தை உட்பட அனைத்து பொதுச் சந்தைகளிலும் வணிகர்கள், பணியாளர்கள், வாடிக்கையாளர்கள் ஆகியோரின் உடல் வெப்பத்தைப் பரிசோதிப்பது, கிருமி நாசினி திரவத்தைத் தயார்படுத்தி வைப்பது, தனிமனித இடைவெளியை அமல்படுத்துவது உள்ளிட்ட SOPக்கள் முழுமையாகக் கடைப்பிடிக்கப்படுவதாக அது தெளிவுபடுத்தியது.
SOP மீறப்பட்டதாகக் கூறி Banting பொதுச் சந்தை கடந்த செவ்வாய்க்கிழமையில் இருந்து ஜனவரி 7 ஆம் தேதி வரை மூடப்பட்டுள்ளது குறிபிடத்தக்கது.
நெகிரி செம்பிலான், Tampin மருத்துவமனையில் இருந்து தப்பியோடியிருக்கும் Covid-19 நோயாளி ஒருவர் தேடப்பட்டு வருகிறார்.
முன்னாள் கைதியுமான அந்நபர் கடந்த இரு தினங்களுக்கு முன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக காவல் துறை கூறியது.
சிலாங்கூர், Shah Alamமில் உணவகமொன்றைச் சேர்ந்த பணியாளர் ஒருவருக்கு Covid-19 உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து சம்பந்தப்பட்ட உணவகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
அங்கு கிருமி நாசினி தெளித்து துப்புரவு பணிகள் மேற்கொள்ளப்படவிருப்பதோடு அப்பணியாளருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களுக்கும் மருத்துவ பரிசோதனை நடத்தப்படவிருக்கிறது.
போக்குவரத்து குற்றங்கள் புரியும் மோட்டார் சைக்கிளோட்டிகளுக்கு எதிராக காவல் துறை கூடிய விரைவில் பேரளவிலான சோதனை நடவடிக்கையைத் தொடக்கவிருக்கிறது.
அதிக சக்தி வாய்ந்த மோட்டார் சைக்கிள்கள், சிறிய வகை மோட்டார் சைக்கிள்கள் குறிப்பாக சத்தத்தைக் கூட்ட வேண்டும் என்பதற்காக மாற்றியமைக்கப்படும் மோட்டார் சைக்கிள்கள் என அனைத்துமே சோதனை செய்யப்படவிருக்கிறது.
அதே சமயம் பிற வாகனமோட்டிகளுக்கு இடையூறை ஏற்படுத்தும் வகையில் கூட்டமாக மோட்டார் சைக்கிளோட்டிச் செல்வோருக்கும் குறி வைக்கப்படும் என காவல் துறை எச்சரித்தது.
சாலைகளில் காணப்படும் சிறிய குழிகளை 24 மணி நேரங்களுக்குள் சரிசெய்ய பொதுப்பணி அமைச்சு உத்தரவாதம் அளித்திருக்கிறது.
புகார் கொடுப்பவர் எவராக இருந்தாலும், பாரபட்சமின்றி உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அது தெரிவித்தது.
அண்மையில் அறிவியல், தொழில்நுட்ப, புத்தாக்க அமைச்சர் Khairy Jamaluddin சைக்கிளோட்டத்தில் ஈடுபட்டிருந்த போது குழியில் விழுந்து காயமடைந்தது குறிப்பிடத்தக்கது.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather