← Back to list
பொய்யான தகவல்களைத் தர வேண்டாம்!
Dec 28, 2020
சிகிச்சை பெறுவதற்காக மருத்துவமனை அல்லது கிளினிக்குகளுக்குச் செல்லும் போது சுகாதாரப் பணியாளர்களிடம் தங்களது உடல்நிலை குறித்து பொய்யான தகவல்களைத் தர வேண்டாம்.
சுகாதாரத் தலைமை இயக்குனர் பொதுமக்களுக்கு அதனை நினைவுறுத்தியிருக்கிறார்.
அவ்வாறு பொய்யுரைப்பதன் வழி, சம்பந்தப்பட்டவர்கள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரிடையே Covid-19 தொற்றுப் பரவல் மருட்டலை ஏற்படுத்துவதாக அவர் சொன்னார்.
Covid-19 பீடித்திருப்பதாக உண்மையைக் கூறாத நோயாளி ஒருவரால் தமக்கு அக்கிருமித் தொற்று ஏற்பட்டதாக மருத்துவர் ஒருவர் அண்மையில் தெரிவித்ததை அடுத்து Tan Sri Dr Noor Hisham Abdullah அவ்வாறு கேட்டுக் கொண்டார்.
Covid-19 கிருமித் தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்கள், ஆயினும் அதற்கான அறிகுறிகள் இல்லாதவர்கள் தத்தம் இருப்பிடங்களிலேயே தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு ஆலோசனை கூறப்படுகிறது.
சம்பந்தப்பட்டவர்களை உடனடியாக மருத்துவமனைகளுக்குக் கொண்டுச் செல்ல முடியாத சூழ்நிலையைச் சுட்டிக் காட்டி சுகாத அமைச்சு அவ்வாறு கேட்டுக் கொண்டுள்ளது.
அமைச்சு அதிகமான Covid-19 சம்பவங்களைக் கையாண்டு வருவதோடு, நோயாளிகளை மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்வதில் சிரமத்தை எதிர்நோக்கியுள்ளதாகவும் அது விளக்கியது.
ஜொகூரில் இரு பகுதிகளிலும் நெகிரி செம்பிலானில் ஓர் இடத்திலும் இன்று முதல் இரு வாரங்களுக்கு நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை கடுமையாக்கப்படுகிறது.
ஜொகூரில் JB புனர்வாழ்வு மையம் மற்றும் அதன் ஊழியர்கள் kuarters, Kota Tinggi துணை மாவட்டத்தில் Taman Desa Sejahteraவில் உள்ள Dewan Arena Segitigaவிலும் நெகிரி செம்பிலானில் Jelebu சிறைச்சாலை மற்றும் சிறைச்சாலை ஊழியர்கள் Kuartersசிலும் EMCO அமல்படுத்தப்படுகிறது.
சம்பந்தப்பட்ட பகுதிகளில் Covid-19 சம்பவங்கள் அதிகம் பதிவாகி வருவதை அடுத்து அம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
நாட்டின் சுற்றுலாத்துறையை ஆக்ககரப்படுத்த, எல்லைகளை மீண்டும் திறந்து விடுவது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருகிறது.
அதன் தொடர்பில் தற்போது சிங்கப்பூர், புருணை, கொரியா, ஜப்பான், தைவான், நியூசிலாந்து ஆகிய நாடுகளுடன் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வருவதாக சுற்றுலா, கலை, பண்பாட்டு அமைச்சு தெரிவித்தது.
அந்நாடுகள் பச்சை மண்டலப் பகுதிகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.
மற்றொரு நிலவரத்தில், பச்சை மண்டலப் பகுதிகளில் இருந்து விடுமுறைக்காக நாட்டில் பிற இடங்களுக்குச் செல்வோர், தர செயல்பாட்டு நடைமுறைகளைக் கவனமாகப் பின்பற்றுமாறு அமைச்சு சுற்றுப் பயணிகளைக் கேட்டுக் கொண்டுள்ளது.
மலேசியர்களில் 15 விழுக்காட்டினர் நாட்பட்ட சிறுநீரக உபாதைகளால் அவதியுற்று வருவது ஆய்வொன்றில் தெரிய வந்திருக்கிறது.
ஆரம்பக் கட்டத்தில் எந்த அறிகுறிகளும் வெளிப்படையாக இருக்காது என்பதால், பலர் தங்களுக்கு சிறுநீரக பாதிப்பு இருப்பதை அறிந்து கொள்ளாமல் இருப்பதாக சுகாதார அமைச்சு கூறியது.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather