← Back to list
Covid-19: ஆயிரத்து 500 சம்பவங்கள்!
Dec 28, 2020
நாட்டில் Covid-19 தொடர்பில் இன்று ஆயிரத்து 594 சம்பவங்கள் பதிவாகின!
அவற்றுள் 697 சம்பவங்கள் சிலாங்கூரில் பதிவானவை.
ஆயிரத்து 181 பேர் இன்று அத்தொற்றிலிருந்து குணமடைந்த நிலையில், மூன்று புதிய மரணங்கள் பதிவாகியுள்ளன.
____
அந்நிய தொழிலாளிகளுக்கு Covid-19 பரிசோதனையைக் கட்டாயமாக்கும் அரசாங்கத்தின் முடிவு சரியானதே!
நடப்பு சூழலில் அது நாட்டிற்குத் தேவையான ஒன்று தான் என்கிறார் மலேசிய முதலாளிமார்கள் சம்மேளனம் MEFவின் மன்ற உறுப்பினர் Christopher Raj.
எனினும், அதில் முதலாளிகள் பண நெருக்கடியை எதிர்நோக்கலாம் என தெரிவித்த அவர் அவர்களுக்கு கைக்கொடுக்கும் வகையில் அரசாங்கம் நிதியுதவி வழங்கனால் உதவியாக இருக்கும் என்றார்.
_____
2021 புத்தாண்டு வரவேற்புக் கொண்டாட்டங்களை பொது இடங்களில் நேரடியாக செய்ய விரும்பும் தனியார் நிறுவனங்கள், சுகாதார அமைச்சு, தேசிய பாதுகாப்பு மன்றம், காவல் துறை ஆகியோரின் அனுமதியைப் பெற்றிருக்க வேண்டும்!
இல்லாவிட்டால், அது சட்டவிரோதனமான நிகழ்வாகக் கருதப்படும் என DBKLலின் ஆலோசனை வாரிய உறுப்புனர் Datuk S Rajah கூறுகின்றார்.
அவ்வாறான நிகழ்வுகளைத் தவிர்த்துக் கொள்ளுமாறு பொது மக்களை அறிவுறுத்திய அவர் புத்தாண்டு வரவேற்புக் கொண்டாட்டங்களை நேரடியாக நடத்த தனியார் நிறுவனங்களிடமிருந்து தமது தரப்பு எந்த விண்ணப்பத்தையும் பெறவில்லை எனக் சொன்னார்.
______
Covid-19-னுக்கான தர செயல்பாட்டு நடைமுறை SOPக்களை மீறியதற்காக நேற்று நாடு முழுவதும் 297 பேர் கைதாகியிருக்கின்றனர்.
அவர்களில் 294 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டு, மூவர் தடுத்து வைக்கப்பட்டனர்.
______
Putrajayaவில் சைக்கிளோட்டும் நடவடிக்கையைக் காவல் துறை அணுக்கமாகக் கண்காணிக்கவிருக்கின்றது.
அண்மையில் சைக்கிளோட்டி ஒருவரை உட்படுத்திய சாலை விபத்தில் அவர் உயிரிழந்ததை அடுத்து,, அச்சம்பவம் மீண்டு நிகழாதிருப்பதை உறுதிச் செய்யும் வண்ணம் கண்காணிப்பு பலப்படுத்தப்படவிருப்பதாகக் காவல் துறை கூறியது
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather