Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

மீண்டும் ஈராயிரத்துக்கும் அதிகமான சம்பவங்கள்!

Dec 22, 2020


நாட்டில் தொடர்ச்சியாக இரண்டாவது நாளாக புதிதாக ஈராயிரத்துக்கும் அதிகமான Covid-19 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 

புதிதாக ஈராயிரத்து 62 சம்பவங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. 

சிலாங்கூரில் மீண்டும் அதிகமாக ஆயிரத்து 14 சம்பவங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. 

அடுத்து KLலில் மிக அதிகமாக 504 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. 

அக்கிருமித் தொற்றுக்கு மேலும் ஒருவர் பலியாகியிருப்பதை அடுத்து மொத்த மரண எண்ணிக்கை 439 ஆக அதிகரித்துள்ளது. 

Covid19 தடுப்பூசி மலேசியாவுக்குக் கிடைக்கப் பெற்றதும், முதல் ஆளாக பிரதமர் Tan Sri Muhyiddin Yassin அதனைப் போட்டுக் கொள்ளவிருக்கிறார்.

அத்தடுப்பூசி பாதுகாப்பானது - ஆக்ககரமானது என நாட்டு மக்களுக்கு நம்பிக்கையூட்டும் விதமாக தாம் அதற்கு முன் வருவதாக அவர்  சொன்னார்.

“Untuk meyakinkan rakyat bahawa vaksin yang diperolehi adalah selamat, dan berkesan, saya akan menjadi antara individu pertama untuk menerima suntikan vaksin covid-19. Ini akan diikuti oleh petugas barisan hadapan sebelum di berikan kepada kumpulan sasar dan iaitu kumpulan berisiko tinggi”.

Covid19 தடுப்பூசி பிப்ரவரி வாக்கில் வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சுகாதார அமைச்சின் அங்கீகாரத்தைப் பொருத்து அதன் பயன்பாடு தொடங்கும்.

அரசாங்கம் மேலும் ஒரு மருந்து தயாரிப்பு நிறுவனமான AstraZenecaவுடன் ஒப்பந்தம் செய்து கொண்டிருப்பதாக பிரதமர் கூறினார்.

அந்நிறுவனத்திடம் இருந்து நாட்டிற்குத் தேவையான தடுப்பூசிகளில் கூடுதலாக பத்து விழுக்காடு பெறப்படவிருக்கிறது.

ஏற்கனவே இரு நிறுவனங்களுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் வழி முப்பது விழுக்காட்டு தடுப்பூசிகள் கிடைக்கும் என்றாரவர். 

பிரிட்டனில் Covid-19 கிருமித் தொற்றின் புதிய வகை பிறழ்வு கண்டறியப்பட்டுள்ளதாகக் கூறப்படும் நிலையில், மலேசியாவில் அதன் பரவலைத் தடுக்க அரசாங்கம் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

அதே சமயம் துல்லித கண்காணிப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சுகாதார அமைச்சு கூறியிருக்கிறது.

நாட்டின் எல்லைகள் இன்னும் முழுமையாகத் திறக்கப்படவில்லை என்பதையும் அது சுட்டிக் கட்டியது.

அடுத்தாண்டு ஜனவரி ஒன்றாம் தேதியில் இருந்து பிரிட்டனைத் தவிர்த்து பிற அனைத்துலக நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் உள்நாட்டு உயர்க்கல்விக் கழகங்களில் மேல் படிப்பைத் தொடர அரசாங்கம் அனுமதி அளிக்கிறது.

சம்பந்தப்பட்ட மாணவர்கள் மலேசியாவுக்குப் புறப்பட மூன்று நாட்களுக்கு முன் Covid-19னுக்கான மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள வேண்டியது அவசியம் என பாதுகாப்பு விவகாரங்களுக்கான மூத்த அமைச்சர் Datuk Seri Ismail Sabri Yaakob தெரிவித்தார்.

அதே வேளை, நாடு வந்ததும் அவர்கள் கட்டாய தனிமைப்படுத்தலைப் பின்பற்றுவதோடு அதற்கான முழு செலவையும் ஏற்க வேண்டும் என அவர்  சொன்னார்.

பஹாங், Bentong Semaut Rumah Kongsiயில் கடுமையாக்கப்பட்டிருந்த நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை நாளையுடன் முடிவுக்குக் கொண்டு வரப்படவிருக்கிறது.

Apartment Ria மற்றும் Apartment Amber Court Bentongங்கில் அமலில் உள்ள EMCO அடுத்தாண்டு ஜனவரி ஆறாம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது.

Covid-19னுக்கான SOPக்களை மீறியதற்காக நேற்று நாடு முழுவதும் 122 பேர் கைது செய்யப்பட்டனர்.

அவர்களில் பெரும்பாலானோர் சுவாசக் கவசம் அணியாதவர்கள்.


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather