← Back to list
மீண்டும் ஈராயிரத்தைத் தாண்டியுள்ளது!
Dec 21, 2020
நாட்டில் Covid-19 தொடர்பில் புதிதாகப் பதிவாகியுள்ள சம்பவங்களின் எண்ணிக்கை மீண்டும் ஈராயிரத்தைத் தாண்டியுள்ளது.
புதிதாக ஈராயிரத்து 18 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
சிலாங்கூரில் மிக அதிகமாக ஆயிரத்து 204 சம்பவங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.
அடுத்து ஜொகூரில் அதிகமாக 278 சம்பவங்களும் சபாவில் 247 சம்பவங்களும் கண்டறியப்பட்டுள்ளன.
ஆயிரத்து 84 பேர் அக்கிருமித் தொற்றில் இருந்து மீண்டுள்ளனர்.
மேலும் ஒருவர் பலியாகியிருப்பதை அடுத்து மொத்த மரண எண்ணிக்கை 438 ஆக உயர்ந்துள்ளது.
Covid-19 தடுப்பூசி வாங்குவதற்கான செலவினம் 2.3 பில்லியன் ரிங்கிட்டாகும்.
3 பில்லியன் ரிங்கிட் அல்ல என அறிவியல், தொழில்நுட்ப, புத்தாக்க அமைச்சு தெரிவித்திருக்கிறது.
சில தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்களுடனான பேச்சு வார்த்தையில், 2021 பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட தொகையை விட தடுப்பூசிக்கான விலை சற்று குறைவாக இருப்பதாக அது விளக்கியது.
இரு மருந்து தயாரிப்பு நிறுவனங்களிடம் இருந்து 30 விழுக்காட்டு தடுப்பூசியை வாங்க இதுவரை இணக்கம் காணப்பட்டுள்ளது.
மேலும் சில நிறுவனங்களுடனும் பேச்சு வார்த்தை நடத்தப்படும் என அமைச்சு தெரிவித்தது.
சிலாங்கூர் கிள்ளானில் உள்ள Tengku Ampuan Rahimah மருத்துவமனை பணியாளர்களுக்கும் ஊழியர்களுக்கும் கூடிய விரைவில் Covid-19 தொற்றுக்கான மருத்துவ பரிசோதனை நடத்தப்படவிருக்கிறது.
அம்மருத்துவமனை பணியாளர்கள் மத்தியில் கிருமித் தொற்றுச் சம்பவங்கள் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து அவ்வாறு செய்யப்படுவதாக மாநில அரசு தெரிவித்தது.
நேற்று வரை Tengku Ampuan Rahimah மருத்துவமனையில் பணியாளர்கள் மற்றும் நோயாளிகளை உட்படுத்திய 143 சம்பவங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.
Covid-19னுக்கான SOPக்களைப் பின்பற்றத் தவறும் சுகாதாரப் பணியாளர்கள் மீது சுகாதார அமைச்சு கட்டொழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன் வைக்கப்பட்ட பரிந்துரைக்கு CUEPACS ஆட்சேபம் தெரிவித்திருக்கிறது.
அப்பரிந்துரையானது, சுகாதாரப் பணியாளர்கள் SOPக்களைப் பின்பற்றாமல் Covid-19 சம்பவங்கள் அதிகரிக்கக் காரணமாக இருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துவதாக CUEPACS சுட்டிக் காட்டியது.
நாட்டில் Covid-19 பரவத் தொடங்கியதில் இருந்து தங்களது கடமைகளை முறையாக ஆற்றி வரும் சுகாதாரப் பணியாளர்களுக்கு எதிராக கட்டொழுங்கு நடவடிக்கை எடுப்பது அவசியமற்றது என்றும் அது கூறியது.
மலாக்காவில் Jasin Correctional Centre மற்றும் அதன் பணியாளர்கள் quartersசில் நாளை தொடங்கி ஜனவரி நான்காம் தேதி வரை நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை கடுமையாக்கப்படுகிறது.
அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் மத்தியில் Covid-19 சம்பவங்கள் அதிகரித்துள்ளதை அடுத்து பாதுகாப்பு விவகாரங்களுக்கான மூத்த அமைச்சர் அம்முடிவை அறிவித்தார்.
Covid-19னுக்கான SOPக்களை மீறியதற்காக நேற்று நாடு முழுவதும் 239 பேர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களில் அதிகமானோர் தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்காதவர்கள்.
ஆறு மாதங்களுக்கும் குறைவான மின்சாரக் கட்டண பாக்கியைக் கொண்டுள்ளவர்களுக்கான மின் விநியோகம் துண்டிக்கப்படாது.
அடுத்தாண்டு ஜனவரி ஒன்றாம் தேதியில் இருந்து மார்ச் 31 ஆம் தேதி வரை அவ்வாறு செய்யப்படாது என எரிசக்தி, இயற்கை வள அமைச்சு தெரிவித்திருக்கிறது.
அதே சமயம் ஆறு மாதங்களுக்கு மேல் மின் கட்டண பாக்கியைக் கொண்டுள்ளவர்கள் அத்தொகையைத் தவணை முறையில் செலுத்த சம்பந்தப்பட்ட தரப்புகளுடன் கலந்து பேசலாம்.
இதனிடையே, அடுத்தாண்டுக்கான மின் கட்டண விகிதம் இவ்வாரத்தில் அறிவிக்கப்படலாம் என அமைச்சு கூறியது.
Putrajaya நாடாளுமன்ற உறுப்பினர் Datuk Seri Tengku Adnan Tengku Mansorருக்கு KL உயர் நீதிமன்றம் 12 மாதங்கள் சிறைத் தண்டனையும் 20 லட்சம் ரிங்கிட் அபராதமும் விதித்துள்ளது.
நான்காண்டுகளுக்கு முன் வர்த்தகர் ஒருவரிடம் இருந்து 20 லட்சம் ரிங்கிட் கையூட்டு வாங்கிய குற்றம் நிரூபிக்கப்பட்டதை அடுத்து அவருக்கு அத்தண்டனை வழங்கப்பட்டது.
திரங்கானுவில் வெள்ளம் சற்று சீரடைந்துள்ளது.
ஆகக் கடைசி நிலவரப்படி அம்மாநிலத்தில் நாலாயிரத்து நூற்றுக்கும் அதிகமானோர் மட்டுமே நிவாரண மையங்களில் இருக்கின்றனர்.
கிளந்தானிலும் பஹாங்கிலும் ஆயிரத்து 400க்கும் மேற்பட்டோர் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather