← Back to list
மார்ச் மாதம் மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்குத் திரும்பக்கூடும்!
Dec 20, 2020
உள்நாட்டு பல்கலைக்கழக மாணவர்கள் அடுத்தாண்டு மார்ச் மாதம் தத்தம் பல்கலைக்கழக வளாகங்களுக்குத் திரும்புவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதன் தொடர்பில் தேசிய பாதுகாப்பு மன்றத்திடம் பரிந்துரை முன் வைக்கப்பட்டுள்ளதாக உயர்க்கல்வி அமைச்சு Berita Harianனிடம் தெரிவித்தது.
MKNனிடம் இருந்து அனுமதி கிடைத்ததும் அது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என அமைச்சு மேலும் கூறியது.
Covid-19னுக்கான தடுப்பூசியைப் பெற அரசாங்கம் மூன்றாவது கருத்திணக்க ஒப்பந்தம் செய்து கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அவ்வகையில், மலேசியா பிரிட்டனைத் தளமாகக் கொண்ட மருந்து தயாரிப்பு நிறுவனமான AstraZenecaவுடன் உடன்படிக்கை செய்து கொள்ளவிருக்கிறது.
Covid-19 தடுப்பூசியைப் பெறுவது தொடர்பில் அரசாங்கம் ஏற்கனவே இரு நிறுவனங்களான Covax, Pfizer ஆகியவற்றுடனான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
அம்மூன்று நிறுவனங்களுடனான ஒப்பந்தத்தின் மூலம் 50 விழுக்காட்டு மலேசியர்களுக்கு தடுப்பூசி போட முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கிரிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறைகளை முன்னிட்டு கிளந்தானுக்குத் திரும்புவோரால் புதிய Covid-19 cluster உருவாகலாம் என மாநில சுகாதார அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
விடுமுறையைக் கழிக்க வருவோர், குறிப்பாக சிவப்பு மண்டலப் பகுதிகளில் இருந்து வருவோர் புதிய clusterகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாக அது கூறியது.
கிளந்தானில் இதுவரை ஏழு cluesterகள் பதிவாகியுள்ளன.
உள்நாட்டு வெள்ள நிலவரம்.
திரங்கானுவிலும் கிளந்தானிலும் வெள்ளம் நிலைமை இன்னும் சீரடையவில்லை.
ஆகக் கடைசி நிலவரப்படி திரங்கானுவில் ஆறாயிரத்து 600க்கும் மேற்பட்டோர் நிவாரண மையங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
கிளந்தானில் ஆயிரத்துக்கும் அதிகமானோர் தற்காலிக மையங்களில் உள்ளனர்.
திரங்கானுவிலும் பஹாங்கிலும் சில பகுதிகளில் மஞ்சள் நிற வானிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இன்றிரவு வரை சம்பந்தப்பட்ட இடங்களில் கனத்த மழை நீடிக்கலாம் என வானிலை ஆய்வுத்துறை கணித்துள்ளது.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather