← Back to list
Covid-19 : ஆயிரத்து 220 புதிய சம்பவங்கள்!
Dec 17, 2020
நாட்டில் இன்று ஆயிரத்து 220 புதிய Covid-19 சம்பவங்கள் பதிவாகியிருக்கின்றன!
சிலாங்கூரில் ஆக அதிகமாக 368 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
KLலில் 297 சம்பவங்களும் சபாவில் 184 சம்பவங்களும் பதிவாகியிருக்கின்றன.
ஆயிரத்து 297 பேர் அத்தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.
_____
கட்டுமான, விவசாயம் மற்றும் தோட்டத் தொழிற்துறைகளில் அதிகமான மலேசியர்கள் வேலை செய்ய ஊக்குவிக்கப்படுகின்றனர்.
இது அந்தந்த துறைகளில் ஏற்படும் வேலையாள் பற்றாக்குறையைக் குறைக்க உதவும் என மனித வள அமைச்சு தெரிவித்துள்ளது.
அதிகமான உள்ளூர் மக்களும் அத்துறைகளில் வேலை செய்வதை ஆதரிக்கும் வண்ணாம், சம்பந்தப்பட்ட துறையைச் சேர்ந்த முதலாளிமார்கள் அமைச்சின் MYFutureJobs பக்கத்தில் அவ்வேலைக்கான விளம்பரங்களை வெளியிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
_________
நேற்று நாடு முழுவதும் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் SOPக்களை மீறியாதற்காக 196 பேர் கைது செய்யப்பட்டு, அவர்கள் அனைவருக்கும் அபராதம் விதுக்கப்பட்டுள்ளது.
அவர்களில் அதிகமானோர் தங்களின் சுய விவரங்களைக் கொடுக்கத் தவறியதற்கும், சுவாசக் கவசம் அணியாததற்கும் கைதாகியுள்ளனர்.
_______
கடந்த ஆறாண்டுகளில் இல்லாத அளவுக்கு ஆக குறைவாக இவ்வாண்டு லங்காவி தீவுக்கு வந்துள்ள சுற்றுலப் பயணிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது.
Covid-19 காரணமாக இவ்வாண்டின் முதல் 10 மாதங்களில் சுற்றுப் பயணிகளின் வருகை 50 விழுக்காடு குறைந்து 15 லட்சம் பேர் மட்டுமே இவ்வாண்டு அங்கு வந்துள்ளனர்.
கடந்தாண்டின் இதே காலகட்டத்தில் 34 லட்சம் பேர் அத்தீவுக்கு வந்திருப்பதாக லங்காவில் மேம்பாட்டு வாரியம் LADA தெரிவித்துள்ளது.
________
மூன்றாம் கட்ட சோதனையில் இருக்கும் வேறு சில Covid-19 தடுப்பு மருந்துகளையும் வாங்குவது குறித்து அரசாங்கம் பரிசிலிக்கின்றது.
நாட்டில் 70 விழுக்காட்டினருக்கு Covid-19-னுக்கான தடுப்பூசி கிடைப்பதை உறுதிச் செய்வதற்காக, வேறு தயாரிப்பாளர்களிடமிருந்தும் தடுப்பு மருந்துகளை வாங்குவது குறித்து முடிவெடுக்கப்பட்டு வருகின்றது.
தற்போதைய நிலவரப்படி மலேசியா PFIZER மற்றும் COVAX தடுப்பூசிகளை வாங்க முன் பதிவுச் செய்துள்ளது.
_______
சிலாங்கூர், PJவில் தனது பராமரிப்பிலிருந்த மூன்று மாத குழந்தைய சித்திரவதை செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள குழந்தை பராமரிப்பாளர் ஒருவருக்கு 3500 ரிங்கிட் அபராதம், மற்றும் சமூக சேவை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather