Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

பொறுமையாக இருங்கள்! சுகாதார அமைச்சு அறிவுறுத்தல்!

Dec 17, 2020


COVID-19 பரிசோதனைக்குப் பிறகு, அத்தொற்றுப் பீடித்திருப்பது உறுதிச் செய்யப்பட்ட நபரை, மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதில் தாமதம் ஏற்பட்டால், பொறுமை காக்குமாறு சுகாதார துறை தலைமை இயக்குநர் Tan Sri Dr Noor Hisham Abdullah பொது மக்களை அறிவுறுத்தியிருக்கின்றார்.

அத்தாமதத்திற்கான சில காரணங்களை அவர் விவரித்தார்.

"ada makmal yang masih belum berintegerasi maklumat, melalui system informasi maklumat kesihatan awam. Kes kes yang positive dijalankan di makmal swasta dikehendaki untuk memaklumkan kepada PKD dan Tindakan sesuaian akan dijalankan secepat mengkin. Dan kita juga maklum ada kekangan dari segi perlaksanaan, mungkin keputusan itu lambat.”

அத்தொற்றுப் பீடித்திருப்பது உறுதிச் செய்யப்படும் சிலரை ambulance வாயிலாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல ஒரு சில நாட்கள் வரை தாமதம் நீடிப்பதாக எழுந்த புகார் தொடர்பில், அவர் பேசினார்.

நாட்டில் நேற்று ஆயிரத்து 295 COVID-19 சம்பவங்கள் பதிவான வேளை, அதில் ஆக அதிகமாக 481 சம்பவங்கள் சிலாங்கூரை உட்படுத்தியுள்ளன.

ஆயிரத்து 52 பேர் அத்தொற்றில் இருந்து முழுமையாக குணமடைந்தனர்.


அரசாங்கத்தின் முடிவு சரியானது!

COVID-19 தொற்றுக்கான தடுப்பூசி கையிருப்பை, மலேசிய மக்கள் தொகையில், 70 விழுக்காடு வரை அதிகரிக்கும் அரசாங்கத்தின் நடவடிக்கை ஏற்புடைய ஒன்று என, மலேசிய பொது மருத்துவர்கள் சங்கத்தின் தலைவர் Datuk Dr Zainal Ariffin Omar கூறுகின்றார்.

இதன் வழி, அதிகமானோர் பயனடைவார்கள் என அவர் தெரிவித்தார்.

"bukan sahaja kepada golongan yang rentat tetapi juga kepada golongan golongan lain yang perlu, kerana kos ini adalah tinggi dan ramai orang tidak akan mampu untuk mendapatkan vaksin ini di fasiliti lain selain daripada kerajaan.” 

அடுத்தாண்டு மார்ச் மாதம் வந்தடையும் என எதிர்பார்க்கப்படும் கொரோனா தடுப்பூசி கையிருப்பை விரைவுப்படுத்த முயற்சிக்குமாறும், பிரதமர் Tan Sri Muhyiddin Yassin சம்பந்தப்பட்ட அமைச்சுகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.


மருத்துவ அறிக்கையில் மோசடி! சுகாதார அமைச்சு விசாரிக்கும்!

துணை குத்தகை நிறுவனமொன்றின் தொழிலாளர்களுக்கு தாங்கள் நடத்திய COVID-19 மீதான பரிசோதனை முடிவுகளில் தில்லு முல்லு நிகழ்ந்திருப்பதாக கூறி, சிலாங்கூர் ரவாங்கில் உள்ள தனியார் கிளினிக் ஒன்று கொடுத்துள்ள புகாரை சுகாதார அமைச்சு கவனத்தில் எடுத்துக் கொண்டிருக்கிறது.

அதன் தொடர்பில், PDRM மற்றும் மனித வள அமைச்சின் ஒத்துழைப்புடன் விசாரணை மேற்கொள்ளப்படும் என சுகாதார துறை தலைமை இயக்குநர் Tan Sri Dr Noor Hisham Abdullah தெரிவித்துள்ளார்.

சம்பந்தப்பட்ட நிறுவனம் தனது சில தொழிலாளர்களை மட்டுமே COVID-19 பரிசோதனைக்கு உட்படுத்தி, அறிக்கைகளைப் பெற்றது.

பின்னர், அந்த அறிக்கைகளில் உள்ள தொழிலாளர்களின் சுயவிவரங்களை மாற்றி அமைத்து அதனையே, பரிசோதனையில் விடுப்பட்ட இதர தொழிலாளர்களுக்கும் பயன்படுத்தி, போலித்தனம் செய்திருப்பதாக அந்த கிளினிக் புகாரளித்துள்ளது.

COVID-19 பரிசோதனையே செய்துக் கொள்ளாத தொழிலாளர்களை உட்படுத்தி, அத்தகைய 20 போலி அறிக்கைகள் வெளியிடப்பட்டிருப்பதாகவும் அக்கிளினிக் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

மோசடி குறித்து கவனமாயிருங்கள்!

தங்களது சுயவிவரங்களைப் பாதுகாத்து, மோசடி கும்பல்களிடம் இருந்து தள்ளியிருக்குமாறு, EPF சந்தாதாரர்களை, நிதி அமைச்சர் வலியுறுத்தியிருக்கின்றார்.

குறிப்பாக, பணத்தை தங்களிடம் முதலீடு செய்யுமாறு கூறி, சமூக  வலைத்தளங்களில் செய்யப்படும் மோசடி கும்பல்களின் விளம்பரங்கள் குறித்து அதிக கவனமுடன் இருக்குமாறு அவர், சந்தாதாரர்களை கேட்டுக் கொண்டார்.

i-Sinar திட்டத்தின் கீழ், EPF முதல் கணக்கில் இருந்து பணத்தை மீட்பதற்கான விண்ணப்பம் டிசம்பர் 21ஆம் தேதி தொடங்கவிருப்பதை அவர் மேற்கோள் காட்டி பேசினார்.

சிறப்பு நிதி உதவி!

பேராக்கிலுள்ள அனைத்து பொதுச் சேவைத்துறை ஊழியர்களுக்கும், இம்மாத கடைசியில் ஒரு மாத சம்பளம் சிறப்பு நிதி உதவியாக வழங்கப்படும் என மாநில அரசாங்கம் அறிவித்துள்ளது.


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather