← Back to list
5 லட்சம் வேலை வாய்ப்பு!
Dec 14, 2020
COVID-19 சீற்றத்துக்கு மத்தியில் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ள போதிலும், தேசிய தொழில் மன்றம் MPN வாயிலாக 5 லட்சம் வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தி தர அரசாங்கம் முயற்சிக்கும் என பிரதமர் Tan Sri Muhyiddin Yassin தெரிவித்துள்ளார்.
கடந்தாண்டு நாட்டில் வேலை இல்லாத் திண்டாட்டம் 3 விழுக்காடு மட்டுமே இருந்த வேளை, இவ்வாண்டு அது 5.6 விழுக்காடு அதாவது ஏழு லட்சம் பேராக அதிகரித்திருப்பதாக பிரதமர் கூறினார்.
இவ்வேளையில், COVID-19 தொற்றுக்கான தடுப்பூசி கையிருப்பை மலேசிய மொத்த மக்கள் தொகையில் 70 விழுக்காடு வரை அதிகரிக்க, தாம் உத்தரவிட்டிருப்பதாக பிரதமர் Tan Sri Muhyiddin கூறியுள்ளார்.
நடப்பில் மலேசியா 30 விழுக்காட்டு தடுப்பூசி கையிருப்பை உறுதிச் செய்துள்ளது; எனினும், அது போதாது என பிரதமர் குறிப்பிட்டார்.
இதையடுத்து, அத்தடுப்பூசி கையிருப்பை அதிகரிக்கும் முயற்சிகளை மேற்கொள்ளுமாறு, சுகாதார அமைச்சு மற்றும் அறிவியல், தொழில்நுட்ப மற்றும் புத்தாக்க அமைச்சை தாம் பணித்திருப்பதாகவும் அவர் சொன்னார்.
மலேசியாவுக்கான COVID-19 தடுப்பூசி அடுத்தாண்டு மார்ச் மாதம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் Tan Sri Muhyiddin கூறினார்.
மேலும் பேசிய பிரதமர், நாட்டின் பொருளாதார நடவடிக்கையை உந்தச் செய்யவே, நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை அரசாங்கம் தளர்த்தியதற்கு காரணம் என்றும் பிரதமர் கூறியுள்ளார்.
ஆழமான ஆய்வுக்குப் பிறகு அம்முடிவு எடுக்கப்பட்டதாக அவர் சொன்னார்.
தனிமைப்படுத்தும் நாட்கள் குறைக்கப்படுகின்றன!
வெளிநாடுகளில் இருந்து மலேசியாவுக்கு திரும்புவோர் மற்றும் COVID-19 தொற்றுப் பீடித்தவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களுக்கான கட்டாய தனிமைப்படுத்துதல் 14 நாட்களில் இருந்து பத்து நாட்களாக குறைக்கப்படுகின்றது.
அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட COVID-19 தனிமைப்படுத்தும் மையங்கள் மற்றும் வீடுகளில் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள உத்தரவிடப்படுவோரையும் உட்படுத்தியிருப்பதாக சுகாதார துறை தலைமை இயக்குநர் Tan Sri Dr Noor Hisham Abdullah கூறியுள்ளார்.
நாட்டில் புதிதாக ஆயிரத்து 229 COVID-19 சம்பவங்கள் பதிவான வேளை, ஆயிரத்து 309 பேர் அத்தொற்றில் இருந்து குணமடைந்தனர்.
இந்தியாவில் தீவிரவாத தாக்குதல் குறித்து தகவல் இல்லை - IGP!
சர்ச்சைக்குரிய மத போதகர் Dr Zakir Naik, இந்தியாவில் உள்ள ஒரு பகுதியில் தீவிரவாதத் தாக்குதல் மேற்கொள்ளும் சதித் திட்டத்தில் ஈடுப்பட்டிருப்பதாக அந்நாட்டு பத்திரிகைகள் கூறியிருப்பது தொடர்பில் தாங்கள் இன்னும் எந்த அதிகாரப்பூர்வ தகவலையும் பெறவில்லை என தேசிய காவல் படைத் தலைவர் Tan Sri Abdul Hamid Bador தெரிவித்துள்ளார்.
ஆனாலும், தீவிரவாதம் தொடர்பான நிலவரங்களை PDRM தொடர்ந்து கண்காணித்து வருவதாக அவர் கூறினார்.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather