← Back to list
கிறிஸ்மஸ் நெருங்கி விட்டது! SOPகளை மறக்காதீர்கள்!
Dec 12, 2020
கிறிஸ்மஸ் நெருங்கி விட்ட நிலையில், COVID-19 மீதான SOPகளை பின்பற்றுவதில் யாரும் மெத்தனமாக இருந்து விட வேண்டாம் என உலக சுகாதார நிறுவனம் WHO வலியுறுத்தியிருக்கிறது.
பெருநாட்கள் என்பது குடும்பத்தோடு ஒன்று சேர்ந்து கொண்டாடும் விழாக் காலமாக இருந்தாலும், தற்போதைய சூழ்நிலையில் உலகையே உலுக்கி கொண்டிருக்கும் கொரோனாத் தொற்றில் இருந்து நம்மை நாமே பாதுகாக்க தடுப்பு நடவடிக்கைகள் அவசியம் என WHO தெரிவித்தது.
குறிப்பாக, கொரோனா சம்பவங்கள் அதிகம் பதிவாகியுள்ள பகுதிகளைச் சேர்ந்த மக்கள், SOPகளில் அதிக அக்கறை காட்ட வேண்டும் என்றும் அந்நிறுவனம் வலியுறுத்தியது.
அதுவே, இப்பண்டிகை காலத்தில் நமக்கும், நம்மை சுற்றியுள்ளவர்களின் பாதுகாப்புக்கும் நாம் கொடுத்துக் கொள்ளும் சிறந்த பரிசாக இருக்கும் என WHO தெரிவித்தது.
இவ்வேளையில், கடந்த ஆறு வாரங்களாக உலகில் COVID-19 தொற்று ஏற்படுத்திய மரணங்கள் 60 விழுக்காடு அதிகரித்திருப்பதை WHO சுட்டிக் காட்டியது.
பயணங்களை ஒத்தி வையுங்கள்!
சிலாங்கூரில் COVID-19 சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதால், சொந்த ஊர்களுக்கு திரும்பும் திட்டங்களை தற்போதைக்கு ஒத்தி வைக்குமாறு, மாநிலவாசிகள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
Coronavirus பரவலை தடுக்க அதுவே சிறந்த வழி என COVID-19 மீதான செயற்குழு FMTயிடம் கூறியிருக்கின்றது.
இவ்வேளையில், நாட்டில் ஆகக் கடைசியாக ஆயிரத்து 810 கொரோனா சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
அதில் ஆக அதிகமாக 45 விழுக்காடு அதாவது 829 சம்பவங்கள் சிலாங்கூரை உட்படுத்தியிருக்கின்றன.
சபாவில் புதிய கொரோனா சம்பவங்கள் இரு மடங்கு அதிகரித்தன!
நேற்று சபாவில் COVID-19 சம்பவங்கள் இரு மடங்கு அதிகரித்ததற்கு, Rumah Merah clusterருடன் தொடர்புடைய Manggatal தற்காலிக தடுப்பு மையத்தில் மேற்கொள்ளப்பட்ட பேரளவிலான கொரோனத் தொற்றுப் பரிசோதனைகளே காரணம்.
அங்கு மட்டும் 150 சம்பவங்கள் பதிவாகின.
அதே சமயம், DBajaru clusterருடன் தொடர்புடைய கொரோனா சம்பவங்களும் அதிகரித்ததாக மாநில அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நேற்று ஒருநாளில் சபாவில் 530க்கும் அதிகமான புதிய கொரோனா சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
COVID-19: வேலையிடத்துடன் தொடர்புடைய 6 cluster-கள்!
இவ்வேளையில், நாட்டில் வேலையிடத்துடன் தொடர்புடைய ஆறு புதிய COVID19 clusterகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
அவை சிலாங்கூர், கோலாலம்பூர், பினாங்கு, ஜொகூர் ஆகிய மாநிலங்களை உட்படுத்தியிருபதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.
இந்த 6 புதிய clusterகளையும் சேர்த்து நாட்டில் இதுவரை பதிவான மொத்த clusterகள் எண்ணிக்கை 407ஆக அதிகரித்துள்ளது.
அவற்றில் இன்னும் தீவிரம் குறையாமல் இருக்கும் 190 clusterகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக அமைச்சு தெரிவித்தது.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather