← Back to list
Covid-19 : முதல் முறையாக 2234 சம்பவங்கள்!
Dec 10, 2020
இதுவரை இல்லாத அளவுக்கு நாட்டில் இன்று ஆக அதிகமாக ஈராயிரத்து 234 புதிய் Covid-19 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன!
சிலாங்கூரில் தான் ஆக அதிகமாக ஆயிரத்து 428 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அதற்கு அடுத்த இடத்தில் சபா இருநூற்று 74 சம்பவங்களைக் கொண்டுள்ள்து.
மூன்று புதிய மரணங்கள் பதிவாகியுள்ளன.
புதிதாக ஆயிரத்து 112 பேர் அத்தொற்றிலிருந்து பூரண நலமடைந்துள்ளனர்.
____
நிபதனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் தர செயல்பாட்டு நடைமுறைகளை மீறியதற்காக நேற்று மட்டுமெ நாடு முழுவதும் 217 பேர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களில் 210 பேருக்கு தண்டம் விதிக்கப்பட்டு , எழுவர் தடுத்து வைக்கப்பட்டதாக தற்காப்பு அமைச்சு அறிக்கை வழி தெரிவித்துள்ளது.
பெரும்பாலானோர் சுவசக் கவசம் அணியாததற்காகக் கைதாகியுள்ளனர்.
_____
சுகாதார அமைச்சர் Dr Adham Baba வீட்டில் தம்மை தனிமை படுத்திக் கொண்டுள்ளார்.
Covid-19 தொற்று கண்ட செய்தியாளர் ஒருவருடன் நேரடி தொடர்பில் இருந்ததைத் தொடர்ந்து அவர் சுய தனிமைபடுத்துதலை மேற்கொண்டார்.
இம்மாதம் 18ஆம் தேதி வரை அவர் வீட்டிலிருந்த படியே இணையம் வாயிலாக தனது அலுவல்களை மேற்கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
_____
பினாங்கு மாநகர் மன்ற ஊழியர் ஒருவருக்கு Covid-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, Komtar கட்டிடத்தின் 15ஆவது மாடியில் இருக்கும் அதன் அலுவலகம் இன்று தொடங்கி மூன்று நாட்களுக்கு மூடப்படுகின்றது.
______
கிளாந்தான், Machangகில் கடந்த முன்றாண்டுகளாக மாணவி ஒருவரைப் பாலியல் வன்முறை செய்து வந்ததாக நம்பப்படும் சமயப்பள்ளி ஒன்றின் தலைமை ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவ்விருவரும் பழகுவது மூன்றாவது தரப்பால் கண்டறியப்பட்டு, Talian Kasihவில் கொடுக்கப்பட்ட புகாரைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட தலைமையாசிரியர் கைதானதாக Berita Harian தகவல் கூறுகின்றது.
_____
இன்றிரவு ஒன்பது மணி வரை கெடா, பினாங்கு, பேராக், பஹாங், ஜொகூர் ஆகிய மாநிலங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யலாம் என வானிலை ஆய்வுத் துறை கணித்துள்ளது.
______
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather