← Back to list
80% இடங்களில் நீர் விநியோகம் சீரடைந்தது!
Dec 09, 2020
சிலாங்கூரில், 80 விழுக்காடு அதாவது 861 இடங்களில் தண்ணீர் விநியோகம் சீரடைந்திருக்கின்றது.
எஞ்சியப் பகுதிகளுக்கான தண்ணீர் விநியோகம் விரைவில் வழக்க நிலைக்கு திரும்பும் என எதிர்பார்க்கப்படுவதாக Air Selangor கூறியது.
இவ்வேளையில், இந்த ஆகக் கடைசி நீர் மாசுபாடு பிரச்னைக்கு, சட்டவிரோதமான முறையில் இயங்கி வரும் கெளுத்தி மீன் வளர்ப்புக் குளத்தில் இருந்து வந்த கழிவு நீர் காரணம் என நம்பப்படுவதாக. மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் தெரிவித்துள்ளார்.
சிலாங்கூர் ஆற்றில் இருந்து எடுக்கப்பட்ட தண்ணீர் மாதிரியில், இறந்த மீன்களின் துர்நாற்றம் இருந்தது தொடக்க கட்ட விசாரணையில் தெரிய வந்ததாக அவர் கூறியுள்ளார்.
இதையடுத்து நடத்தப்பட்ட பரிசோதனையில், சம்பந்தப்பட்ட மீன் குளத்தில் இருந்து கழிவு நீரை வெளியேற்றி, அதனை உலர்த்தும் பணிகள் நடந்திருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட கெளுத்தி மீன் குளம், Rantau Panjang நீர் சுத்திகரிப்பு ஆலையில் இருந்து ஏறக்குறைய 8 கிலோ மீட்டர் தூரத்தில் இருப்பதும் கண்டறியப்பட்டதாக அவர் சொன்னார்.
அதிகமானோர் குணமடைந்தனர்!
நாட்டில் புதிதாகப் பதிவான COVID-19 சம்பவங்களைக் காட்டிலும், அத்தொற்றில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை மீண்டும் உயர்வாகப் பதிவாகியுள்ளது.
புதிதாக, ஆயிரத்து 12 சம்பவங்கள் பதிவான வேளை, நேற்று ஒரே நாளில் ஆயிரத்து 750 பேர் அத்தொற்றில் இருந்து முழுமையாக குணமடைந்துள்ளனர்.
ஆக அதிகமாக 417 தொற்றுகள் சிலாங்கூரை உட்படுத்தியுள்ளன; அதற்கடுத்து சபாவும், ஜொகூரும் உள்ளன.
இவ்வேளையில், கிள்ளான் பள்ளத்தாக்கில் இரு புதிய Clusterகள் அடையாளம் காணப்பட்டிருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.
அதில் ஒன்று கோலாலம்பூரை உட்படுத்திய Tapak Bina Darul clusterராகும்; அந்த clusterரில் இருந்து கொரோனாத் தொற்று Cheras, Titiwangsa, Lembah Pantai ஆகியப் பகுதிகளுக்கு பரவியிருக்கின்றது.
மற்றொன்று Seruling Cluster; அதன் சம்பவங்கள் கிள்ளான், Petaling மற்றும் Hulu Selangor வரை பரவியுள்ளன.
உலகின் சக்திவாய்ந்த 100 பெண்கள்!
Forbes சஞ்சிகையின், 2020ஆம் ஆண்டுக்கான உலகின் மிகவும் சக்திவாய்ந்த 100 பெண்கள் வரிசையில், ஜெர்மனிய Cancelor Angela Merkel, தொடர்ந்து பத்தாவது ஆண்டாக முன்னணியில் இருக்கின்றார்.
ஜெர்மனி Cancelor என்பது பிரதமர் பதவிக்கு சமமாகும்.
இவ்வேளையில் அமெரிக்க துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள Kamala Harris மூன்றாவது இடத்தில் இருக்கின்றார்.
முதல் ஐம்பது பேர் வரிசையில், வங்களாதேசத்தின் நீண்ட கால பிரதமர் Sheikh Hasina Wajed இடம்பெற்றுள்ளார்.
41ஆவது இடத்தில், இந்திய நிதி அமைச்சர் Nirmala Sitharaman உள்ளார்.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather