Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

மேலும் அதிகமானோர் Covid-19-னிலிருந்து மீண்டுள்ளனர்!

Dec 08, 2020


நாட்டில் இன்று புதிய Covid-19 சம்பவங்களைக் காட்டிலும், அத்தொற்றிலிருந்து மீண்டு வந்தவர்களின் எண்ணிக்கை கூடுதலாகப் பதிவாகியுள்ளது!

ஆயிரத்து 12 புதிய சம்பவங்கள் மட்டுமே புதிதாகப் பதிவாகியுள்ள நிலையில், ஆயிரத்து 750 பேர் பூரண நலமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

சிலாங்கூரில் தான் ஆக அதிகமாக 417 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

சபா, ஜொகூர், KL, பஹாங் அகிய மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

புதிதாக நான்கு மரணங்களும் பதிவாகியுள்ளன.

_______

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் SOP-க்களை மீறியதற்காக நேற்று நாடு முழுவதும் 182 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களின் 181 பேருக்குத் தண்டம் விதிக்கப்பட்டு ஒருவர் தடுத்து வைக்கப்பட்டதாக தற்காப்பு அமைச்சு தெரிவித்தது.

______

அடுத்தாண்டு விமான பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என மலேசிய வான் போக்குவரத்து ஆணையம் கணித்துள்ளது.

அவ்வெண்ணிக்கை 51.7 மில்லியனிலிருந்து 53.3 மில்லியனாக உயரும் என MAVCOM எதிர்ப்பார்க்கின்றது.

அடுத்தாண்டு அனைத்துலக விமான போக்குவரத்துக்கான தடையும் நீக்கப்படலாம் என்பதால் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பிருப்பதாக அது கூறியது.

_______

அடுத்தாண்டு தொடங்கி கல்வி அமைச்சின் கீழுள்ள எல்லா ஆரம்ப மற்றும் இடைநிலை பள்ளிகளிலும் மாணவர்கள் வெள்ளை அல்லது கறுப்பு நிற காலணியை அணிய அனுமதி வழங்கப்பட்டுள்ளது!

கறுப்புக் காலணிக்கு கறுப்புக் காலுரையும், வெள்ளைக் காலணிக்கு வெள்ளைக் காலுறையும் தான் போட வேண்டும் என கல்வி அமைச்சு இன்று வெளியிட்ட சுற்றறிக்கையின் வழி தெரிவித்தது.

___

இன்று இரவு 8 மணி வரை பேராக், சபா, சரவாக் ஆகிய மாநிலங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை ஆய்வுத் துறை கணித்துள்ளது.


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather