← Back to list
i-Sinar : நிபந்தனைகளில் மாற்றம் இல்லை!
Dec 08, 2020
ஊழியர் சேமநிதி வாரியத்தின் i-SINAR திட்டத்தின் கீழ் முதல் கணக்கில் இருந்து பணத்தை மீட்பதற்கான நிபந்தனைகளில் இப்போதைக்கு எந்த மாற்றங்களும் இல்லை என EPF அறிக்கை வழி தெரிவித்துள்ளது.
அத்திட்டத்தின் கீழ், சந்தாதாரகள் பணத்தை மீட்டுக் கொள்வதை எளிதாக்க, அதற்கான அனைத்து நிபந்தனைகள் அல்லது அம்சங்கள் அகற்றப்பட வேண்டும் என முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகள் குறித்து EPF விளக்கமளித்தது.
i-SINAR திட்டம் தொடர்பான அனைத்து கருத்துகள் மற்றும் பரிந்துரைகளை ஏற்றுக் கொள்வதில் பிரச்னையில்லை;
எனினும், அப்பரிந்துரைகள் முதல் அவ்வாரிய உறுப்பினர்களுடன் விவாதிக்கப்பட்டு, பின்னர் நிதி அமைச்சின் கவனத்திற்கு கொண்டுச் செல்லப்படும் என EPF தெரிவித்தது.
ஆருடம் வேண்டாம்!
உணவுக் கடைகள் மற்றும் உணவகங்களில், ஒரு மேசையில் எத்தனைப் பேர் அமரலாம் என்பதை அரசாங்கம் கூடிய விரைவில் அறிவிக்கும்!
எனவே அதுவரை அந்த எண்ணிக்கை குறித்து ஆருடங்கள் பரப்ப வேண்டாம் என, பாதுகாப்பு விவகாரங்களுக்கான மூத்த அமைச்சர் Datuk Seri Ismail Sabri Yaakob, Berita Harianனிடம் தெரிவித்துள்ளார்.
நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமுலில் உள்ள பகுதிகளில், ஒரு மேசையில் 4 பேர் அமரலாம் என்ற விதிமுறை தளர்த்தப்பட்டிருப்பதாக கூறி வெளியான தகவல் தொடர்பில் அமைச்சர் பேசினார்.
ஆயிரத்திற்கும் அதிகமானோர் குணமடைந்தனர்!
நாட்டில் நேற்று பதிவான ஆயிரத்து 600 COVID-19 சம்பவங்களில் ஆக அதிகமாக 541 சம்பவங்கள் நெகிரி செம்பிலானை உட்படுத்தியிருக்கின்றன.
அதற்கடுத்து சிலாங்கூரில் 426 சம்பவங்களும், சபாவில் 248 சம்பவங்களும் பதிவாகியுள்ளன.
நெகிரி செம்பிலானில், கொரோனாத் தொற்று அதிகரிக்க Bakti cluster காரணம் என சுகாதார துறை தலைமை இயக்குநர் கூறியுள்ளார்.
நேற்று ஆயிரத்து 33 பேர் அத்தொற்றில் இருந்து முழுமையாக குணமடைந்தனர்.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather