Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

அரசாங்கம் வழங்கிய தளர்வை அலட்சியப்படுத்த வேண்டாம்!

Dec 07, 2020


மாவட்டம் மற்றும் மாநிலம் விட்டு பயணிக்க அரசாங்கம் வழங்கியுள்ள தளர்வை பொது மக்கள் பொறுப்புடன் பயன்படுத்த வேண்டும்!

COVID-19 தாக்கம் இன்னும் முழுமையாக தணியவில்லை என்பதை மனதில் வைத்து, மலேசியர்கள் SOPகளை பொறுப்பாக பின்பற்றுவார்கள் என்றே தாம் நம்புவதாக, மலேசியப் பொது சுகாதார மருத்துவர்கள் சங்கத் தலைவர் Datuk Dr Zainal Ariffin Omar கூறுகின்றார்.

"kita berharap rakyat Malaysia tidak menyalah gunakan peluang yang diberi ini, kerana ini memerlukan tahap kawalan kendiri masing-masing, terutama mematuhi SOP supaya kita dapat memutuskan rangkaian jangkitan dengan segera.”

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை கடுமையாக்கப்பட்டுள்ள பகுதிகள் தவிர்த்து, மற்ற பகுதிகளுக்கு பயணிக்க இன்று முதல் பொது மக்களுக்கு அனுமதி வழங்கப்படுவது தொடர்பில் அவர் பேசினார்.

இவ்வேளையில், பயணக் கட்டுப்பாடுகள் தளர்வு என்பது,  COVID-19 மீதான SOPகளை இனி மீறலாம் என அர்த்தமாகாது என மலேசிய மருத்துவச் சங்கம் கூறுகின்றது.

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை கடுமையாக்கப்பட்ட பகுதிகள் தவிர்த்து மற்ற பகுதிகளுக்கான மாவட்டம் மற்றும் மாநிலங்களுக்கிடையிலான பயணங்கள்  மேற்கொள்ள இன்று முதல் அனுமதி வழங்கப்படுவது குறித்து அச்சங்கம் பேசியது.

நாட்டில் கொரோனா தொற்றுக்கு எதிரான போராட்டம் இன்னும் முடியவில்லை; எனவே, அரசாங்கம் வழங்கும் தளர்வுகளில் அலட்சியம் காட்ட வேண்டாம் என MMA கேட்டுக் கொண்டது.

மீறினால், பச்சை மண்டலங்கள் சிவப்பு மண்டலங்களாக மாறும் அபாயம் ஏற்பட்டு, அதனால், பயணத் தளர்வுகள் மீட்டுக் கொள்ளப்படும் சூழ்நிலை வரலாம் என்பதையும் MMA சுட்டிக் காட்டியது.

இதனிடையே, இத்தளர்வுகளில் மக்கம் காட்டும் கடப்பாடு குறித்து வார அறிக்கைகள் தயாரித்து, அதற்கேற்ப அமுலாக்க நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து அரசாங்கம் பரிசீலிக்கலாம் என்றும் அச்சங்கம் ஆலோசனை கூறியது.

PLUS ஆலோசனை!

இன்று முதல் மாநிலம் விட்டு மாநிலம் பயணிக்கும் பொது மக்கள், SOPகளை தொடர்ந்து கடைப்பிடிக்குமாறு PLUS நிறுவனம் கேட்டுக் கொண்டிருக்கிறது.

R&R பகுதிகளில் நின்று ஓய்வெடுக்கும் போது, சுவாசக் கவசம் அணிவது, தனிமனித இடைவெளியை கடைப்பிடிப்பது, குறிப்பாக MySejahtera செயலியைப் பயன்படுத்துவது ஆகியவற்றை மறந்து விட வேண்டாம் என PLUS அறிவுறுத்தியது.

பயணத்தை தொடங்குவதற்கு முன்பாக, Touch n Go அட்டைகளில் போதுமான தொகையை நிரப்பிக் கொள்ளுமாறும் PLUS வாகனமோட்டிகளுக்கு ஆலோசனை கூறியது.

COVID-19: 1,335 புதிய சம்பவங்கள்!

நாட்டில் ஆகக் கடைசியாக பதிவான ஆயிரத்து 335 COVID-19 சம்பவங்களில் ஏறக்குறைய 40 விழுக்காட்டு சம்பவங்கள் கிள்ளான் பள்ளத்தாக்கை உட்படுத்தியுள்ளன.

அவற்றில் ஆக அதிகமாக 337 சம்பவங்கள் சிலாங்கூரில் பதிவாகியுள்ளன.

நேற்று ஒரு நாளில், ஆயிரத்து 69 பேர் அத்தொற்றில் இருந்து முழுமையாக குணமடைந்தனர்.

இன்னும் 11 ஆயிரத்து 39 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இதனிடையே, நிர்ணயிக்கப்பட்ட SOPகளை மீறிய குற்றத்திற்காக, நேற்று ஒரு நாளில் நாடு முழுவதும் கிட்டத்தட்ட 520 பேர் கைது செய்யப்பட்டனர்.

அவர்களில் பெரும்பாலானோர் தனிமனித இடைவெளியைப் பின்பற்றத் தவறியர்கள்.

எஞ்சியவர்கள், கேளிக்கை மையங்களை உட்படுத்திய SOP மீறல் மற்றும் சுவாசக் கவசம் அணியாததற்காக பிடிப்பட்டனர்.


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather