Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

புதிதாக 8 clusterகள்!

Dec 04, 2020


நாட்டில் புதிதாகப் பதிவாகியுள்ள Covid-19 சம்பவங்களின் எண்ணிக்கை தொடர்ந்து நான்கு இலக்க எண்ணாகவே இருக்கிறது.

புதிதாக ஆயிரத்து 141 சம்பவங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

சிலாங்கூரிலும் சபாவிலும் அதிகமான சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அடுத்து KL, ஜொகூர், பினாங்கு, பேரா ஆகியவற்றில் கணிசமான எண்ணிக்கையிலான சம்பவங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

புதிய மரணம் ஏதும் இல்லாததால் மொத்த மரண எண்ணிக்கை 376 ஆகவே நீடிக்கிறது.

புதிதாக எட்டு clusterகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை, மீட்சியை நோக்கிய நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை ஆகியவற்றை மீறியதற்காக நேற்று நாடு முழுவதும் 412 பேர் கைது செய்யப்பட்டனர்.

அவர்களில் பெரும்பாலானோர் தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்காதவர்கள்.

குடும்பங்களுக்கான நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அல்லது PKPK என ஏதும் இல்லை.

அத்தகைய பொய்த் தகவலைப் பரப்ப வேண்டாம் என சுகாதார அமைச்சு பொதுமக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.

அத்தகவல் முன்னதாக சமூக வலைத் தளங்களில் பரவியிருந்தது.

கெடா, Kulim, Sungai Seluang துணை மாவட்டத்தில் உள்ள ஒன்பது வீடமைப்புப் பகுதிகளுக்கு தலா நூறு ரிங்கிட் பெறுமானமுள்ள ஏறக்குறைய ஆயிரத்து 500 உணவுக் கூடைகள் விநியோகிக்கப்பட்டுள்ளன.

அப்பகுதியில் கடந்த ஒரு வார காலமாக நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை கடுமையாக்கப்பட்டுள்ளது.

Covid-19 சம்பவங்கள் அதிகம் பதிவானதை அடுத்து அங்கு EMCO அமல்படுத்தப்பட்டுள்ளது.

கிளந்தானில் சில மாவட்டங்களில் காணப்படும் வெள்ள நிலவரத்தை, Covid-19னுக்கான SOPக்களை மீறக் காரணமாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டாம் என மாநில காவல் துறை பொதுமக்களை எச்சரித்துள்ளது.

நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை மீறுவோருக்கு எதிராக நிச்சயம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அது நினைவுறுத்தியது.

பேரா, ஈப்போவில் மளிகைக்கடைப் பணியாளரைத் தகாத வார்த்தைகளால் திட்டி அவர் மீது எச்சில் உமிழ்ந்த ஆடவருக்கு மூவாயிரம் ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 

அப்பணியாளர் நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை SOPயைப் பின்பற்றாததைச் சுட்டிக் காட்டியதை அடுத்து அவ்வாடவர் சினமுற்று அவ்வாறு செய்ததாக நம்பப்படுகிறது. 

இன்று நள்ளிரவு முதல் RON95, RON97 பெட்ரோல் விலை லிட்டருக்கு மூன்று சென் அதிகரிக்கிறது.

டீசல் 5 சென் உயர்கிறது.


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather