← Back to list
EPF: விண்ணப்பங்கள் ஆழமாக ஆராயப்படும்!
Dec 04, 2020
ஊழியர் சேமநிதி வாரியம் EPFபின் i-Sinar திட்டத்தின் கீழ் உதவி தேவைப்படுவோர் யாரும் விடுபட்டு விடாமல் இருப்பதை அவ்வாரியம் உறுதிச் செய்யும் என, EPF தலைமை அதிகாரி Tunku Alizakri Alias கூறுகின்றார்.
அத்திட்டத்தின் கீழ் நிர்ணயிக்கப்பட்டவை அனைத்தும் விதிமுறைகள் அல்ல, மாறாக, விண்ணப்பம் செய்யத் தேவையான அம்சங்கள் என்றும் அவர் சொன்னார்.
ஒவ்வொரு சந்ததாரர்களின் விண்ணப்பமும் ஆழமாக ஆராயப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
குறைந்தது 2 மாதங்களுக்கு சந்தா செலுத்தாமல் இருந்தவர்கள், வேலை இழந்தவர்கள், சம்பளமில்லா விடுப்பினால் பாதிக்கப்பட்டவர்கள், இல்லதரசசிகள் மற்றும் மொத்த வருமானத்தில் குறைந்தது 30 விழுக்காடு சரிவைச் சந்தித்தவர்கள் ஆகியோர் இந்த i-Sinar திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம் என EPF அறிவித்திருக்கிறது.
புதிதாக 1,075 கொரோனா சம்பவங்கள்!
நாட்டில் ஆகக் கடைசியாக ஆயிரத்து 75 covid19 தொற்று உறுதிப்படுத்தப்பட்ட வேளை, அவற்றில் 50 விழுக்காட்டு சம்பவங்கள் கிள்ளான் பள்ளத்தாக்கை உட்படுத்தியிருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.
நேற்று ஒரு நாளில் தொள்ளாயிரத்து 48 பேர் அத்தொற்றில் இருந்து முழுமையாக குணமடைந்தனர்.
இன்னும் 10 ஆயிரத்து 802 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
CMCO-வை நீட்டிக்க விரும்பும் பினாங்கு!
நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை வரும் ஞாயிற்றுக்கிழமையுடன் முடிவுக்கு வரவுள்ள நிலையில், பினாங்கில் சில குறிப்பிட்ட பகுதிகளிலாவது அந்த CMCO நீட்டிக்கப்பட வேண்டும் என மாநில அரசாங்கம் விரும்புகிறது.
அம்மாநிலத்தில் கொரோனா சம்பவங்கள் எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருப்பதால், அப்பரிந்துரை இன்று நடைபெறும் மாநில சிறப்பு பாதுகாப்பு செயற்குழு கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ளது.
500 ரிங்கிட் உதவி!
Terengganuவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் 500 ரிங்கிட் அவசர நிதியுதவி வழங்கப்படும்.
அம்மாநிலத்தில் இதுவரை ஏறக்குறைய ஈராயிரம் பேர் வெள்ளத் துயர் துடைப்பு மையங்களில் தங்கியுள்ளனர்.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather