← Back to list
சிலாங்கூரில் மீண்டும் அதிகமான சம்பவங்கள்!
Dec 03, 2020
Covid-19 தொடர்பில் நாட்டில் புதிதாக ஆயிரத்து 75 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
சிலாங்கூரில் மிக அதிகமாக 459 சம்பவங்களும் அடுத்து சபாவில் 310 சம்பவங்களும் அடையாளம் காணப்பட்டுள்ளன.
ஜொகூரில் 78 சம்பவங்களும் நெகிரி செம்பிலானில் 52 சம்பவங்களும் கண்டறியப்பட்டுள்ளன.
புத்ராஜெயாவிலும் பெர்லிசிலும் மட்டுமே புதிய சம்பவம் ஏதும் இல்லை.
மேலும் 11 பேர் உயிரிழந்ததை அடுத்து மொத்த மரண எண்ணிக்கை 376 ஆக உயர்ந்துள்ளது.
Covid-19 பரவலைத் தடுக்க அரசாங்கம் கடந்த மார்ச் மாதத்தில் இருந்து அக்டோபர் மாதம் வரை 1.17 பில்லியன் ரிங்கிட்டுக்கும் அதிகமான தொகையை செலவிட்டுள்ளது.
மருத்துவ உபகரணங்கள், தேவையான மருந்துகள், சுய பாதுகாப்பு ஆடைகள் ஆகியவற்றை வாங்குவது உள்ளிட்ட செலவினங்களுக்காக அத்தொகை பயன்படுத்தப்பட்டதாக சுகாதார அமைச்சு கூறியது.
அதே சமயம் அத்தொகையில் ஒரு பகுதி, அமைச்சின் முன்வரிசை பணியாளர்களுக்கு சிறப்பு அலவன்ஸ் வழங்கவும் உபயோகிக்கப்பட்டதாக அது தெரிவித்தது.
தீபகற்பத்தில் சில மாநிலங்களிலும் சபாவிலும் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை கடுமையாக்கப்படவிருப்பதாக சமூக வலைத்தளங்களில் வெளிவந்துள்ள தகவலை தேசிய பாதுகாப்பு மன்றம் மறுத்துள்ளது.
EMCO டிசம்பர் ஆறாம் தேதியில் இருந்து அடுத்தாண்டு ஜனவரி 3 ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என அச்செய்தி மீதான சுவரொட்டியில் காணப்படுகிறது.
சிலாங்கூரிலும் KLலிலும் தற்போது நடைமுறையில் உள்ள நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை தொடர்பில் இவ்வாரம் அறிவிக்கப்படும் என இதற்கு முன் பாதுகாப்பு விவகாரங்களுக்கான மூத்த அமைச்சர் தெரிவித்திருந்தார்.
Covid-19 தொற்றுப் பரவல் அதிகமுள்ள ஆறு பகுதிகளில் இருக்கும் சுமார் 8 லட்சத்து 88 ஆயிரம் அந்நியத் தொழிலாளர்களுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டும்.
அதற்காக சிலாங்கூர், நெகிரி செம்பிலான், KL, பினாங்கு, சபா, Labuan ஆகிய இடங்களுக்கு முதல் கட்டமாக ஒரு லட்சம் விரைவு பரிசோதனைச் சாதனங்கள் அனுப்பி வைக்கப்படவிருப்பதாக பாதுகாப்பு விவகாரங்களுக்கான மூத்த அமைச்சர் தெரிவித்தார்.
அதே சமயம், சுகாதார அமைச்சின் ஒத்துழைப்புடன் மேலும் அதிகமான மருத்துவ பரிசோதனைக் கருவிகள் பெறப்படும் என அவர் சொன்னார்.
Covid-19 பரவலால் சிங்கப்பூரில் சிக்கிக் கொண்டுள்ள மலேசியர்களுக்கு ஜொகூர் மாநில அரசு முதல் கட்டமாக 300 உணவுக் கூடைகளை அனுப்பியிருக்கிறது.
மொத்தம் ஆயிரம் உணவுக் கூடைகள் கட்டங் கட்டமாக விநியோகிக்கப்படவுள்ளன.
Covid-19னுக்கான SOPக்களை மீறியதற்காக நேற்று நாடு முழுவதும் 482 கைது செய்யப்பட்டனர்.
பெரும்பாலானோர் மனமகிழ் மையங்களில் கைது செய்யப்பட்டதாக தற்காப்பு அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது.
சமூக நலத்துறையின் உதவி நிதியை மாதத்திற்கு ஆயிரம் ரிங்கிட்டுக்கு உயர்த்தும் பரிந்துரை, விரைந்து செயல்படுத்தப்படும் என பிரதமர் உத்தரவாதம் வழங்கியிருக்கிறார்.
இன்று அனுசரிக்கப்படும் அனைத்துலக மாற்றுத் திறனாளிகள் தினத்தையொட்டி Tan Sri Muhyiddin Yassin அவ்வாறு சொன்னார்.
சமூக நலத்துறை தற்போது 200றில் இருந்து 300 ரிங்கிட் உதவிநிதியை வழங்கி வருகிறது.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather