Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

i-Sinar திட்டம் குறித்த கூடுதல் தகவல்கள்!

Dec 03, 2020


COVID-19 தாக்கம் காரணமாக வருமானம் பாதிக்கப்பட்டுள்ள EPF சந்தாதாரர்கள் i-Sinar திட்டத்தின் கீழ் பணத்தை மீட்கும் திட்டம் இரு பிரிவுகளாக வகைப் படுத்தப்பட்டுள்ளது!

முதல் பிரிவின் கீழ், தொடர்ந்து இரு மாதங்களுக்கு EPFபில் சந்தா செலுத்தாதவர்கள் அல்லது இவ்வாண்டு மார்ச் மாதத்திற்கு பிறகு ஒட்டுமொத்த சம்பளத்தில் 30 விழுக்காடு அல்லது அதற்கும் மேல் குறைந்துள்ளவர்கள் அத்திட்டத்திற்கு தகுதிப் பெறுகின்றனர்.

சம்பந்தப்பட்டவர்கள் இணையம் வழி டிசம்பர் 21ஆம் தேதி தொடங்கி விண்ணப்பிக்கலாம்.

இவர்களுக்கான தொகை ஜனவரி மாத மத்தியில் வழங்கப்படும்.

அவர்கள் கூடுதல் ஆவணங்கள் எதனையும் சமர்பிக்க தேவையில்லை; EPFபிடம் உள்ள தரவுத் தகவல்கள் அடிப்படையில்  அவர்களது விண்ணப்பங்கள் இயல்பாகவே அங்கீகரிக்கப்படும் என EPF தெரிவித்தது.

2ஆம் பிரிவுக்கான விண்ணப்பம் ஜனவரி 11ஆம் தேதி தொடங்கும்.

இப்பிரிவில், இன்னும் வேலை செய்துக் கொண்டிருப்பவர்கள், ஆனால் 30 விழுக்காடு அல்லது அதற்கும் மேல் வருமானம் குறைந்துள்ளவர்கள் i-Sinar திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

சம்பந்தப்பட்டவர்கள், சம்பளக் குறைப்புக்கான கடிதம், வங்கி கணக்கியல் அறிக்கை, முதலாளியிடம் இருந்து கடிதம் போன்ற இதர   ஆதார ஆவணங்களாக சமர்பிக்க வேண்டும் என EPF கூறியுள்ளது.

Teratai cluster-ரின் கீழ் சமூகப் பரவல்!

சிலாங்கூர் கிள்ளானில் Teratai cluster-ரின் கீழ்தொழிற்சாலை ஊழியர்களையும் தாண்டி, சமூகத்திலும் COVID-19 தொற்று பரவியிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தொழிற்சாலை ஊழியர்கள் அல்லாத 150 பேருக்கு இதுவரை அத்தொற்றுப் பீடித்திருப்பதாக சுகாதார துறை தலைமை இயக்குநர் Tan Sri Dr Noor Hisham Abdullah தெரிவித்தார்.

கடுமையாக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் கீழ் வைக்கப்பட்டுள்ள அப்பகுதிக்கு வெளியே உள்ளவர்களையும்  அவ்வெண்ணிக்கை உட்படுத்தியிருப்பதாக அவர் சொன்னார்.  

நாட்டில் புதிதாக 851 COVID-19 சம்பவங்கள் பதிவான வேளை, ஆக அதிகமாக 249 சம்பவங்கள் சிலாங்கூரை உட்படுத்தியிருக்கின்றன.

அதற்கடுத்து சபாவும், கோலாலம்பூரும் இருக்கின்றன.

நேற்று ஒரு நாளில் 658 பேர் அத்தொற்றில் இருந்து முழுமையாக மீண்டுள்ளனர்.

இன்னும் 10 ஆயிரத்து 686 பேர் அத்தொற்றுக்காக சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

வாடகை ஒத்தி வைப்பு!

வீடமைப்பு மற்றும் ஊராட்சித் துறை அமைச்சின் கீழ் Rent to Own திட்டத்தின் கீழ் உள்ள PPR வீடமைப்பு குடியிருப்பாளர்களுக்கு, மார்ச் 2021 வரை வீட்டு வாடகை  செலுத்துவதை ஒத்தி வைக்க அனுமதி வழங்கப்படுகிறது.

COVID-19 தாக்கம் காரணமாக, வருமானம் இழந்தவர்கள், இலக்கு வைக்கப்பட்டோருக்கான அச்சலுகையைப் பெற, PPR நிர்வாக அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.

MySejahtera செயலி!

MySejahtera செயலிப் பயன்படுத்தப் பாதுகாப்பானதே என, அரசாங்கம் மீண்டும் உத்தரவாதம் அளித்துள்ளது.

தனிநபர் தரவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அச்செயலி இருப்பதால், அதில் உள்ள தகவல்களை பகிர்வது குற்றமாக கருதப்படும் என பாதுகாப்பு விவகாரங்களுக்கான மூத்த அமைச்சர் தெரிவித்துள்ளார்.


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather