Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

சிலாங்கூரில் அதிகமான சம்பவங்கள்!

Dec 02, 2020


நாட்டில் Covid-19 தொடர்பில் புதிதாக 851 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

சிலாங்கூரில் மிக அதிகமாக 249 சம்பவங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

அடுத்து சபாவில் 229 சம்பவங்களும் ஜொகூரில் 102 சம்பவங்களும் கண்டறியப்பட்டுள்ளன.

மேலும் இருவர் அக்கிருமித் தொற்றுக்குப் பலியாகியிருக்கின்றனர்.

அதனை அடுத்து மொத்த மரண எண்ணிக்கை 365 ஆக அதிகரித்துள்ளது.

பினாங்கு, Seberang Perai சிறைச் சாலையில் கடுமையாக்கப்பட்டிருந்த நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை இன்றுடன் முடிவுக்குக் கொண்டு வரப்படுகிறது.

மேலும் சில பகுதிகளில் அமலில் உள்ள EMCOவும் நாளை முடிவுக்கு வருவதாக பாதுகாப்பு விவகாரங்களுக்கான மூத்த அமைச்சர் தெரிவித்தார்.

சபாவில் Tawau தற்காலிக தடுப்பு மையம், Sandakan சிறைச்சாலை, அதன் quarters ஆகியவையும் அவற்றில் அடங்கும்.

இவ்வேளையில், பேரா, ஈப்போவில் Zon B, Zon C, Taman Meru 2cயில் அமலில் இருக்கும் EMCO வரும் வெள்ளிக்கிழமையில் இருந்து டிசம்பர் 10 ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது.  

Covid-19னுக்கான SOPக்களை மீறியதற்காக நேற்று நாடு முழுவதும் 290 பேர் கைது செய்யப்பட்டனர்.

அவர்களில் பெரும்பாலானோர் தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்காதவர்கள்.

ஜொகூர், Sedenak டோல் சாவடியில் பணி புரியும் தங்களது ஊழியர் ஒருவருக்கு Covid-19 பீடித்திருப்பதை PLUS நெடுஞ்சாலை நிர்வாகம் உறுதிப்படுத்தியிருக்கிறது.

வாடிக்கையாளர் சேவைப் பிரிவில் உதவியாளராக வேலை செய்யும் அந்நபர் மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.

இதனிடையே மூவாரில் உள்ள பள்ளிவாசல் ஒன்று பொதுமக்களுக்கு மூடப்பட்டுள்ளது.

அங்குச் சென்ற சமய ஆசிரியர் ஒருவருக்கு Covid-19 உறுதிப்படுத்தப்பட்டுள்ளதே அதற்குக் காரணம்.

பஹாங்கில், குவாந்தான், Pekan மற்றும் Bentongங்கில் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை கடுமையாக்கப்படவிருப்பதாக வெளிவந்துள்ள தகவலை மாநில அரசு மறுத்துள்ளது.

அத்தகவல் உண்மையில்லை என அது தெளிவுபடுத்தியது.

தேசிய பரிவுமிக்க உதவித் திட்டத்தின் கீழ் இரண்டாம் முறையாக வழங்கப்படும் உதவிநிதியின் இரண்டாம் கட்ட விநியோகம் அடுத்தாண்டு ஜனவரியில் தொடங்கும்.

நிதியமைச்சு அதனைத் தெரிவித்திருக்கிறது.

ஏற்கனவே உதவிநிதி பெற்றவர்களைத் தவிர்த்து புதிதாக விண்ணப்பித்தவர்கள், மேல் முறையீடு அங்கீகரிக்கப்பட்டவர்கள் ஆகியோருக்கும் அந்த உதவிநிதி வழங்கப்படும்.

நாட்டின் சில மாநிலங்களில் நாளை வரை கனத்த மழை பெய்யலாம் என வானிலை ஆய்வுத்துறை மஞ்சள் நிற அபாய எச்சரிக்கையை விடுத்துள்ளது. 

பெர்லிஸ், கெடா, பினாங்கு, பேரா, கிளந்தான், திரங்கானு ஆகிய மாநிலங்களில் அந்நிலை காணப்படும். 

அதே வேளை திரங்கானு மற்றும் பஹாங் மாநிலத்தின் சில இடங்களில் நாளை முதல் சனிக்கிழமை வரை அடை மழை பெய்யலாம் என நினைவுறுத்தப்பட்டுள்ளது.


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather