← Back to list
வெங்காய விலையை கண்காணிக்கவும்!
Dec 02, 2020
சிவப்பு வெங்காயத்தின் விலையை கண்காணிக்குமாறு, பினாங்கு மாநில பயனீட்டாளர் சங்கம், உள்நாட்டு வாணிக, பயனீட்டாளர் விவகார அமைச்சை கேட்டுக் கொண்டிருக்கிறது.
இந்தியாவில் வெள்ள நிலவரம் காரணமாக சிவப்பு வெங்காய ஏற்றுமதிக்கு அந்நாடு தடை விதித்துள்ள நிலையில், மலேசியாவில் வெங்காய விலை தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு, கொள்ளை லாபம் ஈட்டும் சூழ்நிலையை தடுக்க அது அவசியம் என அச்சங்கம் கூறியது.
பினாங்கு சந்தைகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், சீனா, நெதர்லாந்து மற்றும் பாகிஸ்தானில் இருந்து இறக்குமதியாகும் சிவப்பு வெங்காயத்தின் விலை கிலோவுக்கு 4 ரிங்கிட்டில் இருந்து ஏழரை ரிங்கிட்டுக்கு உயர்ந்தது.
ஆனால், தற்போது ஒரு கிலோ சிவப்பு வெங்காயத்தின் விலை பத்து ரிங்கிட்டுக்கும் மேல் அதிகரித்திருப்பதாக அச்சங்கம் தெரிவித்தது.
எனவே, இந்த அதிரடி விலையேற்றம் குறித்து அமைச்சு உடனடியாக விசாரிக்க வேண்டும் என அச்சங்கம் கேட்டுக் கொண்டது.
சிலாங்கூரில் 3 நடவடிக்கைகள்!
சிலாங்கூரில் COVID-19 சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வந்தாலும், அங்கு அத்தொற்று இன்னும் கட்டுபாட்டுக்குள்ளேயே இருப்பதாக மாநில Menteri Besar கூறியுள்ளார்.
மாநிலத்தில் பதிவாகும் சம்பவங்கள் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை கடுமையாக்கப்பட்ட பகுதிகளையே அதிகம் உட்படுத்தி இருப்பதாகவும் அவர் சொன்னார்.
நாட்டில் புதிதாகப் பதிவான ஆயிரத்து 472 COVID-19 சம்பவங்களில், 891 சம்பவங்கள் சிலாங்கூரை உட்படுத்தியிருக்கின்றன.
அதில் 778 சம்பவங்கள், கிள்ளான், Kuala Selangor, Kepong ஆகிய இடங்களில் பதிவான Teratai clusterருடன் தொடர்புடையவை.
நேற்று ஒரு நாளில், ஆயிரத்து 552 பேர் அத்தொற்றில் இருந்து முழுமையாக குணமடைந்தனர்.
மிரட்டல் விடுத்த ஆடவர் தேடப்படுகிறார்!
தேசிய காவல் படைத் தலைவர் Tan Sri Abdul Hamid Bador, Bukit Aman தலைமையகம் மற்றும் தற்காப்பு அமைச்சுக்கு எதிராக தாக்குதல் நடத்தப் போவதாக மிரட்டல் விடுத்து மின்னஞ்சல் அனுப்பியுள்ள ஆடவரை Bukit Aman குற்றப் புலனாய்வுத் துறை தேடி வருகிறது.
அவ்வாவர் ஏற்கனவே மாமன்னரை அவமதித்த குற்றத்திற்காக விசாரிக்கப்பட்டவர் என Bukit Aman கூறியது.
அவ்வாடவர் மன நலம் சரியில்லாதவர் என சந்தேகிக்கப்படுவதாக கூறிய காவல் துறை விசாரணைகள் தொடரும் என்றது.
மலேசியாவில் தடை செய்யப்பட்ட தமிழீல விடுதலைப் புலிகள் அமைப்பு 2.0வின் தலைவர் தாம் தான் என கூறி அவ்வாடவர், தனது கைப்பேசி எண்ணையும் குறிப்பிட்டு மின்னஞ்சல் அனுப்பியுள்ளார்.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather