Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

COVID-19: அனைத்து மொழிகளிலும் தகவல்கள் வழங்கப்படும்!

Nov 30, 2020


COVID-19 மீதான SOPகள் முழுமையாக கடைப்பிடிக்கப்படுவதை உறுதிப்படுத்தும் முயற்சியாக, அத்தொற்றுத் தொடர்பான தகவல் பகிர்வுகளை அரசாங்கம் மேம்படுத்தவிருக்கின்றது.

தமிழ் மற்றும் சீன மொழிகள் தவிர்த்து, சபா மற்றும் சரவாக்கில் உள்ளவர்களுக்கு அத்தகவல்கள் முறையாக சென்று சேர்வதை உறுதிச் செய்ய, Iban, Kadazan ஆகிய மொழிகள் பயன்படுத்தப்படும் என, தொடர்பு மற்றும் பல்லூடக அமைச்சர் Datuk Saifuddin Abdullah தெரிவித்தார்.

சிறப்பு கவனம் தேவைப்படுவோர், அந்நிய நாட்டவர்கள் ஆகியோரும் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படுவர் என அமைச்சர் கூறினார்.

KLலில் அதிகமான சம்பவங்கள்!

COVID-19 மற்றும் இதர தொற்று வியாதிகள் பரவலை முறியடிக்க, அந்நிய தொழிலாளர்களுக்கான தங்குமிடங்களில் நிலவும் இட நெருக்கடிப் பிரச்னை விரைந்து கையாளப்பட வேண்டும்!

அவர்களை உட்படுத்திய COVID-19 சம்பவங்கள் அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு, முதலாளிகள் முக்கியப் பங்காற்ற வேண்டியிருப்பதாக சுகாதார துறை தலைமை இயக்குநர் Tan Sri Dr Noor Hisham Abdullah வலியுறுத்தியுள்ளார்.

அந்நிய தொழிலாலர் தங்குமிட வசதிக்கான விவகாரத்தில் அலட்சியம் காட்டும் முதலாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்ற மனித வள அமைச்சின் அறிவிப்பையும் அவர் வரவேற்றுள்ளார்.

நாட்டில் புதிதாக ஆயிரத்து 309 COVID-19 சம்பவங்கள் பதிவான வேளை, ஆக அதிகமாக 493 சம்பவங்கள் கோலாலம்பூரை உட்படுத்தியிருக்கின்றன.

அதற்கடுத்து சபாவில் 290 சம்பபங்களும், சிலாங்கூரில் 238 சம்பவங்களும் அடையாளம் காணப்பட்டுள்ளன.

எனினும், அத்தொற்றில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை மீண்டும் உயர்வாக அதாவது ஆயிரத்து 333-ஆகப் பதிவாகியுள்ளது.

நேற்று 4 புதிய clusterகள் பதிவாகியுள்ளன.

சட்ட நடவடிக்கை பாயும்!

நிர்ணயிக்கப்பட்ட SOPகளை பின்பற்றத் தவறும் நிறுவனங்களின் உரிமங்கள் ரத்துச் செய்யப்படுவதோடு, சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படும் என அனைத்துலக வாணிக மற்றும் தொழிலியல் அமைச்சர் Datuk Seri Mohamed Azmin Ali எச்சரித்துள்ளார்.

சுகாதார அமைச்சுக்கு ஒத்துழைப்பு வழங்க மறுக்கும் நிறுவனங்கள், 1988 நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழ் மூடப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.

நாட்டில் புதிதாக ஆயிரத்து 309 COVID-19 சம்பவங்கள் பதிவான வேளை, ஆக அதிகமாக 493 சம்பவங்கள் கோலாலம்பூரை உட்படுத்தியிருக்கின்றன.

வேலையில்லாத் திண்டாட்டத்திற்கு தீர்வு!

மலேசிய இளையோரிடையே நிலவும் வேலையில்லாத் திண்டாட்டத்திற்கு தீர்வுக் காண ஏதுவாக கடந்த வாரம், தொடர்ந்து 3 நாட்களுக்கு இணையம் வழி, அரசாங்கம் நடத்திய 2020 வேலை வாய்ப்பு கண்காட்சியில், நாடு முழுவதும்  இருந்து 13 ஆயிரத்திற்கும் அதிகமான இளைஞர்கள் பங்கேற்றனர்.

அவர்களில், 65 பேருக்கு உடனடியாக வேலை வாய்ப்புகள் வழங்கப்பட்டன.

மேலும் 320 பேர், 2ஆம் கட்ட நேர்முகத் தேர்வுக்கான அழைப்பைப் பெற்றிருப்பதாக  மனித வள அமைச்சு தெரிவித்தது.

இதனிடையே, இவ்வாண்டு நவம்பர் 20 ஆம் தேதி வரைக்கும், SOCSOவின் வேலை காப்புறுதி திட்டத்தின் கீழ் பதிவான தரவுகளில், வேலை இழந்தவர்களில் 62 விழுக்காட்டுக்கும் அதிகமானோர் இளையோர் என தெரிய வந்துள்ளது.

அதே சமயம், இளையோரை உட்படுத்திய வேலை இல்லாத் திண்டாட்டம்  9 விழுக்காடாக அதிகரித்திருப்பதாக இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் தகவல் காட்டுகின்றது.

எனவே, COVID-19 பெருந்தொற்றுக்கு மத்தியில், இந்த சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு, இளையோரிடையே நிலவும் வேலையில்லா பிரச்னைக்கு தீர்வுக் காண்பதில் தொடர்ந்து முனைப்புக் காட்டப்படும் என அமைச்சு கூறியுள்ளது.


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather