← Back to list
மரடோனாவின் மரணம் விசாரிக்கப்படுகிறது!
Nov 28, 2020
அர்ஜெண்டின கால்பந்து சகாப்தம் Diego Maradonaவின் மரணத்திற்கு, மருத்துவ ரீதியாக கவனக்குறைவு ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து விசாரணைகள் தொடங்கியுள்ளன.
மரடோனாவின் மரணத்தில் தங்களது சில சந்தேகங்கள் எழுந்திருப்பதாக அவரது குடும்பத்தார் கூறியிருப்பதே காரணம்.
மரடோனா இதயத் துடிப்பு முடக்கத்தால் உயிரிழந்த தினத்தன்று, அவசர அழைப்புக் கொடுத்தும் ambulans வாகனம், அரை மணி நேரம் கழித்தே அவரது வீட்டிற்கு வந்ததை, மரடோனாவின் வழக்கறிஞர் சுட்டிக் காட்டியிருக்கின்றார்.
COVID-19: 70% மக்களுக்கு தடுப்பூசி தேவைப்படுகிறது - WHO தகவல்!
உலகம் முழுவதும் COVID-19 பரவலை கட்டுப்படுத்த, 60 முதல் 70 விழுக்காடு வரையிலான மக்களுக்கு தடுப்பூசி போடப்பட வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் WHO கூறுகிறது.
அத்தொற்றின் தீவிரத்தை குறைக்க தடுப்பூசி ஒன்றே இப்போதைக்கு சிறந்த தீர்வு என WHOவின் தடுப்பூசி நிபுணர்கள் கருதுகின்றனர்.
அதே சமயம், அத்தடுப்பூசியை வழங்குவதற்கான அணுகுமுறைகளும் மிக துல்லியமாக இருக்க வேண்டும்.
அதாவது, அத்தொற்று மிக தீவிரமாக பரவும் அல்லது அவற்றை எளிதில் பரப்புவோரை குறி வைத்து அத்தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் பரிந்துரைத்துள்ளனர்.
COVID-19 கோறனி நச்சில் தொற்றுக்கான தடுப்பூசி அடுத்தாண்டு தொடக்கத்தில் விநியோகிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மலேசியர்களுக்கு தடுப்பூசி இலவசம்!
COVID-19 தொற்றுக்கான தடுப்பூசிகள் மலேசியர்களுக்கு இலவசமாக வழங்கப்படும்.
அந்நிய நாட்டவர்களுக்கு, சுகாதார அமைச்சு நிர்ணயிக்கும் கட்டணம் விதிக்கப்படும் என பிரதமர் அறிவித்துள்ளார்.
எனினும், அத்தடுப்பூசியை எடுத்துக் கொள்வதை கட்டாயமாக்க அரசாங்கத்திற்கு எண்ணம் இல்லை என Tan Sri Muhyiddin Yassin கூறியுள்ளார்.
மாறாக, அத்தொற்றுப் பீடிக்கும் ஆபத்து அதிகம் கொண்டவர்கள், எளிதில் நோய் தொற்றக்கூடியவர்கள் ஆகியோருக்கு தன்னார்வ அடிப்படையில் அத்தடுப்பூசிகள் வழங்கப்படும் என அவர் சொன்னார்.
மற்றொரு நிலவரத்தில், சம்பர் ஒன்றாம் தேதி தொடங்கி, அந்நிய நாட்டுத் தொழிலாளர்களுக்கான COVID-19 தொற்றுக்கான கட்டாயப் பரிசோதனை தொடங்கவுள்ளது.
முதல் கட்டப் பரிசோதனையில் ஒரு லட்சம் பேர் உட்படுத்தப்படுவார்கள் என பாதுகாப்பு விவகாரங்களுக்கான மூத்த அமைச்சர் Datuk Seri Ismail Sabri Yakoob கூறியுள்ளார்.
சிலாங்கூர், நெகிரி செம்பிலான், பினாங்கு, சபா, KL, மற்றும் Labuan-னை அது உட்படுத்தியிருக்கும் என்றாரவர்.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather