← Back to list
Teratai cluster: சமூகப் பரவல் இல்லை!
Nov 26, 2020
சிலாங்கூரில், Teratai cluster அடையாளம் காணப்பட்ட பகுதியை சுற்றிலும் உள்ளவர்களை உட்படுத்தி இதுவரை எந்த COVID-19 சம்பவங்களும் அடையாளம் காணப்படவில்லை!
மாறாக, Top Glove தொழிற்சாலை விடுதிகளில் தங்கியுள்ள அந்நிய தொழிலாளர்கள் மற்றும் அவர்களுடன் நெருங்கிய தொடர்புடையவர்களை மட்டுமே அந்த cluster உட்படுத்தியிருப்பதாக சுகாதார துறை தலைமை இயக்குநர் Tan Sri Dr Noor Hisham Abdullah கூறியுள்ளார்.
சிலாங்கூர் மற்றும் கோலாலம்பூரில் தங்கி, அத்தொழிற்சாலையில் வேலை செய்யும், 165 மலேசியர்களும் அதில் அடங்குவர் என்றாரவர்.
அந்த clusterரின் கீழ் இதுவரை ஐயாயிரத்து 700க்கும் அதிகமானோருக்கு COVID-19 சோதனை மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது.
அவற்றில், நான்காயிரத்து 36 பேருக்கு அத்தொற்று உறுதியாகியிருக்கின்றது; கொரோனாப் பரிசோதனைகள் தொடரும் என்றும் அவர் கூறினார்.
இவ்வேளையில், COVID-19 தொற்றுக்கான தனிமைப்படுத்துதலை மேற்கொள்ளும் ஒருவர், 14 நாட்கள் அவகாசத்தை குறைத்துக் கொள்ள சுகாதார அமைச்சு அனுமதிக்கலாம்.
ஆனால், அந்த ஒருவரால், மற்றவர்களுக்கு அத்தொற்றுப் பரவும் ஆபத்து இல்லை என்பது முழுமையாக உறுதியான பின்னரே, அந்த அனுமதி வழங்கப்படும் என Dr Noor Hisham தெரிவித்துள்ளார்.
அதற்கான விண்ணப்பங்கள், கடுமையான மதிப்பீடுகளின் அடிப்படையில் பரிசீலிக்கப்படும் என்றாரவர்.
ஒரே நாளில் அதிகமானோர் குணமடைந்தனர்!
நாட்டில் நேற்று ஒரே நாளில் ஆக அதிகமாக ஈராயிரத்து 348 பேர் COVID-19 தொற்றில் இருந்து முழுமையாக குணமடைந்துள்ளனர்.
புதிதாகப் பதிவான தொள்ளாயிரத்து 70 COVID-19 சம்பவங்களைக் காட்டிலும் இது இரு மடங்கு அதிகம் என்பதோடு, அத்தொற்று நாட்டில் தொடங்கியதில் இருந்து இதுவரை பதிவான மிகப் பெரிய எண்ணிக்கையும் கூட;
நேற்றை எண்ணிக்கையையும் சேர்த்து, நாட்டில் இதுவரை மொத்தமாக 46 ஆயிரத்திற்கும் அதிகமானோர் அப்பெருந்தொற்றில் இருந்து மீண்டுள்ளனர்.
இவ்வேளையில், Sabah, Selangor, Johor மற்றும் Terengganu ஆகிய மாநிலங்களை உட்படுத்தி ஐந்து புதிய clusterகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
பட்ஜெட் 2021: MP-க்கள் ஆதரிப்பார்கள் என்ற நம்பிக்கை உண்டு!
2021 வரவு செலவு அறிக்கை இன்று மக்களவையில் அங்கீகரிக்கப்படும் வாய்ப்புகள் பிரகாசமாகவே இருப்பதாக, அரசியல் ஆய்வாளர் Dr Mohd Tawfik Yaakob கூறுகின்றார்.
அந்த பட்ஜெட் தொடர்பில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் மாற்றுக் கருத்துகள் உள்ள போதிலும், கடைசியில் மக்கள் நலன் கருதி அந்த பட்ஜெட்டை MPகள் ஆதரிப்பார்கள் என தாம் நம்புவதாக, Dr Mohd Tawfik தெரிவித்துள்ளார்.
இவ்வேளையில், 2021 பட்ஜெட்டுக்கான இன்றைய வாக்கெடுப்பில், அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் தங்களது கடமையை பொறுப்புடன் நிறைவேற்றுவார்கள் என சுகாதார துறை தலைமை இயக்குநர் Tan Sri Dr Noor Hisham Abdullah நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
COVID-19 பெருந்தொற்றுக்கு எதிராக நாடு போராடிக் கொண்டிருக்கும் சூழ்நிலை, அதனால் பொருளாதாரத்திற்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, MPகள் செயல்படுவார்கள் என அவர் தனது எதிர்பார்ப்பை வெளியிட்டுள்ளார்.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather