← Back to list
சொந்த ஊர்களுக்கு திரும்ப வேண்டாம்!
Nov 24, 2020
ஆண்டு இறுதியை நெருங்கும் இச்சமயத்தில், நாட்டில் COVID-19 சீற்றமும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது!
எனவே, இப்போதைக்கு சொந்த ஊர்களுக்கு திரும்புவது பற்றி யோசிக்க வேண்டாம் என, சுகாதார அமைச்சு மலேசியர்களை கேட்டுக் கொண்டிருக்கிறது.
ஏற்கனவே, COVID-19 சம்பவங்களில் இருந்து விடுபட்டு பச்சை மண்டலங்களாக இருக்கும் மாநிலங்கள் மற்றும் மாவட்டங்கள், சிவப்பு மண்டலங்களாக மாறி விடாமல் இருப்பதை உறுதிச் செய்ய அது அவசியம் என, சுகாதார துறை தலைமை இயக்குநர் Tan Sri Dr Noor Hisham Abdullah தெரிவித்தார்.
இதன் தொடர்பில் அமைச்சு, வழிகாட்டி முறையை தயார் செய்து வருவதாகவும் அவர் கூறினார்.
ஆகக் கடைசியாக நாட்டில், இதுவரை இல்லாத அளவுக்கு உச்ச எண்ணிக்கையாக, ஒரே நாளில் ஆயிரத்து 884 COVID-19 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
அதில், ஆயிரத்து 200க்கும் அதிகமான சம்பவங்கள் சிலாங்கூரில் அடையாளம் காணப்பட்டவை.
KL, Perak மற்றும் ஜொகூரை உட்படுத்தி, 4 புதிய COVID-19 clusterகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
இவ்வேளையில், நிபந்தனைக்குட்பட்ட மற்றும் கடுமையாக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைக்கான பகுதிகளில் உள்ளவர்கள், COVID-19 பரிசோதனை செய்துக் கொள்ள முன்வருமாறு Dr Noor Hisham கேட்டுக் கொண்டுள்ளார்.
அப்பரிசோதனைகள் இலவசம் தான்; எனவே, அதனை செய்துக் கொள்ள தயங்க வேண்டாம் என்றாரவர்.
மாணவர்களுக்கு அனுமதி!
பெற்றோர்களின் கோரிக்கைக்கு இணங்கி, மலேசிய சபா பல்கலைக்கழகத்தில் பயிலும் வெளிமாநில மாணவர்களை, சொந்த ஊர்களுக்கு திரும்ப UMS அனுமதித்துள்ளது.
எனவே, தீபகற்பம் அல்லது சரவாக்கிற்கு திரும்ப திட்டமிடும் UMS மாணவர்கள், பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்களிடம் இருந்து எழுத்துப்பூர்வமான கடிதம் பெற்று, அதற்கு விண்ணப்பிக்கலாம் என அப்பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
Covid-19: Oxford பல்கலைக்கழக தடுப்பூசி ஆற்றல் மிக்கது!
Oxford பல்கலைக்கழகம் உருவாக்கியுள்ள COVID-19 தடுப்பூசி, அத்தொற்றுப் பரவலை கட்டுப்படுத்துவதில் சிறந்த பலனளித்திருப்பதாக, தொடக்க கட்ட ஆய்வுகள் காட்டுகின்றன.
அடிப்படையில், அத்தடுப்பூசி 70 விழுக்காட்டு ஆற்றலை கொண்டிருப்பதாக கூறப்படும் வேளையில், அதன் பலன் 90 விழுக்காட்டை எட்டலாம் என நிபுணர்கள் கருதுகின்றனர்.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather