← Back to list
சில மாநிலங்களில் CMCO முன்கூட்டியே முடிவுக்கு வரலாம்!
Nov 18, 2020
டிசம்பர் 9ஆம் தேதி வரை அறிவிக்கப்பட்டுள்ள நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை, சில மாநிலங்களில், முன்கூட்டியே அதாவது வரும் சனிக்கிழமை வாக்கில் முடிவுக்கு கொண்டு வரப்படலாம்!
எனினும், அது சுகாதார அமைச்சின் முடிவைப் பொறுத்தது என, பாதுகாப்பு விவகாரங்களுக்கான மூத்த அமைச்சர் Datuk Seri Ismail Sabri Yaakob தெரிவித்துள்ளார்.
மேலும் சில இடங்களில் கடுமையாக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை நீட்டிக்கப்படுகின்றது.
அதில் Seberang Perai சிறை மற்றும் அதன் Kuarters பகுதியும் அடங்கும்; அங்கு இன்று நள்ளிரவு தொடங்கி டிசம்பர் 2ஆம் தேதி வரை அந்த ஆணை அமுலில் இருக்கும்.
Tawau தற்காலிக தடுப்பு மையம், Sandakan சிறை உள்ளிட்ட இடங்களிலும் அந்த ஆணை டிசம்பர் 3ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது.
இதனிடையே, ஈப்போ Taman Meruவில் இரு பகுதிகள் மற்றும் சபா Kota Beludடிலுள்ள Kampung Nahaba, Kampung Tegudon ஆகிய இடங்களிலும், வரும் நவம்பர் 20ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 3ஆம் தேதி வரை நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை கடுமையாக்கப்படுகின்றது.
மற்றொரு நிலவரத்தில், நாட்டில் புதிதாக 660 COVID-19 சம்பவங்கள் பதிவாகியிருக்கின்றன.
ஆக அதிகமாக அதாவது 387 சம்பவங்கள் சபாவில் அடையாளாம் காணப்பட்டுள்ளன.
சிலாங்கூரில், 141 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
இதனிடையே, நாட்டில் இன்று 8 புதிய clusterகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
அத்தொற்றினால் மேலும் 4 பேர் உயிரிழந்தனர்; இதையடுத்து மரண எண்ணிக்கை 322ஆக அதிகரித்துள்ளது.
Batu Sapi-யில் அவசரக் கால நிலை!
நாட்டில் COVID-19 சீற்றத்தை கருத்தில் கொண்டு, சபா Batu Sapiயில் அவசர கால நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
அப்பரிந்துரை தொடர்பில் பிரதமர் அளித்த விளக்கங்கள் அனைத்தும் ஏற்றுக் கொள்ளக்கூடிய வகையில் இருந்ததை அடுத்து, மாமன்னர் அந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
இந்த உத்தரவை அடுத்து, டிசம்பர் மாதம் நடைபெறவிருந்த Batu Sapi இடைத்தேர்தல் நடத்தப்படாது.
அந்த இடைத்தேர்தலுக்கான புதிய தேதி பின்னர் நிர்ணயிக்கப்படும்.
ஏற்கனவே, சபா சட்டமன்றத் தேர்தலை நடத்தி, அதனால் கொரோனாப் பரவல் மோசமடைந்த சூழ்நிலை ஒரு பாடமாக எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் என்பதையும் மாமன்னர் வலியுறுத்தியிருக்கின்றார்.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather