← Back to list
COVID-19: குணமடைவோரின் எண்ணிக்கை அதிகரிக்கிறது!
Nov 17, 2020
நாட்டில் புதிதாக ஆயிரத்து 210 COVID-19 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
ஆக அதிகமாக 499 சம்பவங்கள் சபாவில் பதிவாகியுள்ளன.
சிலாங்கூரில் 271 சம்பவங்களும், KLலில் 245 சம்பவங்களும் பதிவாகியுள்ளன.
அத்தொற்றால் ஐவர் உயிரிழந்த வேளை, மொத்த மரண எண்ணிக்கை 318ஆக உயர்ந்துள்ளது.
இவ்வேளையில், அத்தொற்றில் இருந்து குணமடைந்து வருவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
ஆகக் கடைசியாக, ஆயிரத்து 18 பேர் COVID-19 தொற்றில் இருந்து முழுமையாக மீண்டுள்ளனர்.
இன்னும் ஏறக்குறைய 12 ஆயிரத்து 700க்கும் அதிகமானோர் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
500க்கும் அதிகமானோர் கைது!
மாநிலம் விட்டு மாநிலம் மற்றும் மாவட்டம் விட்டு மாவட்டம் பயணித்த குற்றத்திற்காக ஆகக் கடைசியாக 37 பேர் கைதாகியிருக்கின்றனர்.
நேற்று நாடு முழுவதும்,COVID-19க்கான SOP-களை மீறியதற்காக கைது செய்யப்பட்ட 517 பேரில் அவர்களும் அடங்குவர் என பாதுகாப்பு விவகாரங்களுக்கான மூத்த அமைச்சர் Datuk Seri Ismail Sabri Yakoob இன்று அறிக்கை வழி அதனை தெரிவித்தார்.
அந்த 500க்கும் மேற்பட்டவர்களில், 467 பேருக்கு தண்டம் விதிக்கப்பட்ட நிலையில், 50 பேர் தடுத்து வைக்கப்பட்டனர்.
Top Glove தொழிலாளர்களுக்கு கொரோனாப் பரிசோதனை!
சிலாங்கூர் கிள்ளான் ஜலான் மேருவிலுள்ள Top Glove தொழிற்சாலையின் தங்குமிடத்தில் உள்ள மூவாயிரத்து 500க்கும் அதிகமான தொழிலாளர்களுக்கு நாளை தொடங்கி COVID-19 பரிசோதனை மேற்கொள்ளப்படவிருக்கின்றது.
அங்கு இன்று தொடங்கியுள்ள கடுமையாக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை நவம்பர் 30ஆம் தேதி வரை அமுலில் இருக்கும்.
சமூக நல உதவிகள் கேட்டு அதிகமான அழைப்புகள்!
இவ்வாண்டு ஜனவரி தொடங்கி நவம்பர் 14ஆம் தேதி வரை Talian Kasih சேவை வாயிலாக ஒரு லட்சத்து 59 ஆயிரத்திற்கும் அதிகமான அழைப்புகள் பெறப்பட்டுள்ளன.
அவற்றில், பெரும்பாலான அழைப்புகள், சமூக நல உதவிகள் கேட்டு வந்தவை என மகளிர், குடும்ப, சமூக மேம்பாட்டு அமைச்சு தெரிவித்தது.
மேலும் ஆயிரத்து 800-க்கும் அதிகமான அழைப்புகள், சிறார்கள், குடும்ப வன்முறை, வீடற்றோர், கைவிடப்பட்டவர்கள, முதியவர்கள், மற்றும் மாற்றுத் திறனாளிகள் தொடர்பானவை என்றும் அமைச்சு கூறியது.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather