Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

கெடா, ஜொகூர், திரங்கானுவில் CMCO முடிவுக்குக் கொண்டு வரப்படலாம்!

Nov 17, 2020


கடந்த மாத மத்தியில் இருந்து கிள்ளான் பள்ளத்தாக்கில் அமலில் உள்ள நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை தோல்வி அடையவில்லை. 

கிள்ளான் பள்ளத்தாக்கில் Covid-19 சம்பவங்கள் அதிகமாகப் பதிவாகி  வந்தாலும், அவை கட்டுமானத் தளங்களையே அதிகம் உட்படுத்தியுள்ளதாக சுகாதாரத் தலைமை இயக்குனர் Tan Sri Dr Noor Hisham Abdullah தெரிவித்தார்.

“Looking at the Klang Valley...its not in the community yet, but its basically among the construction site workers. So far the active case detection and screening continues to be done. Hopefully we will contain the infection among the construction workers as soon as possible”

எனவே CMCOவை ஒரு தோல்வியாகக் கருத முடியாது என அவர் கூறினார்.  

KLலில் Damanlela கட்டுமானத் தளத்தில் கண்டறியப்பட்டுள்ள Covid-19 cluster, சுற்று வட்டார மக்களைப் பாதிக்கவில்லை.

இதுவரை மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையில் அக்கட்டுமானத் தளத்தில் உள்ள தொழிலாளர்களுக்கு மட்டுமே அக்கிருமித் தொற்று பரவியிருப்பதாக சுகாதாரத் தலைமை இயக்குனர் கூறினார்.

இந்நாட்டில் வேலை செய்து வரும் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு Covid-19 மருத்துவ பரிசோதனையைக் கட்டாயமாக்க அரசாங்கம் பரிசீலித்து வருகிறது.

கட்டுமானத் தொழிலாளர்கள், பாதுகாவலர்கள் ஆகியோரைத் தவிர்த்து பிற அந்நியத் தொழிலாளர்களுக்கும் அதனை விரிவுபடுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

கெடா, ஜொகூர் மற்றும் திரங்கானுவில் நிலைமை சீரடைந்தால், அம்மாநிலங்களில் அமலில் உள்ள நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை முடிவுக்குக் கொண்டு வரப்படலாம்.

சுகாதாரத் தலைமை இயக்குனர் அதனைக் கோடி காட்டியுள்ளார்.

அம்மாநிலங்களில் CMCO அமலுக்கு வந்ததில் இருந்து Covid-19 சம்பவங்களின் எண்ணிக்கை குறைந்து வருவதைச் சுட்டிக் காட்டி அவர் அவ்வாறு சொன்னார்.

போட்டி என்ற பெயரில் புதிய யுக்தியைப் பயன்படுத்தி பண மோசடி செய்யும் தரப்புகளிடம் கவனமாக இருக்குமாறு பொதுமக்களுக்கு ஆலோசனை கூறப்படுகிறது. 

Bank Negara அவ்வாறு எச்சரித்துள்ளது. 

பங்கேற்பாளர்கள் போட்டி ஏற்பாட்டாளர்களிடம் வங்கி விவரங்களை வழங்கக் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். 

வெற்றியாளர் குலுக்கல் முறையில் தேர்தெடுக்கப்படுவார் என்றும் கூறப்படுவதாக அது கூறியது. 

எனவே தங்களது சின்னம் இருந்தாலும் கூட, சொந்த வங்கி விவரங்களைத் தேவையில்லாமல் யாரிடமும் பகிர வேண்டாம் என Bank Negara ஆலோசனை கூறியது.

KLலில் மளிகைக் கடைகள், சில்லறை வியாபாரக் கடைகள், சீன மருந்துக் கடைகள் ஆகியவற்றில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய மதுபானங்களை விற்கத்த் தடை விதிக்கப்படுகிறது. 

அது அடுத்தாண்டு அக்டோபர் முதல் தேதியில் இருந்து அமலுக்கு வருவதாக DBKL கூறியது. 


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather