Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

கிள்ளானில் உள்ள தொழிற்சாலையில் EMCO!

Nov 16, 2020


சிலாங்கூர் கிள்ளானில் உள்ள TOP GLOVE கையுறை உற்பத்தி தொழிற்சாலையின் தொழிலாளர்கள் தங்குமிடத்தில்,  கடுமையாக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த ஆணை இன்று நள்ளிரவு தொடங்கி நவம்பர் 30ஆம் தேதி வரை அமுலில் இருக்கும் என, பாதுகாப்பு விவகாரங்களுக்கான மூத்த அமைச்சர் Datuk Seri Ismail Sabri Yaakob தெரிவித்தார்.

அந்த ஆணை அத்தொழிற்சாலைக்கு அருகிலுள்ள வீடமைப்புப் பகுதியையும் உட்படுத்தியிருப்பதாக அமைச்சர் சொன்னார்.

இதனிடையே, சபாவில் Telipok மற்றும் Numbak ஆகிய பகுதிகளிலும் கடுமையாக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அறிவிக்கப்பட்டுள்ளது.

 இவ்வேளையில், Kepayan சிறை மற்றும் கோத்தா கினபாலு தற்காலிக தடுப்பு மையத்தில் அமுலில் இருந்த கடுமையாக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை, அட்டவணைப்படி இன்று முடிவுக்கு வந்துள்ளது.

JBயில் உள்ள சுகாதார அமைச்சின் பயிற்சிக் ககழத்தில் அறிவிக்கப்பட்டிருந்த EMCOவும் இன்று முடிவுக்கு கொண்டு வரப்பட்டதாக அமைச்சர் சொன்னார்.

 

புதிதாக 1,103 சம்பவங்கள்!  

நாட்டில் புதிதாக ஆயிரத்து 103 COVID-19 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

ஆக அதிகமாக 540-க்கும் அதிகமான சம்பவங்கள் கிள்ளான் பள்ளத்தாக்கில் பதிவாகியிருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.

அதையடுத்து சபாவில் 288 சம்பவங்களும், பேராக்கில் 11 சம்பவங்களும் பதிவான வேளை நெகிரி செம்பிலானில் 90 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

மேலும் நால்வர் அத்தொற்றால் உயிரிழந்துள்ளனர்; இதையடுத்து மரண எண்ணிக்கை 313ஆக அதிகரித்துள்ளது.

இவ்வேளையில், 821 பேர் அத்தொற்றில் இருந்து முழுமையாக மீண்டுள்ளனர்.

 

அமெரிக்காவில் 11 மில்லியனை தாண்டிய கொரோனா சம்பவங்கள்!

அமெரிக்காவில் COVID-19 சம்பங்களின் மொத்த எண்ணிக்கை 11 மில்லியனை தாண்டியிருக்கின்றது.

இவ்வேளையில், மரண எண்ணிக்கை 2 லட்சத்து 40 ஆயிரத்தை கடந்திருப்பதாக Johns Hopkins பல்கலைக்கழகத்தின் தரவுகள் காட்டுகின்றன.

 

அட்டவணையிடப்பட்ட தண்ணிர் விநியோக தடை !

சிலாங்கூர் Kuala Langat மற்றும் செப்பாங்கில் ஏறக்குறைய 27 இடங்களில், நவம்பர் 24ஆம் தேதி இரவு 9 மணி தொடங்கி அட்டவணையிடப்பட்ட தண்ணீர் விநியோகத் தடை ஏற்படும்.

Jalan Pekan Sepang Lama-கில் உள்ள நீர் விநியோக குழாயில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவிருப்பதே காரணம் என Air Selangor நிறுவனம் தெரிவித்தது.

இதையடுத்து, அதன் மறுநாள் அதாவது நவம்பர் 25ஆம் தேதி மாலை ஐந்தரை மணி வாக்கில் தண்ணீர் விநியோகம் முழுமையாக வழக்க நிலைக்கு திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே, சம்பந்தப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த பயனர்கள் முன்கூட்டியே தண்ணீரை சேகரித்து வைத்துக் கொள்ளுமாறும் Air Selangor ஆலோசனை கூறியிருக்கின்றது. 

மேற்கொண்டு தகவல்களுக்கு www.airselangor.com. அகப்பக்கத்தை நாடலாம்.

 

 


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather