Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

சுகாதார நலப் பணியாளர்களுக்கு மனநல மதிப்பீடு!

Nov 16, 2020


Covid-19 நிலவரத்தைக் கையாள சபாவுக்கு அனுப்பி வைக்கப்படும் சுகாதார நலப் பணியாளர்கள் முதலில் மனநல மதிப்பீட்டுக்கு உட்படுத்தப்படுவர்.

KL மருத்துவமனையின் மன நலப் பிரிவு தலைவர் NSTயிடம் அதனைத் தெரிவித்திருக்கிறார்.

உடல் மற்றும் மனோ ரீதியில் அழுத்தம் தரக்கூடிய சூழ்நிலைகளைச் சமாளிக்க அவர்கள் தயார் நிலையிலும் ஏற்ற வகையிலும் இருப்பது உறுதிச் செய்யப்பட வேண்டியது அவசியமாவதாக அவர் கூறினார்.

மன அழுத்தம், கவலை உள்ளிட்ட அறிகுறிகளைக் கொண்டுள்ள மருத்துவப் பணியாளர்களுக்கு மறு மதிப்பீடு செய்யப்படும் என அவர் மேலும் சொன்னார்.

நாட்டில் அதிகமான Covid-19 சம்பவங்கள் பதிவாகும் மாநிலங்களில் சபாவும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

சிலாங்கூர், செப்பாங், Bandar Baru Salak Tinggiயில் Medan 88 பகுதியில் இருந்து வெளியேறிய குடியிருப்புவாசிகளில் மேலும் ஐவர் திரும்பியிருக்கின்றனர்.

அதனை அடுத்து இதுவரை அப்பகுதிக்குத் திரும்பியுள்ள குடியிருப்புவாசிகளின் எண்ணிக்கை 32 ஆக அதிகரித்துள்ளது.

அவர்கள் அனைவருக்கும் Covid-19 தொற்றுக்கான மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்படவிருக்கிறது.

அப்பகுதியைச் சேர்ந்த சிலருக்கு Covid-19 உறுதிப்படுத்தப்பட்டுள்ளதை அடுத்து அங்கு கடந்த 12 ஆம் தேதியில் இருந்து 25 ஆம் தேதி வரை நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை கடுமையாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

பினாங்கில் மருத்துவமனையொன்றில் இருந்து தப்பிச் சென்ற Covid-19 நோயாளி ஒருவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

நேற்று மாலை தப்பிச் செல்லும் முன் அந்நபர் தமது கையில் இருந்த இளஞ்சிவப்பு கைவளையத்தை அகற்றியதாக நம்பப்படுகிறது.

அந்த 23 வயது ஆடவர் பின்னர் Bayan Lepasசில் கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறிய காவல் துறை மேல் விவரங்களை வெளியிடவில்லை.

பட்டதாரி மாணவர்கள் வேலை தேடும் போது, சம்பளம், போனஸ் தொகை ஆகியவற்றை முக்கியமாகக் கருதுவது பட்டதாரிகள் வேலை சேர்ப்பு நிறுவனமொன்று  மேற்கொண்ட ஆய்வில் தெரிய வந்திருக்கிறது.

தங்களது முதல் வேலைக்கு ஈராயிரத்து 500 ரிங்கிட்டில் இருந்து மூவாயிரத்து 500 ரிங்கிட் வரை தொடக்கச் சம்பளமாக அவர்கள் பெற விரும்புவதும் அந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

அதோடு வேலை மேம்பாட்டு வாய்ப்புகள், இலகுவான வேலை நேரம், நல்ல தலைவர் ஆகியவையும் அவர்கள் சீர்தூக்கிப் பார்க்கும் சில அம்சங்களில் அடங்கும்.

அந்த ஆய்வில் 24 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டதாரிகள் பங்கேற்றனர்.

Genting Highlandsசில் இரு பெண்கள் கட்டிடமொன்றில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாகக் கூறி வெளியான காணொளி உண்மையானது அல்ல.

அச்சம்பவம் உண்மையில் மூன்றாண்டுகளுக்கு முன் வெளிநாட்டில் நிகழ்ந்தது என காவல் துறை தெளிவுபடுத்தியது.


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather