← Back to list
i-Sinar திட்டம் குறித்து புதன்கிழமை அறிவிக்கப்படும்!
Nov 15, 2020
i-Sinar என்ற திட்டத்தின் கீழ் ஊழியர் சேமநிதி வாரியம் EPF முதல் கணக்கில் இருந்து பணத்தை மீட்க அனுமதிக்கப்படுவது தொடர்பான விரிவான தகவல்கள் வரும் புதன்கிழமை அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அத்திட்டத்தை விரிவுப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுவதாக நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
2021 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது போல், இலக்கு வைக்கப்பட்ட 6 லட்சம் பேருக்கு மட்டும் அல்லாமல் இன்னும் அதிகமான EPF சந்தாதாரகளுக்கு வாய்ப்பளிப்பது பற்றி தொடர்ந்து கலந்தாலோசிக்கப்பட்டு வருவதாக அவர் கூறியுள்ளார்.
20 பேர் திரும்பியுள்ளனர் - காவல் துறை தகவல்!
கடுமையாக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமுலில் இருக்கும், செப்பாங் Bandar Baru Salak Tinggi Medan 88 பகுதியில் இருந்து வெளியேறிய 400 பேரில் ஏறக்குறைய 20 பேர் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அவர்களில் சிலர் சபாவைச் சேர்ந்தவர்கள்; எஞ்சியவர்கள், வங்காளதேசம், இந்தியா, இந்தோனிசியா மற்றும் நேப்பாள நாட்டவர்கள் ஆவர்.
கடுமையாக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமுலில் உள்ள அப்பகுதிக்கு இன்னும் திரும்பாமல் இருப்பவர்களை தேடும் முயற்சியை சிலாங்கூர் காவல் துறை தீவிரப்படுத்தவிருக்கின்றது.
இவ்வேளையில், நாட்டில் ஆகக் கடைசியாக ஆயிரத்து 114 COVID-19 சம்பவங்கள் பதிவான வேளை, 803 பேர் அத்தொற்றில் இருந்து குணமடைந்தனர்.
COVID-19: ரோமானியா மருத்துவமனையில் தீ!
Romania-வில் COVID-19 தொற்றுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில், குறைந்தது 10 பேர் உயிரிழந்த வேளை, மேலும் சிலர் கடுமையாக காயமடைந்துள்ளனர்.
அப்பொது மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் முதலில் தீ பரவியது தெரிய வந்துள்ளது.
இதையடுத்து, நோயாளிகளை காப்பற்றப் போராடிய மருத்துவர் ஒருவர் அத்தீயில் உடல் வெந்து, மிகவும் ஆபத்தான நிலையில் இருப்பதாக தகவல் கூறுகிறது.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather