← Back to list
ஊழியர் மறுசீரமைப்புத் திட்டம்!
Nov 13, 2020
ஊழியர் மறுசீரமைப்புத் திட்டத்தின் கீழ், கட்டுமானம், உற்பத்தி, விவசாயம் ஆகிய துறைகளைச் சேர்ந்த முதலாளிமார்கள், முறையான ஆவணம் இல்லாத அந்நிய தொழிலாளர்களை வேலைக்கமர்த்த வழி செய்யும் திட்டத்தை அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது.
அதோடு, தன்னார்வ முறையில் தங்களின் சொந்த நாட்டிற்குச் செல்ல முன்வரும் அந்நிய தொழிலாளர்களை, அவர்களது நாட்டிற்குத் திருப்பி அனுப்பும் திட்டமும் கொண்டு வரப்பட்டுள்ளது.
அவ்விரு திட்டங்களும் வரும் 16ஆம் தேதி முதல் அடுத்தாண்டு ஜூன் 30ஆம் தேதி வரை அமுலில் இருக்கும் என, உள்துறை அமைச்சர் Datuk Seri Hamzah Zainuddin தெரிவித்துள்ளார்.
இத்திட்டங்கள் மலேசியர்களுக்கான வேலை வாய்ப்புக்கு அகச்சுறுத்தலாக இருக்காது என அவர் உத்தரவாதம் அளித்தார்.
அந்நிய தொழிலாளர்களுக்கான வேலை வாய்ப்பு இதன் வழி அதிகரித்தாலும், உள்நாட்டு -வெளிநாட்டு தொழிலாளர்கள் விகிதக் கொள்கையின் அடிப்படையில் மலேசியர்களுக்கே முன்னுரிமை வழங்கப்படும் என்றாரவர்.
______
இன்று காலை ஏழு மணி வரையிலான நிலவரப்படி, கிள்ளான் பள்ளத்தாக்கில் தடைபட்டிருந்த தண்ணீர் விநியோகம் 99 விழுக்காடு சீரடைந்துள்ளது.
ஆயிரத்து 263 இடங்களில் நீர் விநியோகம் வழக்க நிலைக்குத் திரும்பியிருப்பதாக, Air Selangor அறிக்கையொன்றின் வழி தெரிவித்துள்ளது.
எஞ்சிய 16 இடங்களில் நிலைமை சரி செய்யப்பட்டு வருவதாக அது கூறியது.
_______
இதனிடையே கெடா Sikகிலும், Kuala Mudaவிலும் 32 ஆயிரம் கணக்குகளை உட்படுத்திய தண்ணீர் விநியோகத் தடை ஏற்பட்டுள்ளது.
அங்குள்ள ஆற்று நீர் மாசடைந்திருப்பதை அடுத்து, மூன்று நீர் சுத்திகரிப்பு ஆலைகள் மூடப்பட்டிருப்பதால், அத்தடை ஏற்பட்டதாக Darul Aman நீர் நிறுவனம் SADA தெரிவித்துள்ளது.
மாசடைந்த ஆற்றை சுத்தப்படுத்தும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் அப்பணிகள் இன்று காலை முடிவடையும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
_____
நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமுலுக்கு வந்ததிலிருந்து, இணையம் வாயிலாக பொருட்கள் வாங்குவது தொடர்பான புகார்கள் 145.6 விழுக்காடு உயர்ந்துள்ளது!
கடந்த மார்ச் மாதம் முதல் இதுவரை எட்டாயிரத்து இருநூருக்கும் மேற்பட்ட புகார்களை உள்நாட்டு வாணிப, பயனீட்டாளர் விவகார அமைச்சு பெற்றிருப்பதாக Bernama தகவல் கூறுகின்றது.
கடந்தாண்டு இதே காலகட்டத்தில் அதன் எண்ணிக்கை மூவாயிரமாக மட்டுமே இருந்ததாக அமைச்சு தெரிவித்துள்ளது.
ஆக அதிகமாக, இணையம் வாயிலாகப் பணம் செலுத்தியதும், வாங்கிய பொருள் வந்து சேறுவதில்லை என்றும், விளம்பரத்தில் காட்டப்படுவது போல உண்மையில் அப்பொருள் நேரில் இருப்பதில்லை என்றும் தான் புகார்கள் பெறப்பட்டுள்ளது.
_____
Covid-19-னால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில், ஒன்றைக் கோடி சம்பவங்களுடன் இன்னமும் அமெரிக்கா தான் முதலிடத்தில் இருப்பதாக Johns Hopkins பல்கலைக்கழகத்தின் ஆகக் கடைசி தரவு காட்டுகின்றது.
86 லட்சம் Covid-19 சம்பவங்களுடன் இந்தியா இரண்டாவது இடத்திலும், 57 லட்சம் சம்பவங்களுடன் Brazil மூன்றாம் இடத்திலும் உள்ளன.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather