Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

COVID-19 பெருந்தொற்றுக்கு மத்தியில் தீபாவளி!

Nov 14, 2020


COVID-19 சீற்றத்துக்கு மத்தியில், உலகம் முழுவதும் இன்று தீபாவளிப் பண்டிகை மிதமான அளவில் கொண்டாடப்படுகின்றது.

இந்நிலையில், தமிழ்நாடு சேலத்தில் தீபாவளி கொண்டாட்ட நிலவரங்களை நம்முடன் பகிர்ந்துக் கொள்கின்றார், சௌத்திரி பாஸ்கரன்.

சௌத்திரி பாஸ்கரன் (சேலம், தமிழ்நாடு)

"சென்ற ஆண்டு தீபாவளியின் போது என் வீட்டில் சொந்த பந்தங்கள் என ஏறக்குறைய 20 பேர் ஒன்றுக்கூடியிருந்தோம். ஆனால் இவ்வாண்டு வீட்டில் வெறும் மூன்றுப் பேர் மட்டுமே உள்ளோம்; அண்ணன் சிங்கப்பூரில் வேலை செய்வதால் அவரும் இவ்வாண்டு வீட்டுக்கு திரும்ப முடியவில்லை. வருடா வருடம் சொந்தங்களுடன் கூடிய இனிப்பு – பலகாரம் செய்யும் வழக்கமான அனுபவமும் இவ்வாண்டு இல்லை; அம்மா “குளாப் ஜாமுன்” இனிப்புப் பலகாரத்தை மட்டும் செய்தார்; சேலத்தில் பொதுவாகவே அவரவர் வீடுகளில் மிகவும் பாதுகாப்பான முறையில் மக்கள் தீபாவளியை கொண்டாடி வருகின்றனர் என்று தான் சொல்ல வேண்டும்; ஆக மொத்தத்தில் கலகலப்பு இல்லாத ஒரு வித்தியாசமான தீபாவளியாக இவ்வாண்டு கொண்டாட்டம் இருக்கின்றது”

இருந்த போதிலும், வீட்டில் இருந்தே பணிப் புரியும் பலருக்கு இவ்வாண்டு தங்களது குடும்பத்தினருடன் அதிக நேரம் செலவிடக்கூடிய வாய்ப்பு கிடைத்திருப்பதையும் அவர் குறிப்பிட்டார்.

இவரைத் தவிர்த்து, இம்முறை தமிழ்நாடு சென்னையில் தனது தீபாவளி கொண்டாட்டம் குறித்த அனுபவங்களை கூறுகின்றார், மலேசியாவைச் சேர்ந்த அனுராதா சுப்ரமணியம்.

அனுராதா சுப்ரமணியம் தன் குடும்பத்துடன்

“சென்னையில் தீபாவளி சற்று களைக் கட்டியிருக்கின்றது என்றே கூறலாம்; நான் இதற்கு முன் 5 அல்லது 6 தீபாவளியை சென்னையில் கொண்டாடியுள்ளேன்; முந்தைய ஆண்டுகளைப் போல் மிகச் சிறப்பாக இல்லை என்றாலும், மக்கள் தங்களால் ஆன அளவுக்கு இக்கொண்டாட்டத்தை உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர். மற்றவர்களுக்கு வீடுகளுக்குச் செல்ல முடியாத சூழ்நிலையில், இனிப்பு மற்றும் பலகாரங்களை ‘பார்சல்’ வழி உறவினர்களுக்கு அனுப்பும் வேலையில் சென்னைவாசிகள் பரபரப்பாக இறங்கியுள்ளனர்; அவர்களது தேவையைப் பூர்த்திச் செய்ய பொருட்கள் அனுப்பும் சேவை நிறுவனங்களும் (home delivery service) தங்களது சேவையை விரிவுப்படுத்தியுள்ளனர்; பட்டாசு கடைகள் அதிகமாக காணப்படுகின்றது; ஆனால் காற்று மற்றும் ஒலி மாசுபாட்டைக் கருத்தில் கொண்டு வெறும் 2 மணி நேரங்களுக்கு மட்டுமே பட்டாசுகள் வெடிக்க அரசாங்கம் அனுமதி வழங்கியிருக்கின்றது. இதனால் பட்டாசு விற்பனை அவ்வளவாக சூடிப் பிடிக்கவில்லை; இந்த கொரோனாப் பரவல் காலக்கட்டத்தில், மக்களும் அத்தியாவசிய தேவை அறிந்து தங்களது செலவுகளை மேற்கொள்வார்கள் என நான் நம்புகின்றேன்”

இவ்வேளையில், நம் நாட்டில் புதிதாக திருமணம் புரிந்த பல ஜோடிகளுக்கு இவ்வாண்டுக்கான தலைத் தீபாவளி கொண்டாட்டம் சற்று வித்தியாசமான அனுபவத்தை கொடுத்துள்ளது என்றே கூறலாம்.

அவர்களில் ஒருவர் ஜொகூர் பாருவைச் சேர்ந்த ஈஸ்வரி ரவீந்திரன்.

  தலைத் தீபாவளி கொண்டாடும் ஈஸ்வரி ரவீந்திரன்

மருத்துவ முன்வரிசைப் பணியாளருமான இவர் தனது அனுபவங்களை பகிர்கின்றார். 

“இந்த வருடம் எங்களுக்கு தலைத் தீபாவளி; ஆனால், கணவர் என்னுடன் இங்கு இல்லை; அவர் பணி நிமித்தமாக பல மாதங்களாக சிங்கப்பூரிலேயே இருக்கின்றார்; இதனால் தலைத் தீபாவளி கொண்டாட்டம் சற்று மாறுபட்ட அனுபவமாக மாறியிருக்கின்றது; கணவரை நேரில் காண வேண்டும் என்ற ஆசை உள்ளது தான்; ஆனால், தாதி என்ற முறையில் COVID-19-க்கான SOP-களை பின்பற்ற வேண்டிய அவசியம் எனக்கு புரிகின்றது; மருத்துவமனையில் முன்வரிசைப் பணிகளில் அதிகம் ஈடுபட்டு வருவதால், நேரம் கடப்பது அவ்வளவாக தெரியவில்லை; என்ன நடந்தாலும், உறவுகள் தூரத்தில் இருந்தாலும் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டியதை உறுதிப்படுத்துவது தான் இப்போதைக்கு முக்கியம்”

மேலும் சில மருத்துவ முன்வரிசைப் பணியாளர்களின் தீபாவளி அனுபவங்கள்...

மலாக்காவைச் சேர்ந்த தீபா சுப்ரமணியம்....

"நான் மலாக்காவில் உள்ள மருத்துவமனையில் பணிப் புரிகின்றேன்; என் கணவர் சிங்கப்பூரில் உள்ள மருத்துவமனையில் பணிப் புரிகின்றார்; ஆனால் அவர் இவ்வாண்டு வீட்டிற்கு வர முடியாத நிலை; என்றாலும், முன்வரிசைப் பணியாளர்கள் என்ற முறையில், எங்கள் கடமையும் சூழ்நிலையும் என்னவென்பதை நாங்கள் இருவருமே அறிந்துள்ளோம்; ஒவ்வோர் ஆண்டும் தீபாவளிக்கு நாங்கள் நண்பர்களை அழைத்து விருந்து வைப்பது வழக்கம்; ஆனால் இவ்வாண்டு அவ்வாறு செய்ய  முடியாத சூழ்நிலைக் காரணமாக எனது சக நண்பர்களுக்கு பொட்டலமிடப்பட்ட உணவுகளை வேலையிடத்திலேயே வழங்குவதற்கான ஏற்பாடுகளை செய்து விட்டேன்; இதுவே எனக்கு மிகப் பெரிய திருப்தியாக இருக்கின்றது”

தன் கணவருடன் தீபா

 

இவ்வேளையில், DR விஜயசாமுண்டீஸ்வரி கருப்புசாமி கூறுகையில்,  

DR விஜயசாமுண்டீஸ்வரி தனது கணவர் மற்றும் பிள்ளைகளுடன்

“இந்த ஆறு வருட திருமண வாழ்க்கையில், சிங்கப்பூரில் வேலை செய்யும் கணவரைப் பிரிந்து நான் இரு பிள்ளைகளுடன் தீபாவளி கொண்டாடுவது இதுவே முதன் முறை; வீட்டையும் பார்த்துக் கொண்டு, பிள்ளைகளையும் கவனித்துக் கொண்டு, வேலைக்குச் சென்று வருவது மிகப் பெரிய சவாலாக இருக்கின்றது; தனித்து வாழும் தாய்மார்களின் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை எனக்கு இந்த COVID-19 பெருந்தொற்றின் சீற்றம் உணர்த்தியிருக்கின்றது என்று தான் கூற வேண்டும்; மக்கள் அனைவரும் இந்த தீபாவளியை சிக்கனமாகவும், சிறப்பாகவும் கொண்டாடுவார்கள் என நான் எதிர்பார்க்கின்றேன்; அனைவருக்கு தீபாவளி வாழ்த்துகள்”

இதனிடையே, பள்ளிகளில் பொதுவாகவே மாணவர்களுக்கு ஒரு மாதத்திற்கு  முன்பே தீபாவளி கொண்டாட்டம் களைக் கட்டிவிடும். 

ஆனால், இவ்வாண்டு அந்த சுவாரஸ்யத்தை அனுபவிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டிருப்பதாக கூறுகின்றார், நெகிரி செம்பிலான் சிரம்பானைச் சேர்ந்த ஆசிரிய நிரஞ்சனா கிருஷ்ணன்.

ஆசிரியர் நிரஞ்சனா தனது மாணவர்களுடன்

“பொதுவாக, ஒரு மாதத்திற்கு முன்பே பள்ளியில் மாணவர்கள் வீட்டில் நடக்கு தீபாவளி ஏற்பாடுகள் குறித்து பேசத் தொடங்கி விடுவார்கள்; அவர்கள் மனதில் உற்சாகமும், சந்தோஷமும் நிறைந்துக் காணப்படும்; நன்னெறிக் கல்வி, கலையியல் கல்வி ஆகியப் பாடங்கள் வாயிலாக தீபாவாளியின் சிறப்பு, பண்டிகையை எப்படி பாதுகாப்பாக கொண்டாடுவது போன்ற அம்சங்கள் மாணவர்களுக்கு கற்றுத் தரப்படும்; தீபாவளி முடிந்து பள்ளிக்கு திரும்பியதும் மாணவர்களும் ஆசிரியர்களும் தத்தம் வீடுகளில் இருந்து கொண்டு வந்த பலகாரங்களை சேர்ந்து உண்டு, தங்களது தீபாவளி குதூகலத்தை பகிர்ந்துக் கொள்வார்கள்; ஆசிரியர்களுக்கும் தீபாவளி விருந்தோம்பல் நடைபெறும்; ஆனால் இவ்வாண்டு இது எதுவுமே இல்லை”

இவ்வேளையில், இவ்வாண்டு தீபாவளி குடும்பத்தினருடன் அதிக நேரம் செலவிட வாய்ப்பை ஏற்படுத்தி தந்திருப்பதாக கூறுகின்றார், கடன் நிர்வகிப்பு மற்றும் ஆலோசகச் சேவை நிறுவனம் AKPK நிர்வாகி நிர்மலா சுப்ரமணியம்.

நிர்மலா சுப்ரமணியம்

“இவ்வாண்டு நாம் கொண்டாடும் தீபாவளி மிதமானது என்றாலும், அதனை மிகவும் அர்த்தம் பொதிந்ததாக நாம் மாற்றிக் கொள்ள முயற்சிக்கலாம்; குடும்பத்தில் உள்ளவர்களிடம் நெருங்கிப் பழக, அதிக நேரம் பேச இந்த தீபாவளி நமக்கு வாய்ப்பளிக்கின்றது. எனவே நேரத்தை பொன் போல் பயன்படுத்த நாம் முயற்சிப்பது சிறப்பாக இருக்கும்”

ஆனால், அந்த வாய்ப்பு பலருக்கும் இவ்வாண்டு கிடைக்கவில்லை.

அவர்களில் குறிப்பாக பணி நிமித்தமாக வெளியூர்களில் சிக்கிக் கொண்டு இன்னும் நாடு திரும்ப முடியாக சூழ்நிலையில் இருப்போரும் அடங்குவர்.

அவர்களில் ஒருவர் சரவாக்கில் ஆசிரியராகப் பணிப் புரியும் பினாங்கு Bukit Mertajam-மைச் சேர்ந்த மது ரெங்கசாமி.

ஆசிரியர் மது ரெங்கசாமி & குடும்பத்தினர்

“CMCO காரணமாக இந்த ஆண்டு என்னால் வீடு திரும்ப முடியவில்லை; ஆகக் கடைசியாக ஐந்து மாதங்களுக்கு முன் சென்றிருந்தேன். இந்த தீபாவளிக்காக தான் காத்திருந்தேன்; ஆனால் வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால், இவ்வாண்டு தீபாவளில் கைப்பேசி அழைப்பை மட்டும் நம்பியே நடைபெறும் சூழ்ல் ஏற்பட்டுள்ளது; இது மிகவும் வருத்தமான ஒன்று தான்; ஆனால், இந்த நிலை விரைவில் மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள்!”

இதனிடையே, சிங்கப்பூரில் பணிப் புரியும் நெகிரி செம்பிலான் போர்ட்டிக்சனைச் சேர்ந்த கங்காதரன் கூறுகையில்...

கங்காதரன் தன் மனைவியுடன்

“நான் சிங்கப்பூரில் என் மனைவியுடன் தான் இருக்கின்றேன்; ஆனால், நாங்கள் இருவரும் தனித் தனி வீடுகளில் வசிக்கின்றோம். எப்போதும் தீபாவளி என்றால் குடும்பத்துடன் சேர்ந்து ஒன்றாக முறுக்கு செய்வது தான் எங்கல் குடும்பத்தின் சிறப்பு; ஆனால் அது முடியாத சூழ்நிலையில், நானும் மனைவியும், சில நண்பர்களுடன் சேர்ந்து நாங்கள் வசிக்கும் வீடுகளிலேயே முறுக்கு செய்து மகிழ்ந்தோம். என்ன தான் சூழ்நிலையானாலும் தூரத்தில் உள்ள குடும்பங்களும், உறவுகளும், எந்த பாதிப்பும் இன்றி, பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதே என எதிர்பார்ப்பு”

சென்ற ஆண்டு எடுத்த புகைப்படம்...

இவ்வேளையில், ஐந்து மாதங்களுக்கு பிறகு சிங்கப்பூரில் இருந்து ஜொகூர் பாருவில் உள்ள தனது வீட்டிற்கு திரும்பிய சசி பேசுகையில்...

சசி தனது மனைவி மற்றும் பிள்ளைகளுடன்

“நான் தினமும் சிங்கப்பூருக்கு வேலைக்குச் சென்று திரும்புவேன்; ஆனால், கொரோனாப் பரவல் காரணமாக கடந்த சில மாதங்களாக நான் வீட்டிற்கு திரும்ப முடியாத நிலை; ஆனால் தற்போது கொரோனாப் பரிசோதனை செய்து விட்டு, JB-யில் உள்ள தங்கும் விடுதியில் 14 நாட்கள் தனிமைப்படுத்தலை முடித்து கடந்த 11 ஆம் தேதி நான் வீட்டிற்கு திரும்பினேன்" என்றார்.

அன்பர்கள் அனைவருக்கும் ராகா செய்தியின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!சந்திப்பு & தொகுப்பு: சவுரியம்மாள் ராயப்பன்

 


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather