← Back to list
தீபாவளி நடமாட்டத்தை குறைத்துக் கொள்ளுங்கள்!
Nov 10, 2020
தீபாவளியை முன்னிட்டு கடைகள் மற்றும் பேரங்காடிகளுக்கு கூட்டம் கூட்டமாகச் சென்றுப் பொருட்கள் வாங்குவதை தவிர்த்துக் கொள்ளுமாறு சுகாதார துறை தலைமை இயக்குநர் Tan Sri Dr Noor Hisham மலேசியர்களை அறிவுறுத்தியிருக்கின்றார்.
“Kita menasihatkan kepada mereka yang merayakan Deepavali supaya tidak adakan panic buying. Dalam kesesakan dalam supermarket tersebut, boleh berlaku keboleh-jangkitan kalua ada kes positif, contohnya”
நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமுலில் இருந்தாலும், கடைகள் வழக்கம் போல் தான் செயல்படுகின்றன;
எனவே, பெருநாளுக்காக பதற்றத்தில் பொருட்களை வாங்கி குவிக்க வேண்டிய சூழ்நிலை இருப்பதாக தமக்கு தோன்றவில்லை என்றாரவர்.
தீபகற்பத்தின் பெரும்பாலான பகுதிகளில் CMCO அறிவிப்பை அடுத்து, கிள்ளான் பள்ளத்தாக்கில் தீபாவளிக்கான பொருட்களை வாங்க மக்கள் பெருமளவில் வெளியில் நடமாடத் தொடங்கியிருப்பதை அவர் சுட்டிக் காட்டினார்.
இவ்வேளையில், தீபாவளியின் போது பொது மக்கள் COVID-19 SOP-களை முறையாக பின்பற்றுகின்றனரா என்பதை உறுதிப்படுத்த வீடமைப்புப் பகுதிகளில் காவல் துறை ரோந்துப் பணிகளை மேற்கொள்ளும்!
அதிகப்பட்சம் 20 பேர் வரை ஒன்றுக்கூடலாம் என்ற விதிமுறையை மீறும் தரப்பினர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என பாதுகாப்பு விவகாரங்களுக்கான மூத்த அமைச்சர் Datuk Seri Ismail Sabri Yaakob எச்சரித்துள்ளார்.
SOP-களைப் பின்பற்றுங்கள்!
COVID-19 SOP-களை தொடர்ந்து பின்பற்றி அலுத்துப் போவது போல் இருந்தாலும், அதில் இருந்து பின்வாங்க வேண்டாம் என சுகாதார துறை தலைமை இயக்குநர் Tan Sri Dr Noor Hisham Abdullah மலேசியர்களை கேட்டுக் கொண்டுள்ளார்.
“The virus is already in the community. So we have to take all the precautions. There will be no going back to normal. That’s why this is the ‘new norm’. So we need to live with virus, and adapt to this new environment to survive and prevent from infection”
மேலும் பேசிய அவர் அக்கோறனி நச்சில் தொற்றைக் கட்டுப்படுத்தும் பட்சத்தில், டிசம்பர் மாதம் வரை பெரும்பாலான மாநிலங்களில் விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை CMCO-வை முன்கூட்டியே முடிவுக்கு கொண்டு வரலாம் என்றும் கூறினார்.
“Although the projection for CMCO is four weeks, if we manage to flatten the curve, we can go back to RMCO earlier. That means you still have to comply to SOP, but we allow normal activities to resume at that point of time”
நாட்டில் நேற்று அத்தொற்றுக்கு ஆளானவர்களை காட்டிலும், அதில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக பதிவாகியது.
புதிதாக 972 பேர் அத்தொற்றால் பாதிக்கப்பட்ட வேளை, ஆயிரத்து 345 பேர் குணமடைந்தனர்.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather