Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

CMCO அமுலில் உள்ள இடங்களில் திருமணத்திற்கு அனுமதி

Nov 09, 2020


நிபந்தனைக்குட்பட்ட நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணை அமுலில் உள்ள பகுதிகளிலுள்ள கோவில்களில் திருமணம் நடத்த அனுமதி வழங்கப்படுகிறது.

எனினும் அந்நிகழ்வில் அர்சகர் மாப்பிள்ளை, பெண் வீட்டார், கோவில் நிர்வாக உறுப்பினர்கள், மற்றும் வாத்தியக்காரர்கள் உட்பட அதிக பட்சமாக 30 பேர் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும் என்பதோடு, இதர தர செயல்பாட்டு நடைமுறை SOPக்கள் பின்பற்றப்பட வேண்டியது அவசியம் என மலேசிய இந்து சங்கம் தெரிவித்துள்ளது.

எனினும் CMCO மற்றும் கடுமையாக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமுலில் உள்ள பகுதிகளைச் சேர்ந்த கோவில்களில், பெரிய அளவிலான விழாக்களுக்கு அனுமதி இல்லை.

கந்த சஷ்டி விரதம், கார்த்திகை தீபம் போன்ற சிறப்பு நாட்கள் மிதமான அளவில் கொண்டாடப்பட வேண்டும் என அச்சங்கம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின் வாயிலாகத் தெரிவித்தது.

______

நாட்டில் இன்று புதிய Covid-19 சம்பவங்களைக் காட்டிலும் அத்தொற்றிலிருந்து மீண்டு வந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாகப் பதிவாகியுள்ளது!

தொல்லாயிரத்து 72 புதிய சம்பவங்கள் பதிவான வேளை, ஆயிரத்து முன்னூருக்கும் அதிகமானோர் அத்தொற்றிலிருந்து மீண்டும் வந்துள்ளனர்.

சபாவில் ஆக அதிகமாக 370 புதிய சம்பவங்கள் பதிவாகியிருக்கின்றன.

புதிதாக 8 மரணங்களும் பதிவாகியுள்ளன

____

ஜொகூரில் நேற்று நள்ளிரவு தொடங்கி சாலை தடுப்பு நடவடிக்கைகளைக் காவல் துறை தீவிரப்படுத்தியுள்ளது.

அம்மாநிலத்தில் பெரும்பாலான மக்கள் நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமுலுக்கு வந்திருப்பதை நன்குணர்ந்து,  தங்களின் வெளி நடமாட்டத்தைக் குறைத்துக் கொண்டுள்ளதைக் காண முடிவதாகக் காவல் துறை தெரிவித்தது.

Perlis, Pahang, Kelantan-னைத் தவிர்த்து தீபகற்ப மலேசியாவைச் சேர்ந்த எல்லா மாநிலங்களிலும் இன்று முதல் CMCO அமுலுக்கு வந்துள்ள நிலையில், ஜொகூரில் நடத்தப்பட்ட சாலை தடுப்புச் சோதனைகள் குறித்து அத்துறை அவ்வாறு கூறியது.

_______

இதனிடையே கிளாந்தானுக்குள் நுழையும் இதர மாநில மக்கள், முறையான காரணம் அல்லது அனுமதி கடிதத்தைக் கொண்டிருக்க வேண்டும்!

இல்லையெனில் மாநிலே எல்லையோடு அவர்கள் திருப்பி அனுப்பப்படுவர் என அம்மாநில காவல் துறை நினைவுறுத்தியிருக்கின்றது.

அம்மாநிலத்தில் Covid-19 தொற்று பரவலைத் தடுக்கும் நடவடிக்கை அது என அதன் தலைவர் தெரிவித்தார்.

_______

நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை மீறியதற்காக நேற்று மட்டும் நாடு முழுவதும் 717 பேர் கைதாகியுள்ளனர்.

அவர்களில் 704 பேருக்கு தண்டம் விதிக்கப்பட்டு, 11 பேர் தடுத்து வைக்கப்பட்டு, இருவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather