← Back to list
EPF விரைவில் அறிவிக்கும்!
Nov 09, 2020
ஊழியர் சேமநிதி வாரியம் EPF முதல் கணக்கில் இருந்து பணம் மீட்பது தொடர்பான விதிமுறைகள் மற்றும் அணுகுமுறைகள் குறித்த விரிவான தகவலை அவ்வாரியம் விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதன் தொடர்பில் EPF-பிடம் தாம் கலந்தாலோசித்திருப்பதாக நிதி அமைச்சர் Tengku Datuk Seri Zafrul Tengku Abdul Aziz, தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்தார்.
மேலும் அதிகமான சந்தாதாரர்களுக்கு பணத்தை மீட்க வாய்ப்பளிக்குமாறு தாம் அவ்வாரியத்தை அறிவுறுத்தியிருப்பதாகவும் அவர் சொன்னார்.
COVID-19 சீற்றம் ஏற்படுத்தியுள்ள வாழ்வியல் நெருக்கடிகளில் இருந்து மக்கள் மீண்டு வர அந்த ஆலோசனை உதவும் என்றாரவர்.
MTUC கோரிக்கை!
2021 பட்ஜெட் தொடர்பான சில பரிந்துரைகளை பரிசீலிக்குமாறு, மலேசிய தொழிற்சங்க காங்கிரஸ் MTUC அரசாங்கத்தை வலியுறுத்தியிருக்கின்றது.
அதில் ஒன்று, B40 மற்றும் M40 தரப்பினருக்கு, வங்கிக் கடன்களுக்கான moratorium சலுகையை இன்னும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கும் பரிந்துரையாகும் என, MTUC பொதுச் செயலாளர் Kamarul Baharin Mansor கூறியுள்ளார்.
தேர்வுகள் ஒத்தி வைப்பு குறித்து தகவல்கள் விரைவில் வெளியிடப்படும்!
கல்வி அமைச்சின் பொதுத் தேர்வுகள் ஒத்தி வைப்பு குறித்த விரிவான தகவல்கள் கூடிய விரைவில் அறிவிக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
அது 5 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்களை உட்படுத்திய SPM, SVM, STPM ஆகிய தேர்வுகள் தொடர்பானது என கல்வி அமைச்சர் கல்வி அமைச்சர் Mohd Radzi Md Jidin கூறியுள்ளார்.
நாட்டில் COVID-19 சீற்றம் கருதி, பள்ளிகள் மற்றும் vocational கல்லூரிகள் அனைத்தும், இன்று தொடங்கி, இவ்வாண்டுக்கான பள்ளித் தவணையின் கடைசி நாளான டிசம்பர் 17ஆம் தேதி வரை மூடப்படுவதாக அமைச்சு முன்னதாக அறிவித்தது.
கல்வி அமைச்சின் கீழ், ஏறக்குறைய 74 விழுக்காட்டு பள்ளிகள் நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமுலில் உள்ள பகுதிகளில் இருப்பதே அதற்கு காரணம் என்றும் அமைச்சு கூறியது.
பள்ளிகளை மூடும் அம்முடிவு, Kelantan, Pahang, Perlis, Sarawak ஆகிய மாநிலங்களில் உள்ள பள்ளிகளையும் உட்படுத்தியிருக்கின்றது.
அலட்சியம் வேண்டாம்!
நாடு COVID-19 பெருந்தொற்றுக்கு எதிராக இன்னமும் போராடிக் கொண்டிருக்கும் நிலையில், இன்னும் பலர் அரசாங்கம் நிர்ணயித்துள்ள SOP-களை அலட்சியப்படுத்தி வருவதாக, பாதுகாப்பு விவகாரங்களுக்கான மூத்த அமைச்சர் Datuk Seri Ismail Yaakob கூறியுள்ளார்.
நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை மீறியது தொடர்பில், நேற்று மட்டும் 519 கைதாகியிருப்பதே அதற்கு ஆதாரம் என்றாரவர்.
தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்காதது, சுவாசக் கவசம் அணியாதது, தங்களது வணிக வளாகங்களில் வாடிக்கையாளர்களின் வருகையைப் பதிவுச் செய்யத் தவறியது உள்ளிட்ட குற்றங்களும் அதிலடங்கும் என்றாரவர்.
நாட்டில் COVID-19 சம்பவங்கள் மீண்டும் மூன்று இலக்கத்திற்கு குறைந்துள்ளன.
ஆகக் கடைசியாக 852 புதிய சம்பவங்கள் பதிவான வேளை, அவற்றில் 524 சம்பவங்கள் சபாவை உட்படுத்தியிருக்கின்றன.
இன்னும் 11 ஆயிரத்து 689 பேர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather