← Back to list
பள்ளிகள் மூடப்படுகின்றன!
Nov 08, 2020
நாடு முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளும் நாளை தொடங்கி இவ்வாண்டுக்கான பள்ளித் தவணை முடிவடையும் வரை மூடப்படுகின்றன.
A குழுவில் உள்ள ஜொகூர், கெடா, கிளந்தான், திரங்கானு மாநிலங்களில் டிசம்பர் 17 ஆம் தேதி வரையிலும் B குழுவில் உள்ள சிலாங்கூர், KL, Putrajaya, மலாக்கா, நெகிரி செம்பிலான், பஹாங், பேரா, பெர்லிஸ், பினாங்கு, சபா, சரவாக், Labuanனில் டிசம்பர் 18 ஆம் தேதி வரையிலும் பள்ளிகள் மூடப்படும்.
சில மாநிலங்களில் நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை நாளை முதல் டிசம்பர் 6 ஆம் தேதி வரை அமலுக்கு வருவதையொட்டி அம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு விளக்கியது.
அதோடு, CMCO அமலில் இல்லாத பஹாங், கிளந்தான், பெர்லிஸ் ஆகிய மாநிலங்களிலும் பள்ளிகள் மூடப்படுவதை அமைச்சு சுட்டிக் காட்டியது.
அக்காலக் கட்டத்தில் vokasional கல்லூரிகளும் மூடப்படும்.
பள்ளிகள் மூடப்பட்டிருக்கும் காலக் கட்டத்தில் கற்றல்-கற்பித்தல் நடவடிக்கைகள் வீட்டில் இருந்தே மேற்கொள்ளப்பட வேண்டும் என அமைச்சு மேலும் கூறியது.
SPM, SVM, STAM தேர்வுகள் அடுத்தாண்டு பிப்ரவரி 22 ஆம் தேதி தொடங்கும்.
STPM தேர்வு மார்ச் 8 ஆம் தேதி தொடங்கும்.
2021 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட 3 பில்லியன் ரிங்கிட் ஒதுக்கிட்டைப் பயன்படுத்தி அரசாங்கம் Covid-19 தடுப்பூசிக்கு முன் பதிவு செய்யவிருக்கிறது.
அறிவியல், தொழில்நுட்ப, புத்தாக்க அமைச்சு அதனைத் தெரிவித்தது.
வெளிநாட்டில் தயாரிக்கப்பட்டு வரும் அந்த தடுப்பூசி, சுகாதார அமைச்சின் அங்கீகாரத்துடன் அடுத்தாண்டின் முதல் மூன்று மாதங்களுக்குள் பெறப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சபாவில் Covid-19 சம்பவங்கள் அதிகம் பதிவாவதைத் தொடர்ந்து அம்மாநிலத்தில் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையைக் கடுமையாக்குவது
குறித்து தேசிய பாதுகாப்பு மன்றம் நாளை விவாதிக்கவிருக்கிறது.
அதில் சுகாதார அமைச்சு மற்றும் அனைத்துலக வாணிக, தொழில்துறை அமைச்சின் ஆலோசனையும் பரிந்துரையும் கவனத்தில் கொள்ளப்படும் என பாதுகாப்பு விவகாரங்களுக்கான மூத்த அமைச்சர் தெரிவித்தார்.
Menara Hasil Cyberjayaவில் உள்ள உள்நாட்டு வருவாய் வாரியத்தின் தலைமை அலுவலகம் நாளை முதல் 3 நாட்களுக்கு மூடப்படுகிறது.
கிருமி நாசினி தெளித்து துப்புரவு செய்ய ஏதுவாக அவ்வாறு செய்யப்படுவதாக LHDN விளக்கியது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் Joe Biden வெற்றி பெற்றுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுள்ளது.
அதன் வழி Joe Biden அமெரிக்காவின் 46 ஆவது அதிபராகிறார்.
அதே சமயம் இந்திய வம்சாளியைச் சேர்ந்த Kamala Harris துணை அதிபராகிறார்.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather